நடிகர்களுக்கு, 'செக்' வைக்க தி.மு.க.,வில் இரு அம்ச திட்டம் Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
நடிகர்களுக்கு, 'செக்' வைக்க
தி.மு.க.,வில் இரு அம்ச திட்டம்

நடிகர்கள் கமல், ரஜினியின் கட்சிகளுக்கு, தி.மு.க., அதிருப்தியாளர்கள் ஓட்டம் பிடிப்பதை தடுக்க, ஸ்டாலின் இரு திட்டங்களை வகுத்துள்ளார்.

நடிகர்களுக்கு,'செக்', வைக்க, தி.மு.க.,வில், இரு, அம்சதிட்டம்


தமிழக அரசியல் களத்தில், கமல், ரஜினியின் வரவால், அ.தி.மு.க., - தி.மு.க., பலவீன மடையும் என்ற கருத்து, பரவலாக நிலவுகிறது. முதல்வர் பதவியை கைப்பற்ற துடிக்கும், தி.மு.க., செயல் தலைவர், ஸ்டாலினுக்கு, கமல், ரஜினியின் அரசியல் பிரவேசம், முட்டுக் கட்டையாக இருக்குமோ என்ற,கேள்வி எழுந்து உள்ளது. எனவே தான், கமல், ரஜினியை காகிதப்பூ என்றும், அதற்கு மணம் இருக்காது என்றும், ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டார்.


புதிய வழி:

மேலும், தி.மு.க.,வில்,

தற்போது பதவி இல்லாமல் அதிருப்தியாளர்களாக உள்ளவர்கள், கமல், ரஜினியின் கட்சிகளுக்கு ஓட்டம் பிடித்து விடாமல் தடுக்க, இரு திட்டங்களை, ஸ்டாலின் வகுத்து உள்ளார். முதல் திட்டமாக, ஒருவருக்கு ஒரு பதவி என்ற, புதிய விதி கொண்டுவரப்பட்டுள்ளது. அதன் படி, கட்சியில், ஒன்றிற்கு மேற்பட்ட பதவிகளில் இருப்போர், உடனடியாக, ஏதாவது ஒரு பதவியில் இருந்து, தானாகவே ராஜினாமா செய்ய வேண்டும்; ராஜினாமா செய்த பதவிக்கு, புதியவரை நியமிக்க வேண்டும்.


அந்த விபரத்தை,மார்ச், 31க்குள் தெரிவிக்க வேண்டும் என, தி.மு.க., பொதுசெயலர், அன்பழகன் உத்தரவிட்டுள்ளார்.


கூடுதல் பதவிகள்இரண்டாவது திட்டம், கூடுதல் மாவட்ட செயலர்கள் நியமிக்கப்பட உள்ளனர். ஒரு சட்டசபை தொகுதிக் குள், இருமாவட்டச் செயலர்களின் பகுதிகள் இடம்பெறுகின்றன.ஒரு தொகுதியில், கட்சி நிகழ்ச்சி நடந்தால், இரண்டு மாவட்டச் செயலர்கள் பங்கேற்க வேண்டிய நிலை உள்ளது. இதனால், யார் பெரியவர் என்ற, போட்டி உருவாகி, கோஷ்டிப் பூசலுக்கு வழி வகுக்கிறது.எனவே, இரு மாவட்டங்கள் இடம்

Advertisement

பெறும் தொகுதிகளை கணக்கெடுத்து, அத் தொகுதிகளை மறு சீரமைத்து, கூடுதல் மாவட்டங்களை பிரித்து, புதிய மாவட்டச் செயலர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.


இந்தத் திட்டத்தால், தற்போது உள்ள, 65 மாவட்டங்களை விட, கூடுதலாக, சில மாவட்டங்கள் உதயமாக வாய்ப்பு உள்ளது. அப்படி பிரிக்கப்படுகிற மாவட்டங்களுக்கான பதவிகளை, அதிருப்தியாளர்களுக்கு வழங்கு வதன் மூலம், அவர்கள், கமல், ரஜினியின் கட்சிகளுக்கு ஓட்டம் பிடிப்பதை தடுக்க முடியும் என, ஸ்டாலின் கருதுகிறார். இத்திட்டத்தை நிறைவேற்ற, தி.மு.க.,வில் தனி குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.
- நமது நிருபர் -


Advertisement

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...


வாசகர் கருத்து (27)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
rmr - chennai,இந்தியா
26-பிப்-201807:46:40 IST Report Abuse

rmrதமிழரை அடிமையாக்கும் இதை தமிழர்கள் உணர்ந்து விட்டனர், இந்த திருடர்களை நம்ப போறது இல்லை .திராவிடமும் வேண்டாம் திராவிட கட்சியும் வேண்டாம்

Rate this:
Dhiraavida Kaatumiraandi - Chennai,இந்தியா
25-பிப்-201823:49:52 IST Report Abuse

Dhiraavida KaatumiraandiThe saviours from Dhiraavida parties are Rajini and Kamal. One is Kannadiga another is Aryan acting as Dravidian. Where is Thamizhandaa? Ramasamy Nayakkan was also Kannadiga. Where is Thamizhandaa? Thamizhanda ariviliyaa? Thamizhandaa muttaalaa? Thamizhanda kaatumiraandia?

Rate this:
Sakthivel - Zurch,சுவிட்சர்லாந்து
25-பிப்-201821:57:07 IST Report Abuse

SakthivelThis is about ponmudi. He is running politics on e basis in villupuram. But he never wins again in villupuram hereafter. Last election, he did not choose to contest in Villlupuram . Because he knew, if he contest. he would not win. Even though he is closer to Stalin and but never wins people of heart in villupuram district. Every time he was winning using money power but I would not work all the time. Now we have showed whom we are. DMK leaders has to understand this.

Rate this:
S Rama(samy)murthy - karaikudi,இந்தியா
25-பிப்-201819:10:37 IST Report Abuse

S Rama(samy)murthyசுடலை அவர்களே , உமது திமுக அணைத்து கொள்கைகளை பின்பற்றி காமல் ஹுசைன் கட்சி வேறு ஆரம்பித்து விட்டார் , கட்சியை கட்டு கோப்பாக வைத்துஇருக்க , வள்ளல் தினகரன் போல வட்டம் , மாவட்டம் , தொண்டர்களுக்கு தொழிசாலை போல மத சம்பளம் கொடுக்கவும் . நிச்சயம் திமுக காப்பாற்ற வாய்ப்பு உண்டு . சுப ராமா காரைக்குடி

Rate this:
rmr - chennai,இந்தியா
25-பிப்-201819:06:12 IST Report Abuse

rmrதொலைக்காட்சி செய்தி தாள் விளம்பரங்கள் இல்லை என்றால் இவர்கள் அனைவருமே ஒரு பூஜ்யம் தான் அவர்கள்வெட்டி விளம்பரம் செய்யும் பணத்தில் தமிழ்நாட்டு கடன்கள் அனைத்தையும் சேரி செய்து விடலாம் பல நல்ல திட்டங்களை செயல் படுத்தலாம் அனா இவனுங்க எங்க செய்ய போறாங்க ? ஒரு ஆணை கேட்டிருக்கானுங்களா நீர் மேலாண்மை திட்டம் ஏதாச்சும் இர்ருக்குதா இல்ல செஞ்சானுங்கள ? கூவம் சுத்தம் செய்றனு சொல்லி அட்டையை போட்டது தான் இவர்கள் சாதனை தமிழக மக்கள் அனைவர்க்கும் குடிக்க நல்ல குடிநீர் இலவசமா கொடுக்க முடியுமா இவர்களால் ?

Rate this:
skv - Bangalore,இந்தியா
25-பிப்-201815:25:15 IST Report Abuse

skv<srinivasankrishnaveni>பெரியவர் கதைவெசனகர்த்தா பிள்ளை சினிமாலே நடிக்கலியா (குறிஞ்சிமலர்)பேரன் தானே படமெடுத்து நடிச்சு காசுபார்க்கும் கலைஞன் . பேசுறாங்களே நடிகாலுக்கு செக் வைக்கணும்னு ஹஹஹஹஹ் பிக் ஜோக் தான் இது

Rate this:
ilicha vaay vivasaayi (sundararajan) - maduraikku therku pakuthi ,இந்தியா
25-பிப்-201815:03:03 IST Report Abuse

ilicha vaay vivasaayi  (sundararajan)கழக உண்மைத்தொண்டன் கூறும் அறிய யோசனை கெட்டியாக பிடித்துக் கொள்ளவும் . மாவட்டம் பிரிச்சி ஒரு 50 பெருசு தான் உக்காரும் . அதுக்கு பதிலா >> ஒவ்வொரு தெருவுக்கும் ஒரு செயலாளர் ன்னு சொல்லிடுங்க . நிறைய பேருக்கு பதவி குடுக்கலாம் > 3 ஷிபிட் உண்டு. 8 மணி நேரத்துக்கு ஒரு செயலாளர் . இப்டி செஞ்ச ஒரே மாவட்டத்துல 3 செயலாளர் இருப்பாங்க . >> மாதம் ஒரு செயலாளர்ன்னு சொல்லிடுங்க ஒரு மாவட்டத்திற்கு ஒரு வருடத்திற்கு 36 செயலாளர் இருப்பாங்க . >>கட்சியை உலக ரேஞ்சுக்கு கொண்டு போயிடுங்க (உலக திமுக). அமெரிக்காவுல , ஜப்பானில் என்று.அங்க உள்ள ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு வருடத்திற்கு 36 செயலாளர்கள் . எல்லாருக்கும் பதவி கிடைக்கும் .

Rate this:
karupanasamy - chennai,இந்தியா
25-பிப்-201816:21:23 IST Report Abuse

karupanasamyஎல்லோருக்கும்னா? நெடிய நீண்ட கியூ இருக்குதே?...

Rate this:
Endrum Indian - Kolkata,இந்தியா
25-பிப்-201812:57:02 IST Report Abuse

Endrum Indian'செக்" கொடுங்கள் பெரிய அமவுண்ட் நீங்கள் சொல்வதையெல்லாம் அவர்கள் செய்வார்கள். அதுவே அவர்களை மடக்கும் ஆயுதம், அது மட்டுமே அவர்களுக்குத்தெரியும்.

Rate this:
கைப்புள்ள - nj,இந்தியா
25-பிப்-201810:22:58 IST Report Abuse

கைப்புள்ளதி.மு.க வை காப்பாற்ற ஒரே வழி தி.மு.க வை கலைத்து விடுவதே. தி.மு.க.வால் ஒவ்வொருவருடைய வாழ்விலும் ஏற்பட்ட காயங்களும் வலிகளும் அவர்கள் செய்த ஊழல்களும் மக்களின் மனதில் தீராத வடுக்களாய் இன்னும் வாழ்ந்து கொண்டு இருக்கிறது. அதை மறக்க முடியாமல் மக்கள் தவிக்கிறார்கள்.

Rate this:
கைப்புள்ள - nj,இந்தியா
25-பிப்-201810:18:40 IST Report Abuse

கைப்புள்ளஇவ்வளவு மோசமாகவும் வீக்காகவும் வலிமையற்றும் கோமாளித்தனமாகவும் அ.தி.மு.க இருந்தும் கூட, அதுவே அதன் பலமாக கருதப்பட்டு மீண்டும் அ.தி.மு.க வே ஆட்சி அமைக்கும். தி.மு.க வின் ரவுடி ராஜ்யத்தில் ஏற்பட்ட பயம் மக்களுக்கு இன்னும் போகவில்லை. . தி.மு.க வை இன்னும் ஒரு மிக பெரும் ரவுடி கூட்டமாகத்தான் பார்க்க முடிகிறதே தவிர, அவர்களுக்கு மக்கள் நலனிலெல்லாம் கொஞ்சம் கூட விருப்பம் கிடையாது.

Rate this:
மேலும் 16 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement