கோப்பையை வெல்லுமா இந்தியா; இன்று 3வது ‛டுவென்டி-20'| Dinamalar

கோப்பையை வெல்லுமா இந்தியா; இன்று 3வது ‛டுவென்டி-20'

Added : பிப் 24, 2018 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
 IND VS RSA, T20 Cricket,Virat Kohli,இந்தியா, தென் ஆப்ரிக்கா ,டுவென்டி-20 கிரிக்கெட், 3வது டுவென்டி-20, கிரிக்கெட், விராட் கோஹ்லி , India, South Africa, Twenty20, 3rd T20, cricket, சாம்பியன், Champion

கேப்டவுன்: இந்தியா, தென் ஆப்ரிக்கா அணிகள் மோதும் 3வது ‛டுவென்டி-20' கிரிக்கெட் போட்டி இன்று நடக்கிறது. இதில் இந்தியா வெற்றி பெற்றால் கோப்பையை கைப்பற்றலாம்.

தென் ஆப்ரிக்கா சென்றுள்ள இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட ‛டுவென்டி-20' போட்டியில் விளையாடி வருகிறது. முதல் போட்டியில் இந்திய அணியும், இரண்டாவது போட்டியில் தென் ஆப்ரிக்காவும் வெற்றி பெற, தொடர் தற்போது சமநிலையில் உள்ளது. இந்நிலையில் 3வது ‛டுவென்டி-20' போட்டி கேப்டவுன் நகரில் இன்று நடைபெறுகிறது. இதில் வெற்றி பெற்று கோப்பையை கைபற்றும் முனைப்பில் இரு அணிகளும் களம் காணும் என்பதால் போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது. போட்டி நடைபெறும் இன்றைய நாளில் கேப்டவுனில் மேக மூட்டம் இருக்கும் எனவும், மழை வாய்ப்பு இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக நடந்த டெஸ்ட் தொடரை தென் ஆப்ரிக்காவும்(2-1), ஒரு நாள் தொடரை இந்திய அணியும்(5-1) கைபற்றியது குறிப்பிடத்தக்கது.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
24-பிப்-201808:48:28 IST Report Abuse
Srinivasan Kannaiya வெற்றி நமதே... நாளையும் நமதே....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை