kasimedu | காசி மேடு மீன் மார்கெட்டில்...| Dinamalar

காசி மேடு மீன் மார்கெட்டில்...

Updated : பிப் 23, 2018 | Added : பிப் 23, 2018
Advertisement

காசி மேடு மீன் மார்கெட்டில்...

சென்னை மக்களின் மொத்த மீன் தேவையில் பாதிக்கு மேல் காசி மேட்டில் இருந்துதான் சப்ளையாகிறது.
இங்கு விலை குறைவாக இருக்கும் அத்துடன் ப்ரெஷ்ஷாக இருக்கும் என்பதால் எப்போதுமே காசி மேடு மீன் மார்கெட்டில் கூட்டம் அப்புகிறது.

அதிகாலை மூன்று மணிக்கே மீன் வியாபாரம் ஆரம்பமாகிவிடுகிறது.திருவாளர் பொதுஜனம் காலை 6 மணிக்கு மேல்தான் வருகிறது.பெரிய படகுகளில் இருந்து சிறிய படகுகள் மூலம் கரைக்கு கூடையில் கொண்டுவரும் மீன்கள் கரையில் வைத்து ஏலம் விடப்பட்டு உடனே விற்கப்படுகிறது.
படகுகளில் இருந்து கைமாறி கைமாறி மீன்கள் கரையில் உள்ள வண்டிகளுக்கு வந்து சேரும் அழகே தனி.ஒரு பக்கம் ஏலம் விடப்பட்டு விற்பனை நடந்தாலும் இன்னோரு பக்கம் கடை போட்டு வியாபாரம் செய்கின்றனர்.

மீன்கள் தங்கம் போல ஜொலிக்கிறது தொடாமல் விற்பவர் மனம் நோகாமல் பேரம் பேசி மீனை வாங்குவது ஒரு கலைதான் கொஞ்சம் கோபப்பட்டாலும் அப்புறம் மெட்ராஸ் பாஷையில் வாங்கிக்கட்டிக் கொள்ளவேண்டியிருக்கும்.

வஞ்சிரம்,வவ்வால்,நெத்திலி,பாறை,சங்கரா, என்று நமக்கு தெரிந்தது நான்கு வகை மீன்கள் என்றால் நாற்பது வகைக்கும் மேற்பட்ட மீன்கள் இருக்கின்றன ஆக்டபஸ் மாதிரி இருக்கும் மீன்களைக்கூட பிதுக்கிபார்த்து ஒரு கூட்டம் வாங்கிக்கொண்டிருக்கிறது.இரால் நண்டு மட்டுமே சாப்பிடுவேன் எங்கே என்று கேட்டு தேடுபவர்கள் தனியாக இருக்கிறார்கள் யார் எது கேட்டாலும் கொடுக்குமிடமாக காசிமேடு இருக்கிறது.


மார்க்கெட்டில் கொடுவா என்று விற்கப்படும் மீன் ஒரிஜினல் கொடுவா இல்லையாம்... கொடுவாவில் பல ரகங்கள் உண்டு. இதில் கொருக்கை என்ற வகையே கொடுவா என்ற பெயரில் விற்கப்படுகிறது. ''நீளவாக்கில் இருப்பதுதான் ஒரிஜினல் கொடுவா. அது அபூர்வமாதான் கிடைக்கும். ருசியும் தூக்கலா இருக்கும்'' பார்த்து வாங்கணும் என்கிறார்கள்,

இங்கே பலருக்கு சமைச்சு வச்ச சாப்பிட மட்டும்தானே தெரியும்.எந்த மீன் குழம்பாக இருந்தாலும் மறுநாள் இட்லிக்கு எடுத்து வச்சுடணும் என்று மறக்காமல் சொல்லத்தெரியும் மீனுடனான உறவு அவ்வளவுதான்.

மீன் வாங்குகிறமோ இல்லையோ காசிமேடு மீன் மார்கெட்டிற்கு ஒரு முறை அவசியம் விசிட் செய்யுங்கள் அந்த காலை நேர கலாச்சாரத்தை அவசியம் ஒரு முறையாவது பார்க்கவேண்டும், குறிப்பாக புகைப்படக்கலைஞர்கள்.

---எல்.முருகராஜ்
murugaraj@dinamalar.in

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை