அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., அணி மாறிய பின்னணி?| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., அணி மாறிய பின்னணி?

Added : பிப் 25, 2018 | கருத்துகள் (17)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
MLA,A.D.M.K,ADMK,அ.தி.மு.க,அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்,எம்.எல்.ஏ.

கள்ளக்குறிச்சி: எம்.எல்.ஏ., பிரபு, திடீரென தினகரன் அணியில் இணைந்ததற்கு, உட்கட்சி பிரச்னையே காரணம் என்பது, வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

விழுப்புரம் மாவட்டம், கள்ளக்குறிச்சி தொகுதி, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., பிரபு, தினகரனை, நேற்று முன்தினம் சந்தித்து ஆதரவு தெரிவித்தார். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள், நான்கு பேரும், முதல்வர் பழனிசாமிக்கு ஆதரவளித்த நிலையில், பிரபு அணி மாறியது, பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கள்ளக்குறிச்சியை தனி மாவட்டமாக்க, பிரபு, எம்.எல்.ஏ., எடுத்த முயற்சி வெற்றி பெற்றுவிடக் கூடாது; பிரவுக்கு நல்ல பெயர் கிடைக்கக் கூடாது என, விழுப்புரத்தைச் சேர்ந்த, அமைச்சர் சண்முகம், மாவட்ட செயலர், குமரகுரு ஆகியோர் முட்டுக்கட்டை போட்டதாக, பிரபு தரப்பு குற்றஞ்சாட்டுகிறது.

இதனால், உட்கட்சி மோதல் உச்சகட்டத்துக்கு சென்றது. கட்சி மேலிடத்தின் கவனத்துக்கு கொண்டு சென்றும், பிரச்னைக்கு தீர்வு காணப்படவில்லை. மேலும், முதல்வரை பலமுறை சந்தித்து, கள்ளக்குறிச்சி தொகுதியில் உள்ள முக்கிய பிரச்னைகளை எடுத்துக் கூறி, நிதி ஒதுக்கீடு செய்ய கோரிக்கை விடுத்தும், பிரபுவுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

இதற்கு மேலும் காத்திருப்பது பயனில்லை என்ற முடிவுக்கு வந்த பிரபு, தினகரன் அணியில் ஐக்கியமாகி உள்ளார். இவரை போலவே, விழுப்புரம் மாவட்டத்தில், பல முக்கிய நிர்வாகிகள் அதிருப்தியில் உள்ளனர்.

- நமது நிருபர் -

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (17)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Raja - bangalore,இந்தியா
25-பிப்-201812:44:31 IST Report Abuse
Raja எப்படியோ ஆட்சி கலைஞ்சா சரி.
Rate this:
Share this comment
Cancel
ந.செல்வசேகரன்.தேனி ஆளும்கட்சியில் இருந்து முதல்வரிடம் போராடி தொகுதி நலத் திட்டங்களை பெற்றிருந்தால் பாராட்டலாம்,ஆர் கே நகர் தேர்தலில் தொகுதிமக்களுக்கு 20 ரூபாய் நோட் கொடுத்தமாதிரி!இவருக்கு 2000 நோட்டை கொடுத்து இணைத்துள்ளார் தினகரன்!தினகரனிடம் சென்றால் தொகுதிக்கு நல்லது நடக்குமா! இல்லை தினகரன் கள்ளக்குறிச்சியை தனிமாவட்டமாக அறிவிக்க தினகரன் என்ன ஆளும்கட்சியா?மக்கள் கேணயர்கள்!
Rate this:
Share this comment
Cancel
ilicha vaay vivasaayi (sundararajan) - maduraikku therku pakuthi ,இந்தியா
25-பிப்-201810:28:03 IST Report Abuse
ilicha vaay vivasaayi  (sundararajan) அப்படியே இவரை கொத்தா சட்டையை பிடிச்சு உள்ள வெச்சு இவரோட தொலைபேசி அழைப்புகள் மற்றும் நேர் சந்திப்புகளின் குரல் பதிவு இருந்தால் விசாரணை செய்யுங்க எவ்வளவு கோடி வாங்கிட்டு கேடியா மாறினார் என்று புரியும்
Rate this:
Share this comment
Cancel
ilicha vaay vivasaayi (sundararajan) - maduraikku therku pakuthi ,இந்தியா
25-பிப்-201809:13:07 IST Report Abuse
ilicha vaay vivasaayi  (sundararajan) ஒரு வோட்டுக்கே குக்கர் மற்றும் 10000 ரூபாய் என்றால் ஒரு MLA க்கு வாழ்நாளுக்குத் தேவையான கல்லா கட்டி விட்டார். உண்மையில் மக்கள் பிரச்சினை என்றால் ஒரு கேடு கெட்ட குக்கரிடம் ஏன் செல்ல வேண்டும் .எப்படியும் ஒரு 10 சி தேறி இருக்கும் குறைந்த பட்சம் .
Rate this:
Share this comment
Rajendra Bupathi - GANGAVALLI - SALEM,இந்தியா
25-பிப்-201811:11:55 IST Report Abuse
Rajendra Bupathiஅப்புறம் கள்ளகுறிச்சிக்கு நல்லது செய்யனுமின்னா பணம்வேணாமா?...
Rate this:
Share this comment
Cancel
Kuppuswamykesavan - Chennai,இந்தியா
25-பிப்-201808:49:37 IST Report Abuse
Kuppuswamykesavan எல்லாம் சரிங்க ஐயா. ஆனா, இப்போ, ஆன்மீகவாதிகள் போல, போலியாக நடித்து, பொதுமக்களை ஏமாற்றும் கயவர்கள், எண்ணிக்கையில், அதிகமாகிக்கினு வராங்களேய்யா?.
Rate this:
Share this comment
Cancel
Amirthalingam Sinniah - toronto,கனடா
25-பிப்-201808:47:33 IST Report Abuse
Amirthalingam Sinniah கொதித்த எண்ணெய் சட்டியிலிருந்து, நெருப்புக்குள் கு தி த் து விட்டார்.
Rate this:
Share this comment
Cancel
ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா
25-பிப்-201807:59:23 IST Report Abuse
ஆரூர் ரங் தனக்கு //நிதி ஒதுக்கீடு செய்ய கோரிக்கை விடுத்தும், பிரபுவுக்கு ஏமாற்றமே மிஞ்சியது/. அதனை தினகரன் செவ்வனே செய்துவிட்டார்
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
25-பிப்-201807:52:48 IST Report Abuse
Srinivasan Kannaiya மக்கள் சேவைக்கா இவர்கள் கட்சி மாறுகிறார்கள்... பணபதவி மோகம்தான்...
Rate this:
Share this comment
Cancel
rajan - kerala,இந்தியா
25-பிப்-201807:50:39 IST Report Abuse
rajan பாவம் இந்த தம்பி. ஆட்டைய போடா அரசு கஜானாவில் காசு இல்லை. அடுத்த முறை இந்த கட்சிக்கு வெற்றி வாய்ப்பு இல்லை. இருக்கிற காலத்தில காசு பணம் சேர்க்க என்ன பண்ணுறது. அப்படியே போயி அந்த குக்கர் விசில் கன்டைனர்ல ஏதாச்சும் காசு பார்க்கலாம்னு டோக்கன் வாங்கி இருப்பான். அவன் ஆத்துற அது இருக்கே சொல்லி மாளாதுப்பா.
Rate this:
Share this comment
Cancel
தங்கை ராஜா - tcmtnland,இந்தியா
25-பிப்-201807:37:11 IST Report Abuse
தங்கை ராஜா நீரடித்து நீர் விலகுவது இல்லை. ஒரே குட்டைக்குள் இருந்து கொண்டு விளையாட்டு காட்டிக் கொண்டிருக்கிறார்கள். ஊடகங்களுக்கு தீனி என்பதை தவிர ஒரு செய்தியும் இதில் இல்லை.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை