கமல், ரஜினியின் வருகை ஆயிரங்காலத்து பயிர்களுக்கு ஆபத்து? Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
கமல், ரஜினியின் வருகை
ஆயிரங்காலத்து பயிர்களுக்கு ஆபத்து?

நடிகர் கமல், அதிகாரபூர்வ அரசியல்வாதியாகி விட்டார். அவரது அரசியல் பிரவேசத்தை, தமிழகம் மட்டுமின்றி, நாடே உன்னிப்பாக கவனித்தது.

கமல், ரஜினியின், வருகை, ஆயிரங்காலத்து, பயிர்களுக்கு ஆபத்து?


தமிழ் உள்ளிட்ட, தென் மாநில திரைப் படங்களில் முத்திரை பதித்ததுடன், சில ஹிந்தி படங்கள் மூலம், நாட்டின் அனைத்து பகுதிகளிலும், கமல் நன்கு பரிச்சயமானது தான், இதற்கு காரணம். அதனால், அரசியல் நிகழ்வுகளில் ஆர்வம் உள்ள அனைவரின் கவனமும், பிப்., 21ல், மதுரையில் பதிந்ததில் ஆச்சரியம் இல்லை. அவர்களின் எதிர்பார்ப்புகளை, கமல் நிறைவு செய்வாரா?


விமர்சனங்கள்தமிழகத்தில், பல்வேறு அரசியல் மாற்றங்கள் ஏற்பட்டபோது, மவுனம் காத்த கமல், திடீரென அரசியலில் குதித்தது, பல்வேறு விமர்சனங் களை ஏற்படுத்தியது. ஜெயலலிதாவின் மறைவு, கருணாநிதியின் உடல் நலக்குறைவு என, தமிழகத்தின் இரு முக்கிய அரசியல் மாற்றங்களால் உந்தப்பட்டு, கமல், இம்முடிவை, முதலாவதாக எடுத்திருக்கலாம்.


அறுபது வயதை கடந்ததால், திரைப்படங் களில், கதாநாயகனாக தொடர்ந்து பயணிப்பதில் நிலவும் சிரமமும், அரசியல் பிரவேசத்தை நோக்கி தள்ளியிருக்கக்கூடும். ரஜினியின் அரசியல் வருகைக்கும், இவையே காரணமாக கருதப்படுகிறது. எனினும், தங்களை கோடிகளில், 'மிதக்க' வைத்த, தமிழக மக்களுக்கு, அரசியல் மூலம் நன்மை செய்யலாம் என்றும், ஒருவேளை அவர்கள் கருதியிருக்கலாம்.


அதை, மதுரை கூட்டத்தில் கமல் ஒப்புக்கொண்டுள்ளார். ஆனால், இவை மட்டும், அவர்களை அரசியலுக்கு தகுதியானவர்களாக ஆக்கிவிடுமா...யார் வேண்டுமானாலும், அரசியலுக்கு வரலாம் என்பது இந்திய ஜனநாயகம்.


எனவே, அத்தகைய கேள்வி களுக்கே இடமில்லை என்பது, ஆதரவாள ர்களின் வாதம். இது ஒருபுறமிருக்க, கமலின் வருகை, தமிழக அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்துமா; யாரை அது பாதிக்கும் என்ற, விவாதம்

தீவிரமாகியுள்ளது.கமலின் வருகையால், திராவிட கட்சிகள், குறிப்பாக, தி.மு.க.,வுக்கு அதிக பாதிப்பு இருக்கலாம்.


மனக்கசப்புநீண்ட நாள் பழகிய காரணத்தால், கருணாநிதியை பார்க்க, கமலுக்கு, 'அப்பாயின்ட்மென்ட்' தந்த, தி.மு.க., செயல் தலைவர், ஸ்டாலின், 'அரசியலில் காகிதப் பூக்கள் மலரலாம்; மணக்காது' என்றும், 'தி.மு.க., ஆயிரங்காலத்து பயிர்; அதை அழிக்க முடியாது' என்றும், தன் மனக்கசப்பை வெளியிட்டுள்ளதி லேயே, அதை அறியலாம்.


தமிழகத்தில், சிறுபான்மையினரின் ஆதரவை அதிகம் பெற்ற, ஒரே கட்சி, தி.மு.க., தான். அவர்கள் மத்தியில், இன்னமும் கணிசமான செல்வாக்கு, தி.மு.க.,வுக்கு உள்ளது. ஆனால், கமலின் சிறுபான்மையின ஆதரவு கருத்துக்கள், கலாமின் வீட்டில் இருந்து அரசியல் பயண புறப்பாடு, மதவாத எதிர்ப்பு போன்றவை, தி.மு.க.,வின் கொள்கைகளை சார்ந்தே உள்ளன. அதனால், கருணாநிதிக்குப் பின், குறிப்பாக, சென்னை, ஆர்.கே.நகர் தேர்தல் முடிவுக்குப் பின், தி.மு.க.,விற்கு தொடர்ந்து ஓட்டு போடுவதா என சிந்திப்போருக்கு, கமல் ஒரு நல்ல மாற்றாக தென்படக்கூடும்.


மேலும், தன்னை நாத்திகவாதியாகவே, கமல் தொடர்ந்து சித்தரித்து வருவதும், அவருக்கு வலு சேர்க்கலாம்.உட்கட்சி பூசலால் தள்ளாடும், மற்றொரு திராவிட கட்சியான, அ.தி.மு.க.,வின் போக்கு, அதன் வாக்காளர்களை கடுப்பேற்றி உள்ளது. சினிமாவை ஆதாரமாக வைத்து வளர்ந்த, அக்கட்சியின் வாக்காளர்கள், கமல், ரஜினியின் கட்சிகளுக்கு செல்லும் வாய்ப்புகள் அதிகம். குறிப்பாக, வெகுஜன மக்கள், ரஜினியின் பக்கம் தாவுவதற்கான வாய்ப்பு அதிகம் என்பதை, திராவிட கட்சிகள் உணராமல் இல்லை.அக்கட்சிகள், சுதாரிக்காவிட்டால், அந்த, 'ஆயிரங்காலத்துப் பயிர்'களின் வீழ்ச்சியின் துவக்கமாக, கமல், ரஜினியின் வருகை அமைந்து விடக்கூடும்.

இடது இல்லையா?கமலின், ம.நீ.மை.,க் கட்சியில், 'திராவிடம்' என்ற சொல் இல்லாவிட்டாலும், கட்சிக் கொடியில் உள்ள ஆறு கைகள், திராவிட பிராந்தியமான ஆறு தென் மாநிலங்களை குறிப்பதாக, கமல் சுட்டிக்காட்டி யிருப்பது, 'திராவிடம்' தன்னை வாழவைக்கும் என, அவர் நம்புவதை காட்டுகிறது. கமல், 'நான் இடதும் இல்லை, வலதும் இல்லை; மத்தியில் இருக்கிறேன்' என,சொல்லியிருக்கிறார். ஆனால், தன்னை இடதுசாரியாக காட்டிக்கொள்ள, கமல் எப்போதும் தயங்கியதில்லை.


அவரை, கேரளத்தின் முதல்வரும், மார்க்சிஸ்ட் கட்சியின் தலைவருமான, பினராயி விஜயன் புகழ்ந்து தள்ளினார். அவரைத் தான் முதன்முதலில், கமல் சந்தித்தார்; அவரிடம், அரசியல் பாடம் கற்றதாகவும் சொன்னார்.இதை, தமிழத்தில்உள்ள கம்யூனிஸ்ட்கள் ரசிக்கவில்லை. மேலும், கம்யூ., கட்சியை சேர்ந்த, பிரபல எழுத்தாளர்,

Advertisement

பாரதி கிருஷ்ணகுமார், ம.நீ.மை.,வின் உயர் மட்டக் குழு உறுப்பினராக ஆகியிருப்பதும், அவர்களுக்கு ஒப்பவில்லை; சமூக வலைதளங்களில், அவர்களின் புலம்பல்களை பார்க்க முடிகிறது.


இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர், நல்லகண்ணு உடனான சந்திப்பையும், அவர்கள் ரசிக்கவில்லை. தமிழகத்தில் மிச்சம் மீதியிருக்கும், சில லட்சம் ஓட்டு வங்கியில் பொத்தல் விழுந்து, 'இடது' கரைந்து போகும் அபாயம் ஏற்பட்டு இருப்பதை, அவர்கள் உணர்ந்து உள்ளனர்.இதேபோல், ஊழல் எதிர்ப்பு போராளியாக காட்டிக்கொள்ளும், டில்லி முதல்வர், கெஜ்ரிவாலுடனான கமலின் நட்பு, நேர்மையை விரும்பும், உயர் மற்றும் நடுத்தர வர்க்கத்தினரை கவரக் கூடும்.


ஆனால், அரசியலில் மிக முக்கியமான, கொள்கை அறிவிப்பில், முதல் நாளில், கமல் கோட்டை விட்டிருப்பது என்னவோ உண்மை. அந்த சறுக்கலை சரிசெய்து, அதை தெளிவுபடுத்தா விட்டால், அவரது, 'டுவிட்டர்' பதிவு போல், ம.நீ.மை., மக்களை குழப்பாது. இல்லையேல், ம.நீ.மை.,யை, மக்கள், 'போம்மா நீ' எனக் கூறி விடுவர்.மூன்று தலைமுறைக்கு, தன் கட்சி நீடிக்க வேண்டும் என, விரும்பும் கமல், அதற்கான அடித்தளம், கொள்கை முடிவுகள், அதை சார்ந்த செயல் பாடுகள் தான் என்பதை உணர வேண்டும்.


கொள்கை முடிவுஅண்ணாதுரை, கருணாநிதி, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா போன்ற திரையுலக பிரபலங்களை, முதல்வராக பெற்ற தமிழகம், மீண்டும் கலையுலகத்தினரை, அப்பீடத்தில் எளிதில் அமர்த்த தயாராக இல்லை. அதை, கமல் மற்றும் ரஜினியின் அடுத்தகட்ட நடவடிக்கைகள், கொள்கை முடிவுகளை பொறுத்தே மக்கள் முடிவு செய்வர். சிரஞ்சீவி, விஜயகாந்த் போன்றவர்களின் வீழ்ச்சியை பார்த்து, பாடம் கற்பதும், கமலின் அரசியல் பயணத்திற்கு பலன் தரலாம்.


- நமது நிருபர் -


Advertisement

வாசகர் கருத்து (47)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Krishnarao Vasudevan - COIMBATORE,இந்தியா
25-பிப்-201821:04:32 IST Report Abuse

Krishnarao VasudevanTo be in politics in Tamilnadu one should have the following qualities: 1. At the time of election give cash for vote and do nothing good after winning 2. To encourage all type of violations viz a) support fishermen who crosses the border and fishing in sri lankan terriotory. 3. To raise voice in support of illegal cutting of red sand trees by so called Tamil people in AP and oppose actions taken by AP court. 4. To oppose NEET by making students of Tamilnadu un competitive and sub standard . 5. Raise anti Hindi and Liquor issues occasionally when other matters are not there. 6 Fielding candidates of dominated community in that area at the time of elections on one hand and oppose e sim on other hand 7. Whenever any new film released or new new technology is tried oppose it and make money. These are some of the qualities. If one does not have these it is very difficult to win.

Rate this:
chails ahamad - doha,கத்தார்
25-பிப்-201820:56:09 IST Report Abuse

chails ahamadஇந்த பகுதியில் பலரும் பலவிதமான கருத்துகளை பகிர்ந்து இருந்தாலும் , அந்த கருத்து பகிர்ந்தவர்களில் பலர் திமுக என்ற ஆலமரத்தை அசைத்திட முயற்சிப்பதை அவர்களது வெறுப்புணர்வு பதிவுகளில் இருந்து உணர முடிகின்றது, அதிமுக என்பது பரிணாம வளர்ச்சி பெற்று பா ஜ வின் பினாமியாக பிரதிபலிப்பது இன்றைய நிலையில் தவிர்க்க முடியாததுவாகி விட்டது என்பதை நாம் எல்லோரும் அறிந்துள்ளோம் , ஊழலில் திளைத்தவர்கள் அதிமுக வின் ஆட்சியாளர்கள் என்பதால் பா ஜ வின் அடிமைகளாக பணியாற்ற வேண்டிய நிர்பந்தம் அவர்களுக்கு என்பதை பாமரர்களும் அறிந்தே உள்ளதால் , இனியும் அந்த பினாமிகள் தமிழகத்தில் எடுபட இயலாத நிலைகளில் முடிவான வளர்ச்சியை அடைந்து விட்டதால் , தமிழகத்தில் எந்த காலமும் அதிமுக தலையெடுக்க இயலாது என்ற நிலைகள் தெளிவாகி விட்டதை எவராலும் மறுத்திடவும் இயலாது , ஆலமரமாய் விழுதூன்றி தளைத்திருக்கும் திமுக நாளைய காலங்களில் ஆட்சியில் அமர போகும் இயக்கம் என்பதால் , அதனை அசைத்திட இன்றைய பா ஜ கட்சியினர் தமிழக நடிகர்களை உசுப்பி விட்டுள்ளார்கள் என்பதை இந்திய அரசியல் நிலமைகளை அறிந்தவர்கள் உணர்ந்தே உள்ளதால் , எந்த நிலையிலும் நடிகர்கள் தமிழகத்தில் அரசியலில் கால் ஊன்றுவது என்பது இயலாத காரியம் என்பது மட்டும் அல்ல, இந்த நடிகர்களை ஆட்டுவிப்பவர்கள் யார் என்பதையும் மக்கள் உணர்ந்து உள்ளதால் , தமிழகத்தில் திமுக என்ற ஆலமரமே தொண்டர்களின் உழைப்பினாலும் , மக்களின் ஆதரவினாலும் ஆட்சியில் அமருவது உறுதியாகும் , ஆயிரங்காலத்து பயிராக செழித்தே நிற்பதும் உண்மையாகும் .

Rate this:
Pandianpillai Pandi - chennai,இந்தியா
25-பிப்-201820:24:16 IST Report Abuse

Pandianpillai Pandiஎல்லோரும் சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொள்ள துடிக்கின்றனர் அவ்வளவே.. ஸ்டாலின் அவர்கள் நினைத்திருந்தால் சந்தர்ப்பத்தை பயன்படுத்தி எளிதில் ஆட்சியை பிடித்திருக்கலாம் அனால் அவ்வாறெல்லாம் செய்யாமல் ஜனநாயகத்தின் மீது நம்பிக்கைவைத்து ஆர் கே தேர்தலை சந்தித்தது மட்டுமல்லாமல் ஜனநாயகம் தழைத்தோங்க என்னவெல்லாம் வழியிருக்கிறதோ அதை பயன்படுத்தி வருகிறார்.. தற்போது இருக்கும் தலைவர்களில் மிகசிறந்த பண்பும் ஆற்றலும் உடையவர் செயல் வீரர் ஸ்டாலின் அவர்கள் மட்டுமே... வேறு எவரையும் தலைவராக மக்கள் நினைக்கவில்லை என்பதை மக்களின் பேச்சுக்களில் தென்படுகிறது. வித்தைகளை காட்ட இரண்டு கோமாளிகள் தயாராகிவிட்டார்கள் மக்களும் வேடிக்கைபார்க்க ஆரம்பித்துவிட்டார்கள்.. சரியான நேரம் வரும்போது ஸ்டாலின் அவர்கள் விதையை விதைப்பார் சிந்தாமல் சிதறாமல் அறுவடை செய்து மக்களின் துயர் துடைப்பார் என நம்பிக்கைவைத்து காத்திருக்கிறார்கள் என்பது தான் நிதர்சனமான உண்மை.

Rate this:
மேலும் 44 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X