வெள்ளரிக்காய் பறிக்கும் ரோபோ!| Dinamalar

சிறப்பு பகுதிகள்

அறிவியல் மலர்

வெள்ளரிக்காய் பறிக்கும் ரோபோ!

Added : பிப் 23, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
வெள்ளரிக்காய் பறிக்கும் ரோபோ!

ஜெர்மனியில் பெருமளவில் விளையும் வெள்ளரிக் காய்களை பறிக்க, ரோபோ ஒன்றை வடிவமைத்திருக்கிறது, பிரான்ஹோபர் என்ற நிறுவனம். வெள்ளரிக்காய்களை மனிதர்கள் நிமிடத்திற்கு, 13 என்கிற வீதம் பறிப்பர். ஆனால், அவர்களுக்கு அதிக சம்பளம் தரவேண்டியிருப்பதால், வெள்ளரி விவசாயம் கட்டுப்படியாகாமல் போனது.
எனவே ஐரோப்பிய யூனியனின் விவசாயத் துறையும், சில ரோபோ ஆய்வு நிறுவனங்களும் சேர்ந்து, 'கேட்ச்' என்ற, வெள்ளரி பறிக்கும் ரோபோவை தயாரித்து உள்ளனர்.
பச்சை இலைகளுக்கு நடுவே, பச்சையாக இருக்கும் வெள்ளரிகளில், நன்கு விளைந்தவைகளை பறிக்க வேண்டும். வெளிச்சம் போதாத, இண்டு இடுக்குகளில், காய்த்தவைகளை எட்டிப் பறிக்கும்போது, செடி வேரோடு வந்துவிடக்கூடாது. பிஞ்சுகளை பறித்துவிடக்கூடாது.
இத்தனை சிக்கல்கள் இருந்தாலும், அத்தனை வேலைகளையும், 'கேட்ச்' ரோபோ சோதனை அறுவடையின்போது செய்து காட்டியிருக்கிறது.
ரோபோவுடன் இருக்கும் சிறப்பு ஒளிப்படக் கருவி, வெள்ளரிகளின் இருப்பிடம், அளவு போன்றவற்றை துல்லியமாக காட்டித்தர, இரு கரம் கொண்ட ரோபோ, நயமாக அதை மட்டும் பறித்து கூடையில் போடுகிறது.
சோதனைகளில் வெள்ளரி ரோபோ அசத்தி இருப்பதால், அடுத்த அறுவடைக்கு, கேட்ச் ரோபோ களமிறங்கப் போகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை