சிறைக்கைதிகள் விடுதலையால் அச்சம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

சிறைக்கைதிகள் விடுதலையால் அச்சம்

Added : பிப் 23, 2018 | கருத்துகள் (24)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
Prisoners,Placent Stay hotel,MGR, எம்ஜிஆர் நூற்றாண்டு விழா, தமிழக அரசு, கைதிகள் விடுதலை , தமிழக சிறைகள்,  கோவை வேளாண் கல்லூரி மாணவிகள் , ப்ளசண்ட் ஸ்டே ஹோட்டல்  வழக்கு, MGR Century Festival, Tamil Nadu Government, Prisoners release, Tamil Nadu Prisons, Coimbatore Agricultural College students,
Placent Stay hotel Case,

எம்.ஜி.ஆர்., நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, கடந்த ஆறு மாத காலமாக தமிழகம் முழுவதும், மாவட்டம் தோறும் விழா நடத்தி முடித்திருக்கிறது, தமிழக அரசு. விழாக்களின் இறுதி கட்டமாக, பிரமாண்ட விழாவை சென்னையில் நடத்திட அரசுத் தரப்பு தீர்மானித்திருக்கிறது. இந்த விழாவுக்கு எப்படியும் பிரதமர் மோடியை அழைத்து வந்து விட வேண்டும் என்று ஆட்சியாளர்கள் தீவிரமாக இருக்கின்றனர். ஆனால், பிரதமர் வருவது சந்தேகம் என்பதால், நிகழ்ச்சி தள்ளிக் கொண்டே போகிறது.

இந்நிலையில், எம்.ஜி.ஆர்., நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, தமிழக சிறைகளில் பத்தாண்டுகளுக்கு மேலாக கைதிகளாக அடைபட்டுக் கிடக்கும் ஆயிரக்கணக்கானோரை விடுதலை செய்வதற்கான முயற்சியில் அரசுத் தரப்பில் தீவிரமாக இருக்கின்றனர்.இதற்காக, தமிழகம் முழுவதும் இருக்கும் சிறை அதிகாரிகளிடம் நடத்தை சான்றிதழ்களெல்லாம் பெறப்பட்டு, யார், யாரை விடுதலை செய்யலாம் என்பது குறித்து அரசு தரப்பில் பெரும் பட்டியல் தயாராகி இருக்கிறது.

அந்த பட்டியலில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு பளசண்ட் ஸ்டே கட்டட வழக்கில் தண்டனை வழங்க தீர்ப்பளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, கோவை வேளாண் கல்லூரி மாணவிகள் மூவர் உயிரோடு எரித்து கொள்ளப்பட்ட வழக்கில் இருக்கும் அ.தி.மு.க.,வினரை விடுக்க திட்டமிட்டுள்ளனர். அவர்களை விடுவிப்பதற்காகவே, இப்படி, பத்தாண்டுகள் சிறையில் கழித்தவர்களையெல்லாம் விடுதலை செய்வதென அரசுத் தரப்பில் முடிவெடுத்துள்ளனர்.

இதையெல்லாம் அறிந்த சிலர், தீவிரவாதிகளாக அடையாளம் காட்டப்பட்டு, 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் உள்ளனர். அவர்களை மனிதாபிமானத்தின் அடிப்படையில் விடுதலை செய்யாமல், இந்துக்களையும், கட்சிக்காரர்களையும் விடுவிக்க முயல்வது தவறு என கொடிபிடிக்கத் துவங்கி உள்ளனர்.

இதனால், சிறைக் கைதிகள் மத்தியில் கொந்தளிப்பான சூழல் ஏற்பட்டுள்ளது. ஒருவேளை, அரசுத் தரப்பில் எடுக்கப்பட்டிருக்கும் முடிவு செயல்படுத்தப்பட்டால், எதிர்வினை கடுமையாக ஆற்றப்படும் என, பலரும் கூறுகின்றனர். இதனால், தமிழகத்தில் கொஞ்ச காலமாக அமுங்கிக் கிடக்கும் துப்பாக்கி கலாசாரமும், வெடிகுண்டு கலாசாரமும் மீண்டும் துவங்குமோ என, சிறைத் துறை வட்டாரங்கள் அச்சம் கொள்கின்றன.

Advertisement




வாசகர் கருத்து (24)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rpalnivelu - Bangalorw,இந்தியா
24-பிப்-201804:53:04 IST Report Abuse
Rpalnivelu அவசரம் வேண்டாம். "ஒரு சர்ச்சையை ஆற போட வேண்டுமானால், ஒரு கல்லை போடு, அல்லது கமிட்டியை போடு" என்று சோ சொல்லுவார். தற்சமயம் கமிட்டி போட்டுவிடுங்கள்.
Rate this:
Share this comment
Cancel
ilicha vaay vivasaayi (sundararajan) - maduraikku therku pakuthi ,இந்தியா
24-பிப்-201803:44:31 IST Report Abuse
ilicha vaay vivasaayi  (sundararajan) கட்சியின் உண்மைத் தொண்டர்கள் உள்ளே இருப்பதால், வசூல் மற்றும் கட்டப்பஞ்சாயத்து தொழில் சரியா நடக்கல. அதனால இவங்க எல்லாம் வந்தா தான் கட்சிக்கு சிறப்பா இருக்கும் . மேலும் மதக்கலவரம் , குண்டு வெடிப்பு , ஆசிட் வீச்சு, வழிப்பறி , கொலை கொள்ளை கற்பழிப்பு நடந்தா தான் , வசூலுக்கு சௌகரியமாக இருக்கும்
Rate this:
Share this comment
Cancel
skv - Bangalore,இந்தியா
24-பிப்-201802:08:20 IST Report Abuse
skv<srinivasankrishnaveni> mgr ஜெயா முக இவாள்ளாம் என்னங்க செய்தாங்க என்னாத்துக்கு அரசுப்பணத்துலே விழா எடுத்து வீண் சிலவு செய்யவேண்டும் ?//தமிழ்நாடு இவ்ளோகேவலமா போனதுக்கே தான் இதுகள் காரணம் காளியை சுழற்றி ஏரிகளில் நொண்டியாது தான் சாதனையா ஐயாவாள் கொடிலேபொரண்டுண்டு நாட்டம் ஆளத்துடிக்கும் சசியின் கூட்டமும் கோடீலேபுரளுதுங்களே அதுதான் சாதனையா ?முக வின் வாரிசுகள் செல்வந்தர்களா இருக்கானுகளே அது பெரிய சாதனையா ப்ளீஸ் விவரமா ஏவாளும் சொல்லமுடியுமா .கல்வியில் சிறந்துவிளங்கின தமிழர்களை உருப்படுமா செய்த கழக ஆட்ச்சிகளின் சாதனையா
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X