Pakistan to be placed on FATF grey list from June | பயங்கரவாதத்தை ஒழிக்க தவறிய பாக்.,குக்கு சிக்கல் Dinamalar
பதிவு செய்த நாள் :
சிக்கல்!
பயங்கரவாதத்தை ஒழிக்க தவறிய பாக்.,குக்கு...
அமெரிக்க பரிந்துரையை 35 நாடுகள் ஏற்பு

புதுடில்லி: பயங்கரவாத குழுக்களுக்கு, பாக்., அளித்து வரும் நிதி உதவியை நிறுத்தாததை கண்டித்து, பாரிசில் நடைபெற்ற, சட்டவிரோத பணப் பரிமாற்ற கண்காணிப்புக் குழு கூட்டத்தில், பாகிஸ்தானை, கறுப்புப் பட்டியலில் சேர்க்க, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இது, பாக்., பொருளாதாரம் மற்றும் அரசியலில் கடும் நெருக்கடியை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது.

Terrorism, Blacklist, USA,பயங்கரவாதம், கறுப்புப் பட்டியல், அமெரிக்கா, டிரம்ப், லஷ்கர் - இ - தொய்பா, ஜமாத் - உத் - தவா ,பலா - இ - இன்சானியத், ஹபீஸ் சயீத், பாகிஸ்தான், பாகிஸ்தான் பொருளாதாரம்,   Trump, Lashkar-e-Taiba, Jamaat-ud-Dawa, Bala-e-Insaniyah, Hafiz Saeed, Pakistan, Pakistan economy,


பாக்.,கில் உள்ள பயங்கரவாதக் குழுக்களுக்கு, அந்நாட்டு அரசு, ஆதரவு அளித்து வருவதை, உடனடியாக நிறுத்த வேண்டும் என்று, அமெரிக்க அதிபர், டொனால்டு டிரம்ப் அறிவித்து இருந்தார். ஆனால், லஷ்கர் - இ - தொய்பா பயங்கரவாத அமைப்பின் நிறுவனர், ஹபீஸ் சயீத்துடன் நேரடி தொடர்பு கொண்ட, ஜமாத் - உத் - தவா மற்றும் பலா - இ - இன்சானியத் போன்ற, பயங்கரவாத அமைப்புகளுக்கு, பாக்., தொடர்ந்து நிதி உதவி அளித்து வந்தது.


இதையடுத்து, பாகிஸ்தானுக்கு வழங்கி வரும், ரூ.13 ஆயிரம் கோடிராணுவ நிதி உதவியை நிறுத்துவோம் என, அமெரிக்க அதிபர், டிரம்ப், பகிரங்க எச்சரிக்கை விடுத்தார். இருப்பினும், பயங்கரவாத நடவடிக்கைகளை ஒடுக்க, பாக்., தவறியது.


கண்காணிப்பு:


இந்நிலையில், சட்ட விரோத பணப் பரிமாற்ற கண்காணிப்பு குழு கூட்டம், ஐரோப்பிய நாடான,

பாரிசில் நடந்தது. இதில், அமெரிக்கா, இந்தியா, சீனா, பிரிட்டன், ஜெர்மனி, பிரான்ஸ் உட்பட, 36 நாடுகள் கலந்து கொண்டன.உலகம் முழுவதும் உள்ள பயங்கரவாத குழுக்களுக்கான நிதி ஆதாரங்கள் எங்கிருந்து பெறப்படுகின்றன என்பதை, இக்குழு கண்காணித்து வருகிறது. இக்கூட்டத்தில், பயங்கரவாத செயல்களைஒடுக்க, பாக்., எடுத்துவரும் நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

பலமுறை எச்சரித்தும், அவர்கள் நடவடிக்கை எடுக்காததால், பாக்.,கை கறுப்புப் பட்டியலில் சேர்க்க, அமெரிக்கா பரிந்துரை செய்தது. இந்தியா, பிரிட்டன், ஜெர்மனி, பிரான்ஸ் உட்பட, 35 நாடுகள், அமெரிக்காவின் பரிந்துரையை ஏற்றுக் கொண்டன.கண்காணிப்புக் குழுவில் உள்ள, 36 நாடுகளில், மூன்று நாடுகள், தீர்மானத்தை ஏற்றுக்கொள்ள மறுத்தால், அத்தீர்மானத்தை நிறைவேற்ற முடியாது.


சீனா பல்டி




சீனா, சவுதி மற்றும் துருக்கி ஆகிய நாடுகள் தங்களுக்கு ஆதரவாக ஓட்டு அளிக்கும், என, பாக்., எதிர்பார்த்தது. கடைசி நிமிடத்தில், சீனாவும், சவுதியும் பல்டி அடிக்க, துருக்கி மட்டுமே, பாக்.,குக்கு ஆதரவாக ஓட்டளித்தது.

பாக்., கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்டு இருப்பதால், சர்வதேச நிதி நிறுவனங்கள் மற்றும் வங்கிகள், பாக்.,கில் தொழில் செய்வதில் சிக்கல் ஏற்படும். பாக்.,கில் உள்ள தொழில்நிறுவனங்களுக்கு தேவையான நிதி ஆதாரங்களை, வெளிநாடுகளில் இருந்து பெறுவதிலும் சிக்கல் ஏற்படும் என தெரிகிறது.


மேலும், 19.50 லட்சம் கோடி ரூபாய் கடனை, ஜூன் இறுதிக்குள், பாக்., செலுத்தியாக வேண்டும். தவறினால், பாக்.,கின் கடன் தகுதி மதிப்பு, சர்வதேச அளவில், பின்னுக்கு தள்ளப்படும்.பாக்.,கில் விரைவில், பொது தேர்தல் நடக்க உள்ளது.

Advertisement

இந்நிலையில், இந்தகறுப்புப் பட்டியல் விவகாரம்,ஆளும், முஸ்லிம் லீக் கட்சிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும்.அதோடு, பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கைகளில், சர்வதேச அமைப்புகளை திருப்திபடுத்த முடியாத அரசுக்கு எதிராக, எதிர்க்கட்சிகள் போர்க் கொடி உயர்த்தும் அபாயம் எழுந்துள்ளது.


டிரம்புக்கு திருப்தி இல்லை



பாக்., கறுப்புப் பட்டியில் சேர்க்கப்பட்டுள்ளது குறித்து, அமெரிக்க வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர், ராஜ் ஷா கூறியதாவது: பாகிஸ்தான் உடனான உறவை பாதுகாக்க, எல்லா முயற்சிகளையும் அமெரிக்கா மேற்கொண்டது. இந்த முடிவு எடுக்கப் பட்டதற்கு, பாக்.,கின் பொறுப்பற்ற செயலே காரணம்.


கடந்த ஆகஸ்டில், அமெரிக்க அதிபர், டொனால்டு டிரம்ப் அறிவித்த தெற்காசிய கொள்கை திட்டத்தில், பயங்கரவாதத்தை ஒடுக்க, பாக்., இன்னும் தீவிரமாக செயல்பட வேண்டும் என கூறி இருந்தார். ஆனால், பாக்., எடுத்த நடவடிக்கைகளில், அமெரிக்க அதிபர், டொனால்டு டிரம்ப் திருப்தி அடையவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.


Advertisement

வாசகர் கருத்து (19)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
karupanasamy - chennai,இந்தியா
24-பிப்-201816:28:07 IST Report Abuse

karupanasamyஇசுலாத்துக்கு எதிரா தடை தீர்மானம் கொண்டு வராதவரை உலகில் பயங்கரவாதத்தை தடுக்க முடியாது.

Rate this:
Endrum Indian - Kolkata,இந்தியா
24-பிப்-201815:28:12 IST Report Abuse

Endrum Indianதற்போதைய செய்தி. கடைசி நிமிடத்தில் பாகிஸ்தான் தப்பித்தது இந்த பட்டியலில், ஆனாலும் எச்சரிக்கை உள்ளது.

Rate this:
GB.ரிஸ்வான் - jeddah,சவுதி அரேபியா
24-பிப்-201813:02:59 IST Report Abuse

GB.ரிஸ்வான் ஆரம்பத்தில் அந்த தீவிரவாத நாட்டுக்கு எல்லா சலுகைகளும்,நிதியும்,ஆயுதங்களையும் கொடுத்து இப்போ குத்துதே குடையுதே என்றால் எப்படி?

Rate this:
Aravindhakshan - Chennai,இந்தியா
24-பிப்-201816:35:45 IST Report Abuse

Aravindhakshanஅன்பரே...அமெரிக்கக்காரன் நிதி, சலுகை கொடுத்தால் அவனை, அவன் நாட்டை தாக்க வேண்டியதுதானே இந்த பக்கி நாய்கள். இந்தியாவை குறிவைத்து ராணுவத்தையும், பொதுமக்களையும் தாக்குவது ஏன்? பின்லாடனை ஒளித்துவைத்து அடிவாங்கினானே...அதை எதிர்த்து எதுவும் சொல்லவில்லையே ஏன்? ஏனென்றால் அமெரிக்கக்காரனிடம் இந்த பக்கி நாய்கள் வாலாட்டிபிழைக்கவேண்டும் என்பதற்காகத்தான். சப்பைமூக்கன் தன் ஆதிக்கத்தில் இவனை கொண்டுவந்துவிட்டான்....இனி படிப்படியாக பக்கிகளுக்கு அழிவுப்பாதைதான். அப்பாவி மக்களை தீவிரவாதத்தால் கொண்டிருக்கும் கயவர்களுக்கு அழிவு தாமதமாக வந்தாலும் நிரந்தரமாக பல வழிகளிலும் வந்துகொண்டுள்ளது என்பது இந்தியாவிற்கு நல்ல விஷயம்தான்....

Rate this:
மேலும் 15 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X