உருக்கைவிட வலுவான அலுமினியம்!| Dinamalar

சிறப்பு பகுதிகள்

அறிவியல் மலர்

உருக்கைவிட வலுவான அலுமினியம்!

Added : பிப் 23, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
உருக்கைவிட வலுவான அலுமினியம்!

அதிக உறுதி கொண்ட அலுமினிய அலோகம் ஒன்று, அமெரிக்க மற்றும் சீன விஞ்ஞானிகளின் கூட்டு முயற்சியால் உருவாகியிருக்கிறது.
உருக்கு இரும்பிடம் பலப்பரிட்சை வைத்தால், அலுமினியம் எளிதில் தோற்றுவிடும்.
ஏனெனில், அலுமினியம் மென்மையான, பலம் குறைவான உலோகம். இதனால் தா, வேறு உறுதியான உலோகங்களைக் கலந்து, அலுமினியத்தை பயன்படுத்துகின்றனர்.
அப்படியும்கூட அலுமினிய அலோகம் அதிக வலு கொண்டதாக இருப்பதில்லை.
ஆனால், அமெரிக்காவின் பர்டியூ பல்கலைக்கழகம், சீனாவின் ஷாங்காய் பல்கலைக்கழகம், உள்ளிட்ட இரு நாட்டு விஞ்ஞானிகள், அலுமினியத்தின் மூலக்கூறு கட்டமைப்பில் மாறுதல்களை செய்து, வலுவான அலுமினியத்தை உருவாக்குவதில் வெற்றி கண்டுள்ளனர்.
ஆய்வுக்கூடத்தில் சோதித்துப் பார்த்தபோது, இரும்பு உருக்கை விட, அவர்கள் கண்டுபிடித்த புதிய வகை அலுமினியம் வலுவானதாக இருப்பது தெரியவந்தது. அதே சமயம் இரும்பைவிட இலகுவானதாகவும் அது இருக்கிறது.
இதனால், கட்டடங்களிலும், கன ரக உலோகம் தேவைப்படும் தொழில்துறைகளிலும், சைக்கிள் மற்றும் விமான தயாரிப்பு தொழில்களிலும், இந்த புதியவகை அலுமினியம் பயன்படும், என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இவர்களது ஆய்வு, 'அட்வான்ஸ்டு மெட்டீரியல்ஸ்' இதழில் அண்மையில் பதிப்பிக்கப்பட்டுள்ளது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை