US tightens H-1B visa rules, Indians to be hit | 'எச் - 1 பி' விசாவுக்கு கட்டுப்பாடு; இந்திய நிறுவனங்களுக்கு பாதிப்பு Dinamalar
பதிவு செய்த நாள் :
'எச் - 1 பி' விசாவுக்கு கட்டுப்பாடு
இந்திய நிறுவனங்களுக்கு பாதிப்பு

வாஷிங்டன:அமெரிக்காவில் வேலை பார்ப்பதற்கு, வெளிநாட்டை சேர்ந்தவர்களுக்கு வழங்கப்படும், 'எச் - 1 பி' விசா முறையில், புதிய கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டு உள்ளன.

எச் - 1 பி  விசா, கட்டுப்பாடு, இந்திய நிறுவனங்கள், பாதிப்பு


இது, இந்திய நிறுவனங்களுக்கு மிகப்பெரிய பாதிப்பாக இருக்கும் என, எதிர்பார்க்கப்
படுகிறது. அமெரிக்காவில் பணியாற்று வதற்காக, வெளிநாட்டைச் சேர்ந்தவர்களுக்கு, 'எச் - 1 பி' விசா வழங்கப்படுகிறது.


பாதிப்பு


இந்த விசாவை பெறுவதில், இந்திய நிறுவனங்கள் முன்னிலையில் உள்ளன. இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள்,

இந்த விசாவை அதிகளவில் பயன்படுத்துகின்றன. அமெரிக்க அதிபராக, டொனால்டு டிரம்ப், 2017ல் பதவியேற்றது முதல், 'அமெரிக்கர்களுக்கே முன்னுரிமை' என அறிவித்து, பல திட்டங்களை அறிவிக்கிறார். இதனால், வெளிநாட்டைச் சேர்ந்த நிறுவனங்கள், குறிப்பாக, இந்திய நிறுவனங்கள் அதிகம்பாதிக்கப்பட்டன.


ஏற்கனவே, பல கட்டுப்பாடுகள் உள்ள நிலையில், பல்வேறு புதிய கட்டுப்பாடுகளை, டிரம்ப் நிர்வாகம் அறிவித்துள்ளது. இது, உடனடியாக அமலுக்கு வருவதாகவும் கூறப்பட்டு உள்ளது.புதிய அறிவிப்பில் கூறியுள்ளதாவது:'எச் - 1 பி' விசா, வழக்கமாக, மூன்று ஆண்டுகளுக்கு வழங்கப்படும். தற்போதைய புதிய முறையின்படி, இந்த விசாவை பெறுபவர், அமெரிக்காவில் உள்ள நிறுவனத்தில், எந்த குறிப்பிட்ட பணிக்காக, எவ்வளவு காலத்துக் காக இருக்க வேண்டும் என்பதை தெரிவிக்க வேண்டும்.


சம்பளம் இல்லைஅதற்கேற்ப, மூன்று ஆண்டுகளுக்கு குறைவாகவும் விசா வழங்க முடியும். அதே போல், விசா புதுப்பிக் கும் போதும், முந்தைய விசாவில் குறிப்பிட்ட படி பணியாற்றியதற்கான ஆதாரத்தை தாக்கல் செய்ய

Advertisement

வேண்டும்.இது போன்ற பல கட்டுப்பாடுகள், புதிய அறிவிப்பில் உள்ளன. இது குறித்து, அமெரிக்க குடியேற்ற துறை கூறியுள்ளதாவது:


விசாவில் கூறப்பட்டுள்ளவை மீறப்படுவதால், அமெரிக்கர்களுக்கான வேலை பாதிக்கப் படுகிறது; இந்திய ஊழியர்களும் பாதிக்கப் படுகின்றனர்.குறிப்பிட்ட அமெரிக்க நிறுவனம், தன் ஒப்பந்தத்தை ரத்து செய்தால், அந் நிறுவனத்துக்காக அழைத்து வரப்பட்டுள்ள ஊழியர்களுக்கு,இந்திய நிறுவனங்கள் சம்பளம் கொடுப்பதில்லை.


இது போன்ற முறைகேடுகள் நடப்பதை தடுக் கவே, இந்த கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டு உள்ளன. இவ்வாறு குடியேற்ற துறை கூறியுள்ளது.


Advertisement

வாசகர் கருத்து (26)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Manian - Chennai,இந்தியா
26-பிப்-201810:55:29 IST Report Abuse

Manianலாலிபாப்பு: இன்றய அமெரிக்க செய்தியில் அமெரிக்கர் ஒருவர் சொன்னதைக் படியும்.- - Like Info. I worked for them for 23 months in Bellevue, WA, and out of the H-1B visa holders I worked with, only a couple were good. Info worked those two like hell while most of their employees just took up space. I worked for most of that time out of a customer's office a block away, and literally none of the at one point 15 people I worked with did a single thing despite billing the American company from what I heard $15k per day. - Info is just importing unqualified bodies to bilk their customers out of money.

Rate this:
Manian - Chennai,இந்தியா
25-பிப்-201800:03:44 IST Report Abuse

Manianlollypop - madras,இந்தியா - அமெரிக்காவிலிருந் து வரும் ஒரு ஆராச்சி சொன்ன விவரம் இது. பால் கிகைக்காதபோது பொட்டிப் பாலை உபயோகிக்கிறறோம். அது எத்துணை சதா விகிதம் இருக்கும். ஆரம்ப காலத்தில், இந்தியர்கள் எந்த அமெரிக்கா யூனிவர்சிட்டில் டிகிரி வாங்கினாலும் உள்ளூர் ஆட்கள் கிடைக்காத பொது இந்தியர்களை வேலைக்கு வைத்துக் கொண்டார்கள். அந்த காலம் போச்சு. மேலும், உள்ளுர்காரானுக்கு சயங்ககலாம் மனைவி, குழந்தையுடன் நேரம் சிலவிடாவிடடால், அவனை அவன் மனைவி டைவர்ஸ் செய்துவிடுவாள். அவனுக்கு சிலவும் ஜாஸ்தி. ஆனால் ஒரு இந்தியன் கிடைத்த வேலை போதும், ஏழையாக இருந்து சாவதை விட கிடைத்த சம்பளம் போதும் என்று வேலை செய்யும்போது, 2-ம்-3 -ம் தர கம்பெனிகளில் வேலை பறிக்கிறார்கள். ஆனால், கிரீன் கார்டு அவர்களுக்கு கிடைப்பது மிகவும் கஷ்டம். அதே சமயம் முதல தர 25 - பல்கலைக்கழகங்களில் படித்த இன்ஜினியர்களுக்கு அந்த தொந்தவில்லை. சென்னையில் இருந்துகொண்டு விதண்டாவாதம் செய்வது எளிது. இப்பூ அங்கே போயி ஒரு புதிய வேலை தேடிய பின் கருது சொல்லலாம். உங்கள் கருத்தால் தவிக்கும் இந்தியர்களுக்கு எந்த பிரயோஜனமும் இல்லை. தற்போது கம்பியூட்ட்ற சயின்ஸில் பி ஹெச் டி வாங்கின சாதாரண பல்கலை கழக டிகிரிக்கு எந்த அமெரிக்க பல்கலை கழகத்திலும் ஆசிரியர் வேலை பொதுவாக 95 % கிடைக்காது. உள்ளூர் காலேஜில் பகுதி நேர வேலையே பார்க்கும் நண்பர்கள் சொன்னவை. வழிப்போக்கன் சொல்வதும் உண்மை என்று தற்போது அமெரிக்க கம்பெனிக்கு வேலை பார்க்கும் சென்னை நண்பர் சொன்னார். அவரும் சாதாரண பல்கலாய் கழகத்தில் படித்தார். புத்திசாலித்தனமாக பல உள் யுக்திகளை கற்றார். ஆனால் அவர் கூட படித்தவர்கள் 95 % வெள்ளை பெண்களை திருமணம் செய்து அமெரிக்காவில் கிரீன் கார்டு வாங்கி உள்ளார்கள்.

Rate this:
raja -  ( Posted via: Dinamalar Android App )
24-பிப்-201819:57:30 IST Report Abuse

rajanew india born hai,digital india hai, all indians back from us hai,all vote for vada,hot pakoda,hot tea,

Rate this:
மேலும் 23 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X