லாலு ஜாமின் மனு தள்ளுபடி: ஜார்க்கண்ட் ஐகோர்ட் அதிரடி | Dinamalar

லாலு ஜாமின் மனு தள்ளுபடி: ஜார்க்கண்ட் ஐகோர்ட் அதிரடி

Added : பிப் 24, 2018 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
Jharkhand High Court,Cow Fodder Scam,Lalu Prasad, லாலு ஜாமின்,  ஜார்க்கண்ட் ஐகோர்ட், மாட்டுத் தீவன ஊழல், ராஷ்ட்ரீய ஜனதா தளம், லாலு பிரசாத் யாதவ், பீஹார் ,  பிர்சா முண்டா மத்திய சிறை,  ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றம்,Lalu Jamin,   Rashtriya Janata Dal,Lalu Prasad Yadav, Bihar, Birsa Munda Central Jail, Jharkhand High Court,

ராஞ்சி: மாட்டுத் தீவன ஊழல் வழக்கில், சிறையில் அடைக்கப்பட்ட, பீஹார் முன்னாள் முதல்வரும், ராஷ்ட்ரீய ஜனதா தளத் தலைவருமான, லாலு பிரசாத் யாதவின் ஜாமின் மனுவை, ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

பீஹாரில் இருந்து, ஜார்க்கண்ட் பிரிவதற்கு முன், பீஹார் முதல்வராக இருந்த, லாலு பிரசாத் யாதவ் மீது, மாட்டுத் தீவன ஊழல் வழக்குகள் பதிவாகின. இந்த வழக்குகளை, தற்போதைய ஜார்க்கண்ட், சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்றம் விசாரித்து வருவதுடன், இரு வழக்குகளில், சிறை தண்டனையும் வழங்கி உள்ளது.

முதல் வழக்கில், ஐந்தாண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டு, ராஞ்சியில் உள்ள, பிர்சா முண்டா மத்திய சிறையில், லாலு அடைக்கப்பட்டார். இந்த வழக்கில், ஜாமினில் வந்த லாலுவுக்கு, தேவ்கர் கருவூல வழக்கில், மூன்றரை ஆண்டு சிறை தண்டனையும், ஐந்து லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. இதையடுத்து, லாலு மீண்டும், பிர்சா முண்டா மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில், இம்மாத துவக்கத்தில், தனக்கு ஜாமின் வழங்கக் கோரி, ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றத்தில், லாலு மனு தாக்கல் செய்தார். இதை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி, லாலுவின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்தார்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
24-பிப்-201808:52:19 IST Report Abuse
Srinivasan Kannaiya பாவம் ஏமாந்தவன் மாட்டிக்கொண்டார்... இவரை விட கண்ணுக்கு தெரிந்து எவ்வளவு லஞ்சலாவண்ய பேய்கள் நாட்டில் சுதந்திரமாக உலவி வருகிறது... ஆண்டவன் மேல் நம்பிக்கை உள்ளது...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை