கமலுடன் பினராயி நெருக்கம் தமிழக கம்யூ.,க்கள் புழுக்கம்| Dinamalar

கமலுடன் பினராயி நெருக்கம் தமிழக கம்யூ.,க்கள் புழுக்கம்

Added : பிப் 24, 2018 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 கமலுடன் பினராயி நெருக்கம் தமிழக கம்யூ.,க்கள் புழுக்கம்



நடிகர் கமல்ஹாசனுடன், கேரள முதல்வர், பினராயி விஜயன் காட்டும் நெருக்கம், தமிழக கம்யூனிஸ்ட்கள் மத்தியில், புழுக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.நடிகர் கமல், அரசியல் கட்சி துவங்கப் போவதாக அறிவித்ததும், கேரளாவில், ஆளும் மார்க்சிஸ்ட் கட்சியைச் சேர்ந்த முதல்வர், பினராயி விஜயனை சந்தித்தார்.
இதையடுத்து, கம்யூனிஸ்ட் கட்சியுடன் அவர் கூட்டணி அமைப்பாரா என்ற, எதிர்பார்ப்பு எழுந்தது. ஆனால், அவர், தி.மு.க., தலைவர்,
கருணாநிதி முதல், தே.மு.தி.க., தலைவர், விஜயகாந்த் வரை, தொடர்ந்து பல தலைவர்களை சந்திக்க துவங்கியதும், அந்த எதிர்பார்ப்பு மாறியது.
இந்நிலையில், கமல், தன் புதுக்கட்சி குறித்த அறிவிப்பு வெளியிட்டதும், பினராயி விஜயன், அவருக்கு வாழ்த்து
தெரிவித்தார். அவர், 'கமலின் வருகை மூலம், தமிழக அரசியல் சிறக்கும். மதச்சார்பின்மை, ஜனநாயகம் போன்ற கொள்கைகளை, கமல் உயர்த்திப் பிடிப்பார் என நம்புகிறேன்' என, கூறியிருந்தார்.
இவ்வாறு கமலிடம், மார்க்சிஸ்ட் கட்சி ஆளும் மாநிலத்தின் முதல்வர் நெருக்கம் காட்டுவதை, தமிழக கம்யூனிஸ்ட்கள் விரும்பவில்லை.
தமிழகத்தில், ஒரு தொகுதியில் கூட, 'டிபாசிட்' பெற முடியாத நிலைக்கு, கம்யூனிஸ்ட் கட்சிகள் தள்ளப்பட்டுள்ளன.போதாக்குறைக்கு பினராயி விஜயன், கமலிடம் நெருக்கம் காட்டுவதும், இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர், நல்லகண்ணு போன்றோர், கமலுக்கு வாழ்த்து கூறுவதும், தவறான சமிக்ஞையை, இடது சாரி ஆதரவாளர்களுக்கு அனுப்பும் என, அவர்கள் அஞ்சுகின்றனர்.
- நமது நிருபர் -

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
25-பிப்-201810:07:28 IST Report Abuse
Bhaskaran கம்யூனிஸ்ட் களுக்கு தேவை ஒரு சில சட்டமன்ற பாராளுமன்றத்தொகுதிகள் அதை யார் பிச்சை போட்டாலும் அவர்களே ஜனநாயக வாதிகள்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X