நடிகர் கமல் பற்றி டில்லி கருத்து என்ன?| Dinamalar

நடிகர் கமல் பற்றி டில்லி கருத்து என்ன?

Added : பிப் 24, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
நடிகர் கமல் பற்றி டில்லி கருத்து என்ன?

நடிகர் கமல் பற்றி டில்லி கருத்து என்ன?
நடிகர் கமல் துவங்கியுள்ள புதுக்கட்சி மற்றும் அவரது அரசியல் பிரவேசம் குறித்து, வட மாநிலங்களில் அதிகம் பேசப்படுகிறது. கமல், சில ஹிந்தி படங்களில் நடித்துள்ளார் என்பதால், இங்குள்ளவர்கள் அவரது அரசியல் குறித்து ஆர்வம் காட்டுகின்றனர்.டில்லி மீடியாக்கள், 'கமலுடன், டில்லி முதல்வர்' என, கமலின் மதுரை கூட்டம் பற்றி செய்தி வெளியிட, 'எதற்குகெஜ்ரிவாலை பக்கத்தில் வைத்து, கமல் கட்சி துவங்கினார்' என, டில்லி அரசியல் மற்றும் அதிகாரிகள் வட்டாரங்களில் கேள்வி எழுப்பப்படுகிறது.கெஜ்ரிவாலின் பரபரப்பு, அதிரடி, அடாவடி அரசியல், பலரை முகம் சுளிக்க வைத்துள்ளது. இவரது கட்சி, எம்.எல்.ஏ., ஒருவர், டில்லி அரசின் தலைமைச்செயலரை கன்னத்தில் அடித்துவிட்டார். அதனால், ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள், கெஜ்ரி வால் அரசுக்கு ஒத்துழைப்பு தர மறுத்து வருகின்றனர். இந்நிலையில், கெஜ்ரிவால் இதைப் பற்றியெல்லாம் பொருட்படுத்தாமல் கமலின் கூட்டத்திற்கு வந்துவிட்டார்.
டில்லி அரசியல் வட்டாரங்களில், கெஜ்ரிவாலை, ஒரு ஜோக்கர் என அழைக்கின்றனர். 'எந்த ஒரு விஷயத்தை எடுத்தாலும், ஏடாகூடமாக பேசுவது தான் இவரது கட்சியினர் வேலை; அப்படிப்பட்டவரை பக்கத்தில் வைத்து, கட்சி துவங்கியுள்ளாரே கமல்;
சகுனம் சரியில்லையே' என்கிறது, டில்லி வட்டாரம்.இதற்கிடையே, டில்லியில் நவீன வசதிகளுடன் புதிதாக திறக்கப்பட்டுள்ள, பா.ஜ., அலுவலகத்தில் மூத்த பத்திரிகையாளர்களைச் சந்தித்தார், அமித் ஷா. கமலைப் பற்றி கேட்ட போது, 'புதிய அலுவலகத்தில் கேட்கக் கூடிய முதல் கேள்வியா இது; கமல், ஒரு கம்யூனிஸ்ட்' என்றாராம், அமித் ஷா.

மோடியை திட்டும்பா.ஜ., தலைவர்
பிரதமர் மோடியை பார்த்து, பா.ஜ.,வினர் பயந்து நடுங்குகின்றனர். அவருக்கு எதிராகவோ அல்லது ஆக்கபூர்வமான கருத்தையோ சொல்ல தயங்குகின்றனர். எம்.பி.,க்களும், அமைச்சர்களும் மவுனம்காக்கின்றனர்.இந்நிலையில், பா.ஜ., - எம்.பி., ஒருவர், மோடியை திட்டித் தீர்க்கிறார். பார்லிமென்ட் சென்ட்ரல் ஹாலில் அமர்ந்தபடி, மோடியை வசை பாடுகிறார், இந்த, 84 வயதான, எம்பி., அவர் வேறு யாருமல்ல; முன்னாள் அமைச்சரும், கட்சியின் மூத்த தலைவருமான, முரளி மனோகர் ஜோஷி தான்.வயதான தலைவர்களை, 'கட்சிக்கு வழிகாட்டுங்கள்' என கூறி, ஒரு கமிட்டியில் சேர்த்துவிட்டார் மோடி. வழி காட்டும் குழு என அழைக்கப்படும் இந்த கமிட்டியில் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி ஆகியோர் உள்ளனர்.
'பெயர் தான் வழிகாட்டும் குழு; ஆனால், ஒரு முறை கூட இந்த குழு கூடியதில்லை' என்கிறார் ஜோஷி. 'வயதான எங்களின் வாயை ஒடுக்க, இப்படி ஒரு குழுவை அமைத்து, ஓரங்கட்டி விட்டார் மோடி' என, புலம்பித் தள்ளுகிறார், ஜோஷி.மோடியின் திட்டங்களையும் கடுமையாக விமர்சிக்கிறார். இதைக் கேட்டு, எதிர்க்கட்சியினர் சந்தோஷப்படுகின்றனர். பார்லிமென்ட் சென்ட்ரல் ஹாலில் ஜோஷியைப் பார்த்தால், பா.ஜ., - எம்.பி.,க்கள் நடுங்கி ஓடுகின்றனர். 'மோடியைப் பார்த்து பயப்படுவதுடன், ஜோஷியைப் பார்த்தும் ஓட வேண்டியிருக்கிறதே' என, புலம்புகின்றனர், பா.ஜ., -எம்.பி.,க்கள்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை