எஞ்சிய வாழ்க்கை இனி உங்களுக்காகத்தான்: மதுரை பொதுக் கூட்டத்தில் கமல் உருக்கம் Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
எஞ்சிய வாழ்க்கை இனி உங்களுக்காகத்தான்
மதுரை பொதுக் கூட்டத்தில் கமல் உருக்கம்

மதுரை:"என்னுடைய எஞ்சிய வாழ்க்கை இனி உங்களுக்காக (மக்கள்) தான் இருக்கும். இறுதி மூச்சு உள்ள வரை மக்கள் பக்கம் இருப்பேன்," என மதுரையில் மக்கள் நீதி மய்யம் கட்சியை துவக்கி உருக்கமாக கமல் பேசினார்.

மதுரை, பொதுக்கூட்டம், கமல்


இக்கூட்டத்தில் அவர் பேசியதாவது:

தமிழகத்தில் 37 ஆண்டுகளாக அமைதியாக நற்பணிகளை செய்து வந்தோம். இதற்கு பின்னணியில் லட்சக்கணக்கான தோழர்கள் உள்ளனர். பல ஆண்டுகளாக அமைதியாக நற்பணி செய்தபோதும், பல இடையூறுகள் கொடுத்தனர். இடையூறுகள் ஏற்படுத்திய அந்த கட்சிகள் பற்றி மக்களுக்கு நன்கு தெரியும். அது கடந்தவையாக இருக்கட்டும். ஆனால் மறந்தவையாக இருக்காது. எப்போதும் நினைவில் வைத்துக்கொண்டு தான் இருப்போம்.


எங்கள் தண்டவாளமும், உங்கள் வண்டவாளமும் வெளியே வரும் நாள் இது. பேசாமல் இருந்தோம். பிரச்னையை துவங்கி விட்டனர். கட்சி துவங்கி படிப்படியாக பிரசாரம் செய்யலாம் என நினைத்தேன். ஆனால் டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பேசி இன்றே பிரசாரத்தை துவக்கி விட்டார். இன்னும் எத்தனை காலம் காத்திருக்க முடியும். ஊமைகளாக கனவு கண்டு கொண்டிருக்க முடியாது. இன்று பேசும் நாள். நாளை செயல்படும் நாள்.


என்ன கட்சி என கேட்கிறார்கள். நான் மதிக்கும் அரசியல் நாயகர்களில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவும் ஒருவர். அவர் செயலை துவக்குங்கள் என்றார். மக்கள் நலன் தான் அவரது கொள்கை, கோட்பாடாக உள்ளது. அதை செயல்படுத்துங்கள் என்றார்.இங்கே பணத்திற்கு பஞ்சமில்லை. மனத்திற்கு தான் பஞ்சம் உண்டு. அதற்கான பெருங் கூட்டம் இங்கு உள்ளது. நீங்கள் தான் ஆதிக்கம் செலுத்த வேண்டும்.


கொள்கை என்னகட்சி கட்சியின் கொள்கை என்ன என்று கேட்கிறார்கள். எல்லா நல்ல முதல்வர்களும் கொண்டுள்ள கொள்கைதான். தரமான கல்வி, அனைவருக்கும் போய் சேர வேண்டும். ஜாதி, மதம் சொல்லிய விளையாட்டு நிறுத்தப்பட வேண்டும். இதை நாம் செய்து காட்டுவோம். மின்சாரம் இல்லை; சமாளித்து கொள்ளுங்கள் என்கின்றனர். ஊழலை குறைத்திருந்தால் மின்சாரம் கிடைத்திருக்கும். ஊழலை ஒழித்தால் மின்சாரம் வரும். பற்றாக்குறை என்பது பேராசயைால் வந்தவை. இதில் மக்களுக்கும் பங்குண்டு.


நேர்மை, நியாயம் பேசும் நான் ஓட்டுக்கு பணம் கொடுக்க மாட்டேன். உங்களுக்காக செலவிடுவேன். உங்கள் ஓட்டின் விலை தெரியாமல் அடிமாட்டிற்கு விற்று விடாதீர்கள். 6 ஆயிரம் ரூபாய் வாங்கினால் ஐந்தாண்டுகளில் வகுத்து பார்த்தால் 99 காசு தான் வரும். நல்ல கட்சிக்கு ஓட்டு போட்டிருந்தால் 6 ஆயிரம் ரூபாய் இல்லை. ஆண்டுக்கு 6 லட்சம் ரூபாய் கூட

கிடைத்திருக்கும். அதை கோட்டை விட்டீர்கள். இனிமேல் இதுபோல் நடக்க விடக்கூடாது.


