மும்பைக்கு வரும் அதிவேக ரயில்!| Dinamalar

சிறப்பு பகுதிகள்

அறிவியல் மலர்

மும்பைக்கு வரும் அதிவேக ரயில்!

Added : பிப் 23, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
மும்பைக்கு வரும் அதிவேக ரயில்!

இந்தியாவில், ஏன் உலகிலேயே, முதல் அதிவேக ரயில் திட்டத்தை செயல்படுத்தவிருக்கிறது, 'ஹைப்பர்லுாப் ஒன்'. மஹாராஷ்டிரத்தின் மும்பை - புனே நகர்களுக்கு இடையில் இத்திட்டத்திற்கான பூர்வாங்க ஆய்வுகளை ஹைப்பர்லுாப் தொடங்கியுள்ளது.
பிரிட்டனை சேர்ந்த, வர்ஜின் குழுமத்தின் அதிபர் ரிச்சர்ட் பிரான்சனின் நிறுவனம்தான் ஹைப்பர்லூர் ஒன்.
காற்று குறைவான பெரிய குழாய்களில், சிறிய பெட்டிகளில் பயணியரையும், சரக்குகளையும் மணிக்கு, 1,126 கி.மீ., வேகத்தில் பயணிக்கச் செய்வதுதான், ஹைப்பர்லுாப்பின் திட்டம்.
இதுவரை சில, கி.மீ., தூர சோதனை ஓட்டத்தை மட்டுமே நடத்தியிருந்தாலும், மஹாராஷ்டிர அரசு இத்திட்டத்தை தங்கள் பக்கம் ஈர்த்திருக்கிறது. இது, நடைமுறைக்கு வந்தால், மும்பையிலிருந்து புனேவுக்கு, 25 நிமிடங்களில் சென்றுவிட முடியும்.
ஆண்டுக்கு இரு நகரங்களுக்கும் இடையே, 1.5 கோடி பயணியரை கொண்டு செல்லலாம். இந்த பயணியர் கார், பஸ் போன்ற வாகனங்களை பயன்படுத்துவது தவிர்க்க முடியும்.
எனவே, ஆண்டுக்கு, 1.5 லட்சம் டன் கரியுமில வாயு காற்றில் கலப்பதை தடுக்கலாம் என, ஹைப்பர்லூப் ஒன் தெரிவித்துள்ளது.
பூர்வாங்க ஆய்வுகளைஅடுத்த ஆறு மாதங்களில் முடிக்கப்போவதாகவும், சோதனை தடம் ஒன்று அடுத்த மூன்று ஆண்டுகளில் தயாராகிவிடும் என்றும், ஏழு ஆண்டுகளில் முழு நீள தடம் போடப்பட்டு, ஹைப்பர்லுாப் ஒன் சேவை துவங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை