" அவர்கள் 48 ஆண்டு, நாங்கள் 48 மாதம் தான்" - எடை போட தயாரா ? புதுச்சேரியில் பிரதமர் மோடி கேள்வி| Dinamalar

" அவர்கள் 48 ஆண்டு, நாங்கள் 48 மாதம் தான்" - எடை போட தயாரா ? புதுச்சேரியில் பிரதமர் மோடி கேள்வி

Updated : பிப் 25, 2018 | Added : பிப் 25, 2018 | கருத்துகள் (86)
Advertisement
ஆரோவில், பொன்விழா, மோடி,

புதுச்சேரி: கடந்த 48 ஆண்டு காலமாக ஆட்சி செய்த காங்கிரஸ் கட்சி இந்த நாட்டிற்கு என்ன செய்தது ? என பிரதமர் மோடி புதுச்சேரியில் நடந்த பொதுக்கூட்டத்தில் கேள்வி எழுப்பினார். மேலும் 48 மாதங்களில்பா.ஜ., அரசு பல்வேறு சாதனைகள் புரிந்துள்ளது என்றும் குறிப்பிட்டார். புதுச்சேரியில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மேலும் பேசியதாவது: புதுச்சேரி சித்தர்களும், தெய்வீக மனிதர்களும் வாழ்ந்த பூமி ஆகும். புண்ணிய பூமிக்கு வந்ததை நான் புண்ணியமாக கருதுகிறேன். இங்கு வாழும் மக்களும் பாக்கியசாலிகள். அரவிந்தருக்கு அடைக்கலம் கொடுத்தவர்கள் இப்பகுதியினர். சுதந்திர போராட்டம் நடந்த போது புதுச்சேரியில் தான் பத்திரிகை சுதந்திரம் இருந்தது. இரண்டு சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் புதுச்சேரி மக்கள், பாரதியாரை வரவேற்று தேசிய கவிஞனாக்கினீர்கள். புதுச்சேரியில் ஆட்சியில் இருப்பவர்கள் இந்த மண்ணிற்கு அநியாயம் இழைத்துள்ளனர். மக்களின் சக்தியை ஆட்சியாளர்கள் புரிந்து கொள்ளவில்லை. இங்கு வளர்ச்சிக்கு தடை ஏற்பட்டுள்ளது. விடுதலை பெற்றது முதல் புதுச்சேரி இன்னும் முன்னேறாமல் உள்ளது. அரசியல் மற்றும் நிர்வாகம் காரணமாக புதுச்சேரி பின்தங்கியுள்ளது ஏன் என சிந்திக்க வேண்டும்.
நாட்டின் முதல் பிரதமர் 17 ஆண்டுகள் ஆட்சி புரிந்தார். அவரது மகள் 14 ஆண்டுகள் நிர்வகித்தார். மகன் 5 ஆண்டுகள் ஆட்சி செய்தார். இதுபோல 10 ஆண்டுகள் இந்த குடும்பத்தின் ரிமோட் கண்ட்டேரால் ஆட்சி நடந்தது. ஒரு குடும்பம் 48 ஆண்டுகள் ஆட்சி செலுத்தியுள்ளது. காங்கிரஸ்காரர்கள் 48 ஆண்டுகள் ஆட்சி செய்துள்ளனர். நாம் 48 மாதங்கள் நிறைவு செய்ய போகிறோம். அறிவு ஜீவிகள் சிந்திக்க வேண்டும். நாங்கள் செய்ததை பாருங்கள், அவர்கள் என்ன செய்தார்கள் என பாருங்கள். நாட்டு மக்களின் முன்னேற்றத்திற்கு நாங்களும், அவர்களும் செய்ததை எடை போட்டு பார்ப்போம். புதுச்சேரி முன்பு ஜவுளிதுறையில் பிரகாசித்தது. இப்போது மங்கியுள்ளது. ஏன் பின்னடைவு ஏற்பட்டுள்ளது என்பதை காங்கிரஸ் கட்சி நாட்டு மக்களுக்கு சொல்ல வேண்டும். டில்லியில் ஜனநாயக உரிமை பேசும் காங்கிரஸ், புதுச்சேரியில் ஏன் உள்ளாட்சி தேர்தல் நடத்தவில்லை.


புதுச்சேரி ஸ்மார்ட் சிட்டி


புதுச்சேரி மக்களுக்கு திறமை, வெற்றி இச்சை இருக்கிறது. இன்னும் புதுச்சேரி முன்னேற்ற இடத்திற்கு செல்ல முடியாமல் உள்ளது. இதற்கு யார் காரணம் என அறிய வேண்டும். நியமன சட்டசபை உறுப்பினர்கள் செயல்பட விடாமல் தடுக்கப்பட்டுள்ளனர். புதுச்சேரி முதல்வர் நாராயணசாமிக்கு வாழ்த்து சொல்லி கொள்கிறேன். வடகிழக்கு மாநிலங்களில் காங்., ஆட்சி வீட்டுக்கு போகும். கர்நாடகாவில் காங்., வீட்டுக்கு போகும். காங்கிரஸ் அடையாளம் காட்டுவதற்கு புதுச்சேரி முதல்வர் மட்டுமே இருப்பார். புதுச்சேரி முன்னேற முடியும். புதுச்சேரியை ஸ்மார்ட் சிட்டியாக அறிவித்துள்ளது மத்திய அரசு. 1,800 கோடி ரூபாய் புதுச்சேரிக்கு செலவழிக்கப்படும். சுற்றுலா, போக்குவரத்து, அரசு சேவை நவீனப்படுத்தப்படும். குடி நீர் தேவைக்கென 500 கோடி ரூபாய் ஒதுக்கியிருக்கிறோம். ஜிப்மர் மருத்துவமனை நவீனப்படுத்த 450 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. கடற்கரையை நவீனப்படுத்த 100 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் புதுச்சேரி சுற்றுலா மையமாக மாறும். சிறிய விமான போக்குவரத்து துவக்கவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஐ தராபாத், பெங்களுரூவுக்கு விமான போக்குவரத்து துவங்கப்படவுள்ளது. 3 லட்சத்து 20 ஆயிரம் பேருக்கு முத்ரா திட்டத்தின் கீழ் கடன் வழங்கியுள்ளோம். ஜாமின் இல்லாமல் இளைஞர்களுக்கு கடன் வழங்கியுள்ளோம். எவ்வளவு பலன் அடைய முடியுமோ இளைஞர்கள் இதனை பயன்படுத்த வேண்டும். இளைஞர்கள் தொழில் செய்ய மத்திய அரசு துணை நிற்கிறது. ஒன்றரை லட்சம் பேருக்கு புதுச்சேரியில் வங்கி கணக்கு துவங்கப்பட்டுள்ளது. 2. லட்சம் பேருக்கு புதுச்சேரியில் மருத்துவம் மற்றும் விபத்து காப்பீடு செய்துள்ளோம். 125 கோடி மக்கள் சபதமேற்று நாட்டின் முன்னேற்றத்தை காண பாடுபட்டு வருகின்றனர். புதிய புதுச்சேரி உருவானால்தான் புதிய இந்தியா உருவாக முடியும். இதனை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது. நவீன இந்தியா உருவாக புதுச்சேரி மக்கள் துணை நிற்க வேண்டும். இவ்வாறு மோடி பேசினார். பிரதமர் இந்தி உரையை பா.ஜ., தேசிய செயலர் எச்.ராஜா தமிழில் மொழிபெயர்த்தார்.ஆரோவில் பொன்விழாவில் மோடி
புதுச்சேரி அருகே விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஆரோவில் பொன்விழாவில் பிரதமர் மோடி பங்கேற்றார். விழாவில் அவர் பேசியதாவது:உலகில் ஒட்டுமொத்த மக்களையும் இணைக்கும் பாலமாக ஆரோவில் திகழ்கிறது. பொருளாதாரம், ஆன்மிகத்தை தேடும் இரு சாராரும் சேரும் இடம் ஆரோவில் ஆகும். கடந்த 50 ஆண்டுகளாக ஆரோவில் ஆன்மிக பணியை செய்து வருகிறது. இந்த பொன்விழாவில் பங்கேற்றது எனக்கு பெரும் மகிழ்ச்சி. இந்திய மதங்கள் வேறுபடினும் ஆரோவில் ஒற்றுமை நிலவும் இடமாக திகழ்கிறது.
ஆரோவில் கல்விக்காக செய்து வரும் பணி பாராட்டுதலுக்குரியது. இவ்வாறு மோடி பேசினார். முன்னதாக பொன்விழா தபால்தலையை பிரதமர் மோடி வெளியிட்டார். விழாவில் முதல்வர் நாராயணசாமி, தமிழக கவர்னர் பன்வாரிலால், புதுச்சேரி கவர்னர் கிரண்பேடி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Advertisement
வாசகர் கருத்து (86)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
26-பிப்-201808:48:19 IST Report Abuse
Srinivasan Kannaiya லஞ்சத்தில்... செயல் திறன் இல்லாமல் இருப்பதில் 48 மாதம்,,,,48 ஆண்டுகளை பின் தள்ளி ஓடவைத்து விட்டது என்பதுதான் உண்மை...
Rate this:
Share this comment
Cancel
26-பிப்-201806:00:47 IST Report Abuse
ஆப்பு இதுக்கு முன்னாடி வாஜ்பேயின்னு ஒருத்தர் பிரதமரா இருந்தாரே...அவரு என்ன காங்கிரசா? வுட்டா இன்னும் 48 வருஷம் கழிச்சு கேள்வி கேளுங்கன்னு சொல்லுவார் போலிருக்கே...
Rate this:
Share this comment
Cancel
B.s. Pillai - MUMBAI,இந்தியா
26-பிப்-201805:25:40 IST Report Abuse
B.s. Pillai No one can challenge the achievements of the Nehru, Indra and Lal Bahadur Congress. Right from Agriculture, Bakra Nangal Dam to BARC nuclear power,Railways and highways, Medicines you name it congress was responsible. But the Sonia Congress is full of scams. She ran away to Italy with family when Bangla Desh war started. So much patriotic, she is. There is no chance of this blood cancer congress reviving in future. Now the hope is on this P.M. Modi who work hard to make India progress in all ways and in establishing better cordial relations with the countries and is almost successful in trying to single out Pakistan as a Terrorist country.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X