படித்த இளைஞர்கள் வேலையில்லாமல் உள்ளனர். வேலையின்மையை இல்லாமல் செய்ய முடியும். அதற்கு திறமைகளை இளைஞர்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும். நாங்கள் கிராமங்களை தத்தெடுத்ததை கேலி செய்கின்றனர். சமூக சேவர்களாக உங்களிடம் வந்துள்ளோம். நாங்கள் செய்ய வேண்டியதை தத்தெடுத்த 8 கிராமங்களில் செய்து முடிப்போம்.


தவறு என்று சுட்டிக்காட்டினால் அதை திருத்திக் கொள்வோம். பிடிச்ச முயலுக்கு மூன்று கால் என அடம் பிடிக்க மாட்டோம். அந்த காலம் முடிந்து விட்டது. இது அடுத்தகட்டம்.


காவிரி பிரச்னைகாவிரி பிரச்னைக்கு என்ன பதில்... இது ஒருவருக்கு ஒருவர் துாண்டிவிடும் அரசியல் செய்கின்றனர். முறையாக உரையாடல் நடந்தது என்றால் எந்த மாநிலமும் எந்த மாநிலத்தில் இருந்தும் எதையும் பேசி பெற முடியும். என்னால் ரத்தத்தையும் வாங்கி கொடுக்க முடியும். ரத்தம் - தானம். சுனாமி வந்தபோது பெங்களூரு சகோதரர்கள் வந்து தானம் அளித்தார்களே.எங்கள் மய்யத்தில் புதிய தென்னிந்தியாவின் 'மேப்' தெரியும். மக்களின் நீதியை மையமாக வைத்து துவங்கப்பட்ட கட்சி இது.


தமிழகத்தில் இருந்த நீதி கட்சி போன்ற கட்சிகளில் சொல்லப்பட்ட அறிவுரையெல்லாம் எடுத்து நாங்கள் கையாண்டுள்ளோம். நாங்கள் வலதும், இடதும் இல்லை.எங்கிருந்து நன்மை கிடைத்தாலும் அவற்றை பெற்றுக்கொள்வோம். தராசின் நடு முள்ளாக எங்கள் செயல்பாடு இருக்கும். உங்களுக்கு நன்மை எங்கிருந்து வருகிறது என்பதை நீங்கள் (மக்கள்) தான் உணர வேண்டும்.


வயதை கிண்டல்என் வயதை கிண்டல் அடிக்கின்றனர். என் வயது 63. அவர்கள் ஆயுள் குறைவாக உள்ளவர்கள். நான் பணம் பெற்றுக் கொண்டு தான் நடித்தேன். அது உங்களிடம் இருந்து பெற்றது. நிதானமாக யோசித்து பார்த்தபோது இதற்கெல்லாம் உங்களுக்கு, பதிலாக என்ன செய்ய போகிறேன் என யோசித்து பார்த்தால் ஒன்றும் இல்லை. குற்ற உணர்வும் ஏற்பட்டது. இதனால் இனி எஞ்சிய வாழ்க்கை உங்களுக்காக கொடுக்க வேண்டும் என முடிவு செய்தேன்.


எங்கள் கட்சியின் கட்டமைப்பு சிறப்பாக உள்ளது. கட்சி பெயர் தேர்தல் கமிஷனில் பதிவும்
செய்யப்பட்டுள்ளது. இன்னும் 30 நாட்களில் தெரியும். இது என்னுடன் மட்டும் முடியும் கட்சி அல்ல. குறைந்தது மூன்று தலைமுறைகளாவது இருக்கும் கட்சி. எனக்கே எனக்கு என்றால் நாளை நமது ஆகாது. ஒருவனுக்கு பேராசை இருந்தால் இந்த உலகம் கூட பத்தாது. எனவே நல்லது நடக்க அதற்கான உழைப்பை தர வேண்டும்.


அரசு என்பது பள்ளியை சிறப்பாக நடத்த வேண்டும். அதைதனியாரிடமும், சாராய கடைகளை அரசும் ஏற்று நடத்துவது வேடிக்கையான விஷயம். வீதிக்கு ஒரு சாராயக் கடை தேவையில்லை. கொஞ்சம் துாரம் நடந்து சென்று தான் குடியுங்களேன். கைக்கு எட்டிய இடத்தில் சாராயக் கடை இருக்க வேண்டும் என நினைக்கின்றனர். பள்ளி பருவத்திலேயே சாரயம் குடிக்கும் வாய்ப்பை உருவாக்கியுள்ளனர். இது மாற வேண்டும்.


கல்வியில் மாற்றம் வேண்டும். இனிவரும் நமது மேடைகளில் மக்கள் மத்தியில் இருந்து கேள்வி கேட்டு அதற்கு நான் பதில் அளிப்பதாக தான் இருக்கும். தெரிந்த கேள்விகளுக்கு உடன் பதில் கிடைக்கும். தெரியாத கேள்விகளுக்கு

Advertisement

கேட்டு சொல்வேன். அதை கடிதம் மூலமாக கூட அனுப்பி வைப்பேன்.இவ்வாறு பேசினார்.


கட்சிக்கு தலைவர் யார்கட்சி பெயரை அறிவித்த கமல் அதற்கு அகில இந்திய பொறுப்பாளர், மாவட்ட பொறுப்பாளர் கள், உயர்மட்டக்குழுவையும் அறிவித்தார். ஆனால், கட்சிக்கு தலைவர் செயலாளர், பொருளாளர் போன்ற பதவிகள் அறிவிக்கப்பட வில்லை. கமலுக்கு என்ன பதவி என்றும் அறிவிக்கவில்லை.


கொடியின் தத்துவம்கமல் கட்சி கொடியில் ஆறு இணைந்த கைகளுடன், நடுவில் நட்சத்திர சின்னம் இடம் பெற்றுள்ளது. இதற்கு விளக்கம் அளித்து கமல் பேசுகையில், ''கொடியில் இடம் பெற்றுள்ள 6 கைகள், தென்னிந்தியாவில் உள்ள ஆறு மாநிலங்களை குறிக்கிறது. நடுவில் உள்ள நட்சத்திரம் மக்களை குறிக்கிறது.மக்களின் நீதியை மையமாக கொண்டு அது இருக்கும்,'' என்றார்.

தொண்டர்களின் கட்டுப்பாடு


* கூட்டத்தை முடித்த பின் கமல் பேசியது: ரசிகர்கள் கவனமாக பார்த்து செல்லுங்கள்.
நான் வரும் வழியில், வாகனங்களில் பலர் வேகமாக வந்ததை பார்த்து பயந்தேன். எனவே கவனமாக வீட்டிற்கு செல்லுங்கள்.


* டில்லி முதல்வர் கெஜ்ரிவால் இரவு மதுரை சர்க்யூட் ஹவுசில் தங்கி, இன்று காலை 8:00 மணிக்கு டில்லி செல்கிறார்.


* கமல், காளவாசலில் உள்ள ஓட்டலில் இரவு தங்கி, இன்று காலை திண்டுக்கல் செல்கிறார்.


* 42 அடி உயர கொடிக்கம்பத்தில் கட்சி கொடியை கமல் ஏற்றினார்.


* கட்சி மாநாடு இரவு 7:00 மணிக்கு துவங்கி 9:30 மணிக்கு முடிந்தது. கமல் அப்போது, பொதுக் கூட்டம் நடந்த இடத்தில் இருந்த குப்பைகளை அகற்றிவிட்டு செல்லுமாறு தொண்டர்களிடம் கேட்டுக்கொண்டார். உடனே தொண்டர்கள், அந்தந்த இடத்தில் குப்பைகளை சேகரித்து வைத்து சென்றனர்.


* பெரும்பாலான தொண்டர்கள் விழா மேடைக்கு முன் இருந்த சேர்களை அடுக்கிவைத்து விட்டு சென்றனர்.நிகழ்ச்சி முடிந்ததும் ராமநாதபுரம் ரசிகர்கள் உட்பட இருவரின் அலைபேசி காணாமல் போனது.


* மாவட்ட செயலாளர்களாக மதுரை மணி, ராமநாதபுரம் மதி, சிவகங்கை வைத்தி, தேனி பாலஹாசன், திண்டுக்கல் சிவா உட்பட அனைத்து மாவட்டத்திற்கும் செயலாளர்களை நியமித்துள்ளார்.


Advertisement

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...


வாசகர் கருத்து (37)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
raja - lalgudi,trichy,இந்தியா
23-பிப்-201818:10:28 IST Report Abuse

rajaஆறு மாநிலங்களை கொடியில் வைத்திருக்கும் நீங்கள் ஆறு மாநிலத்திலும் கட்சி வளர்ப்பீர்களா ,இல்ல நாங்க தான் இளிச்சவாயர்கள்னு இந்த தமிழ்நாட்டுல மட்டும் கட்சி வளர்ப்பீர்களா ,தமிழ்நாட்டை மட்டும் முன்னேத்தனும்னா அந்த ஆணிய மட்டும் புடுங்கலாம்தானே,?எதுக்கு ஆறு ஆணி

Rate this:
P. Kannan - Bodinayakkanur,இந்தியா
23-பிப்-201815:01:37 IST Report Abuse

P. Kannanஇப்படித்தான் அந்தம்மாவும் சொன்னாங்க ,அப்புறம் வெள்ளைக்காரி, கொள்ளைக்காரி என்று என்னென்னமோ ஆகிப்போச்சு. எங்களிடம் சம்பாரித்த பணம் உங்களுக்கு குற்ற உணர்வை ஏற்படுத்தினால் அதை பணமாகவே திருப்பிக்கொடுத்துவிடுங்கள், ஆனால் அதை முதலீடு செய்து இன்னும் சம்பாரிக்க நினைத்தால் கதை கந்தலாகிவிடும் தலைவா. வடை சுட்டுக்கொண்டு இருக்கும் நீங்கள் தீடீரென்று அதிரசம் சுட வந்தால் அது சப்பென்று இருக்கும் இனிப்பு இல்லாமல். பேசாம அமிதாப் மாதிரி அப்பா ரோல் பண்ணுங்க சாகிறவரைக்கு நல்லா சம்பாரிக்கலாம்.

Rate this:
Tamilnesan - Muscat,ஓமன்
22-பிப்-201818:57:45 IST Report Abuse

Tamilnesan அப்ப வாணி, சரிகா, கௌதமி நிலைமை? ஓஹோ........அவர்களைத்தான் இந்த கூட்டத்தில் தேடறீங்களா? தமிழ்நாடு வெளங்கிடும் அப்பாலே, உங்க நண்பர் சீமானை தேடுகிறேன், அவரிடம் சில கேள்விகள் கேக்க வேண்டும். சீமானிடம்_சில_கேள்விகள் 1.இரட்டை இலைக்கு வாக்கு கேட்டாயே ஜெயலலிதா தமிழரா??? 2.தேமுதிகவில் கலை இலக்கிய அணி செயலாளராக இருக்கும் போது விஜயகாந்த் தெலுங்கரா தமிழரா?? 3.உன் மனைவியின் அம்மா அதாவது காளிமுத்துவின் மூன்றாவது மனைவி ஆந்திராவை பூர்வீகமாக கொண்டவர் அவருக்கு பிறந்த கயல்விழி தமிழச்சியா? தெலுங்கச்சியா????? 4.2007க்கு முன்பு வரை சீமானின் ஈழநிலைப்பாடு என்ன????. 5.1998தேர்தலில் காங்கிரஸ் க்கு வாக்கு கேட்டேன் என்கிறாய் அப்படியானால் 1998வரை நீ அமைதிப்படையை அனுப்பி ஈழத்தமிழர்களை அழித்த காங்கிரஸை ஆதரித்தாயா?. 6.தற்போது நீ ஈழத்தமிழர்கள் அழிவிற்கு காரணமான காங்கிரஸை பற்றி உன் நிலைப்பாடு என்ன? 7.மத்தியில் பாஜக வை தோற்கடிக்கவேண்டும் என்கிறாய். அப்படியானால் காங்கிரஸ்ஸை ஆதரிக்கிறாயா? 8.நீ எடுத்த படம் எதுவும் ஓடவில்லை தயாரிப்பாளர் பிச்சை எடுக்கிறான்.உனக்கு மட்டும் எப்படி 60லட்சத்தில் காரும் 5கோடியில் வீடும் எப்படி வந்தது????. 9.உன் அம்மா தமிழர் ஆனால் உன் அப்பா கேரளாவில் இருந்து வந்த மலையாளி நீ எப்படி தமிழன் ஆனாய்???????. 10.உன் பள்ளி சான்றிதழில் உள்ள உன் உண்மையான பெயர் என்ன. சீமான் என்பது இயக்குனர் மணிவண்ணன் வைத்த பெயர் என்பது எல்லோருக்கும் தெரியும். உன் அப்பா வைத்த பெயர் என்ன???????. சீமான் தும்பிகளுக்கு பதில் தெரிந்தாலும் கூறலாம்

Rate this:
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
22-பிப்-201818:06:46 IST Report Abuse

Malick Rajaஎஞ்சிய வாழ்க்கையை குடும்பத்துடன் குதூகலித்தாலே நன்று ..இதை விட்டு இப்படி அரசியலில் சந்நியாசம் செல்லவேண்டாம் .. குடும்பத்தை கட்டமைத்து பார் எனது குடும்பத்தை .. குழந்தைகளை இதுபோல ஒவ்வ்ருவரும் வர நானும் உங்களுடன் சேர்ந்து உழைப்பேன் என்று சொன்னால் பாமரன் முதல் பாட்டாளி வரை ஆதரிப்பான்

Rate this:
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
22-பிப்-201818:02:14 IST Report Abuse

Srinivasan Kannaiyaதேர்வு பெற்றவராகள் அனைவரும் தம்மை அமைச்ச்ர்களாக எண்ணி கொண்டு இருப்பார்கள்... பாவம் பொல்லாத கனவு.,..

Rate this:
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
22-பிப்-201817:45:46 IST Report Abuse

Malick Rajaபொது வாழ்க்கைக்கு வந்து தலைவர்களாக வருபவர்கள் தங்களின் வாழ்நாளை முன்னுதாரமாக மேற்கோள் காட்டிவந்தால் மட்டுமே மனிதமாண்புகொண்டோர்களால் ஏற்கப்படும் இல்லையேல்ரசிகர்கள் மட்டுமே ஏற்ப்பார்கள்

Rate this:
Endrum Indian - Kolkata,இந்தியா
22-பிப்-201816:13:41 IST Report Abuse

Endrum Indianஞானம் என்பது ஸ்வாமி விவேகானந்தர், திருஞான சம்பந்தர் போல சிறு வயதிலேயே வரவேண்டும். சினிமாவில் இளைஞர் பட்டாளம் நுழைந்ததினால் தனக்கு வேலை இல்லை, இனிமேல் விளையாட வயதில்லை என்று வருவதல்ல ஞானம் இந்த அரசியல் பணிக்கு.

Rate this:
ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா
22-பிப்-201814:55:36 IST Report Abuse

ஆரூர் ரங்இதனை நாளா ஸ்ரீவித்யாலேருந்து கவுதமிவரை பலருக்காக வாழ்ந்தாச்சு (இனிமே ஸ்ரீப்ரியா போலத்தான் தொண்டர்/ தொண்டிகள் கிடைப்பாங்க). அதனால நாம்தான் கெடச்சோமா ?

Rate this:
SALEEM BASHA - RAS AL KHAIMAH-UAE,ஐக்கிய அரபு நாடுகள்
22-பிப்-201812:43:32 IST Report Abuse

SALEEM BASHAகொடியில் ஆறு கோணம் உள்ள நட்சத்திரத்திற்கு பதிலாக ஐந்து கோணம் உள்ள நட்சத்திரம் இருந்தால் நன்றாக இருந்து இருக்கும்

Rate this:
Kurshiyagandhi - Arimalam,இந்தியா
22-பிப்-201813:26:15 IST Report Abuse

Kurshiyagandhiஐந்து கோணம் நட்சத்திரம் இருந்தால் என்ன நன்றாக இருந்திருக்கும்?புரியவில்லையே...

Rate this:
K.Sugavanam - Salem,இந்தியா
22-பிப்-201817:38:18 IST Report Abuse

K.SugavanamSTAR OF DAVID .....

Rate this:
Rajasekar K D - Kudanthai,இந்தியா
22-பிப்-201811:50:52 IST Report Abuse

Rajasekar K Dஒன்னும் ஆணியே புடுங்க வேண்டாம். பதவியில் உள்ள பெண்கள் ஜாக்கிரதை

Rate this:
Kurshiyagandhi - Arimalam,இந்தியா
22-பிப்-201813:25:13 IST Report Abuse

Kurshiyagandhiஹா ஹா ஹா ஹா ஹா ......................

Rate this:
மேலும் 24 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement