பழனிசாமியை காப்பாற்றிய ஸ்டாலின் Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
பழனிசாமியை காப்பாற்றிய ஸ்டாலின்

அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டியதாலும், அதில், எல்லா தலைவர்களும் பங்கேற்ற தாலும், முதல்வர் தரப்பு, மகிழ்ச்சியில் இருப்ப தாக தெரிய வந்துள்ளது.சசிகலாவால் முதல்வ ராக முடியாததால், அமைச்சராக இருந்த பழனி சாமிக்கு, முதல்வராகும் வாய்ப்பு கிடைத்தது. அதன் பின், காட்சிகள் மாறின. பழனிசாமி,தன் பதவியை தக்கவைக்க,சசிகலா குடும்பத்தை ஒதுக்கினார்.

பழனிசாமியை,காப்பாற்றிய,ஸ்டாலின்


ஓராண்டுஅதனால், அவரது ஆட்சியை கவிழ்த்து விடுவது என்ற முடிவுடன், தினகரன், தீவிர முயற்சிகளை மேற்கொண்டார். அனைத்தையும் முறியடித்து, பழனிசாமி, முதல்வர் நாற்காலியில், ஓராண்டை நிறைவு செய்து விட்டார். எனினும், தமிழக அரசியல்

தலைவர்கள், பழனிசாமியை முதல்வராக ஏற்க மறுத்து, தாறுமாறாக விமர்சித்தனர்.


விரைவில், ஆட்சி கவிழ்ந்து விடும் என்றும், ஆரூடம் சொல்லி வந்தனர். இவற்றை சமாளிக்க தெரியாமல், முதல்வர் திணறி வந்தார். எம்.எல்.ஏ.,க் களை கட்டிக்காப்பதும் பெரும் சிரமமாக இருந்தது .இந்தசூழ்நிலையில், காவிரி பிரச்னையில், உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வெளியானது. தமிழகத்திற்கு வழங்க வேண்டிய தண்ணீரின் அளவு குறைக்கப் பட்டது, அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியது. இதிலிருந்து தப்ப, எதிர்க்கட்சி தலைவர், ஸ்டாலின் அருமையான வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்தார்.


'காவிரி பிரச்னை குறித்து, விவாதித்து முடிவெடுக்க, அனைத்து கட்சிகள் கூட்டத்தை அரசு கூட்ட வேண்டும்; இல்லையெனில், நாங்கள் கூட்டுவோம்' என்றார்.இதை பிடித்துக் கொண்ட முதல்வர், உடனடியாக, அனைத்து கட்சி கூட்டம் நடத்தப்படும் என, அறிவித்தார்.


சுமுக உறவு
அதன்படி, பிப்., 22ல், முதல்வர் பழனிசாமி தலைமையில், சென்னையில், அனைத்து கட்சி கூட்டம் நடந்தது. அனைத்து கட்சி தலைவர்களும் பங்கேற்று, முதல்வரிடம் கோரிக்கைகளை

Advertisement

எடுத்துரைத்தனர். ஜெ., முதல்வராக இருந்த போது, அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட தயங்கினார்.அனைத்து பெருமைகளும், தனக்கு வர வேண்டும்என்பதற்காக, அனைத்து கட்சிகளை சந்திப்பதை தவிர்த்தார்.


ஆனால், 11 ஆண்டுகளுக்கு பின், அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி, முதல்வர் பழனிசாமி, வரலாற்றில் இடம் பிடித்து விட்டார். அனைத்து கட்சி தலைவர்களையும் அழைத்து பேசி, தன்னை நிலைநிறுத்திக் கொண்டார் என, அவரது ஆதரவாளர்கள் மகிழ்ச்சி தெரிவிக் கின்றனர்.அ.தி.மு.க.,விற்கும் அனைத்து கட்சி கூட்டம், சாதகமாகவே அமைந்துள்ளது. ஏனெனில், இக்கூட்டத்தால், அனைத்து கட்சி களுடன், அ.தி.மு.க., தலைமைக்கு, சுமுக உறவு கிடைத்துள்ளது. - நமது நிருபர் -


Advertisement

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...


வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Manian - Chennai,இந்தியா
02-மார்-201811:36:20 IST Report Abuse

Manianடெபாசிட் உழைத்து சம்பாத்தியம் பண்ணின பணமானால் புத்தியும் வரும், நல்ல யுக்தியும் வரும். சீசசீ இந்த பழம் புளிக்கும் என்ற நரி கதை தான் சுடாலின் தலை எழுத்து. நைனா செய்த தவறுக்கெல்லாம் இவருக்கும் சேர்ந்து அடி விழும். அதுவே இயற்கை நியதி. என்ன சோகமான சொகுசு வாழ்க்கைக்கு நைனா 30 தலை முறைக்கு சேத்து போட்டாறு. அதுதான் இவரது அதிர்ஷ்டம்.

Rate this:
25-பிப்-201816:47:12 IST Report Abuse

சட்டிசன் தொலைக்காட்சியில் கடந்த சில வாரங்களாக கர்நாடக அரசு நடத்தும் நந்தினி பால் நிறுவனத்தின் விளம்பரங்கள் வெகுவாக வருகின்றன! இதற்கு என்ன காரணம்?

Rate this:
Shriram - Chennai,இந்தியா
25-பிப்-201813:59:22 IST Report Abuse

Shriramரஜினி கட்சி ஆரம்பித்த பிறகு இரு கட்சிகளும் இணைந்து விடலாம்.. என்ன அரசியல். அருமை..ண

Rate this:
Srikanth Tamizanda.. - Bangalore,இந்தியா
25-பிப்-201813:52:08 IST Report Abuse

Srikanth Tamizanda..ராஜதந்திரமா? ஒரு வெங்காயமும் இல்லை. மு.க குடும்பத்தின் கர்நாடக சொத்து, இவர்களின் கன்னட‌ சாட்டிலைட் சானல் வியாபாரம்.. இதெல்லாம் நடக்கணுமா வேண்டாமா?? எந்த தமிழக, கர்நாடக பிரச்சனையிலும் இரட்டை வேடம் தான்.. தமிழ் சேனலில் கர்நாடகத்தை கண்டிப்பார்கள், கன்னட சேனலில் தமிழ் நாட்டை கண்டிப்பார்கள்.. அவ்வளவு பற்று..

Rate this:
தாழ்ந்த தமிழகமே - Chennai,இந்தியா
25-பிப்-201813:38:50 IST Report Abuse

தாழ்ந்த தமிழகமே இதே ஜெ உயிரோடு இருந்திருந்தால் ....

Rate this:
25-பிப்-201810:30:42 IST Report Abuse

MurugeshSivanBjpOddanchatramஅனைத்து கட்சி கூட்டத்தில் தி க வுக்கு என்ன வேலை, தி க வுக்கு பிளைப்பே இந்து மதத்தை இழிவு படுத்துவது மட்டுமே,இவனுங்க ஒரு கட்சி, அவனுங்களுக்கு அழைப்பு வேறு.

Rate this:
சந்தோசு கோபு - Vellore,இந்தியா
25-பிப்-201809:17:56 IST Report Abuse

சந்தோசு கோபுஅண்டை மாநிலம் சார்ந்த பிரச்சினை என்பதால் காவிரி விவகாரத்தில் ஸ்டாலின் ஆதாயம் பார்க்காமல் நடந்து கொண்டது நல்ல விஷபம் தான்.. ஆனால் தமிழக அளவில் இந்த அரசு பெரும்பான்மையை இழந்த, ஆட்சி செய்ய எந்த தார்மீக உரிமையும் இல்லாத சட்ட விரோத ஆட்சி தான் என்பதை மக்கள் முன் தொடர்ந்து கருத்துக்களை எடுத்து வைக்க வேண்டும்.. நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்துவிட்டதாலேயே எதிர்க்கட்சியின் வேலை முடிந்தது என்று ஓய்ந்து விடுவது விவேகமல்ல.. தீர்ப்பு எப்படி வேண்டுமானாலும் இருக்கட்டும்.. ஆனால் அந்த தீர்ப்பு வராமல் வேண்டுமென்றே தாமதப் படுத்தப் படுகிறது என்பதையும் மக்கள் முன் இந்நேரம் பிரச்சாரமே செய்திருக்கணும் திமுக... நல்லவனா இருப்பது.. விவேகமுள்ள நல்லவனா இருப்பது.. இது ரெண்டுக்கமுள்ள வித்தியாசத்தை ஸ்டாலின் அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்..

Rate this:
Manian - Chennai,இந்தியா
03-மார்-201803:36:25 IST Report Abuse

Manianஎன்னப்பா, தமிழ் நாட்டில் எல்லோருமே தார்மிக உணர்வுடன் வாழ்கிறர்கள்? லஞ்சம் கொடுப்பது, பிறருக்கு எந்த உதவியும் செய்யாமல் இருப்பது, சுயநலம்... பெரிய பட்டியல் உள்ளது. தர்மம் 1947 ல் சுதந்திரம் வைத்தான் இரவே ஓடிவிடடதே. அப்போது தாரமீக முறைமை பர்றி சுடாலினாருடன் பேசலாமா?...

Rate this:
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
25-பிப்-201808:25:21 IST Report Abuse

Srinivasan Kannaiyaராஜதந்திரம்...?

Rate this:
Manian - Chennai,இந்தியா
25-பிப்-201808:19:39 IST Report Abuse

Manianஅய்யா, பழனிசாமிக்கு இதில் நஷ்டமும் இல்லை. என்ன குத்திச்சாலும், ராஜ்ய சபா, லோக் சபா இரண்டிலும் மெஜாரிட்டி வராத வரை எதுவுமே மாறாது. கொஞ்ச நாழியாவது நிம்மதியாக தூங்கலாமே என்ற எண்ணம்தான்.

Rate this:
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
25-பிப்-201807:23:24 IST Report Abuse

Kasimani Baskaranசிலருக்கு டெப்பாசிட் போனால் கூட புத்தி வராது...

Rate this:
மேலும் 5 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement