'நீட்' தேர்வுக்கான பதிவு : சி.பி.எஸ்.இ., புது அறிவிப்பு| Dinamalar

பொது செய்தி

இந்தியா

'நீட்' தேர்வுக்கான பதிவு : சி.பி.எஸ்.இ., புது அறிவிப்பு

Added : பிப் 26, 2018 | கருத்துகள் (3)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
Aadhaar Card, NEET Exam, CBSE,  நீட் தேர்வு, சி.பி.எஸ்.இ.,ஆதார் அட்டை, பிளஸ் 2  மாணவர்கள், நீட் நுழைவு தேர்வு,  மே 6 நீட் தேர்வு, மத்திய இடைநிலை கல்வி வாரியம், Plus 2 students, NEET Entrance Examination, May 6th NEET Exam, Central Board of Secondary Education,medical entrance test,

'நீட்' தேர்வில் பங்கேற்க விரும்புவோர், ஆதார் அட்டையில் உள்ள தகவல்களை தான் பதிவு செய்ய வேண்டும் என, மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., அறிவுறுத்தியுள்ளது.

பிளஸ் 2 முடிக்கும் மாணவர்கள், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளில் சேர, நீட் நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். வரும் கல்வி ஆண்டுக்கான, நீட் தேர்வு, மே, 6ல் நடக்கிறது. இந்த தேர்வுக்கு, பிப்., 9ல், ஆன்லைன் விண்ணப்ப பதிவு துவங்கியது. மார்ச், 9 வரை, விண்ணப்பங்களை பதிவு செய்யலாம்.

இந்நிலையில், சி.பி.எஸ்.இ., சார்பில், புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதில், 'நீட் தேர்வில் பங்கேற்க விரும்புவோர், தங்கள் விண்ணப்பத்தில், ஆதார் எண்ணில் இடம் பெற்றுள்ள தகவல்கள் அடிப்படையில், சுய விபரத்தை பதிவு செய்ய வேண்டும்.

ஆதார் தகவல்களும், பள்ளி விபரங்களும் வேறுபாடாக இருந்தாலும், ஆதார் எண் தகவல்களையே, விண்ணப்பத்தில் குறிப்பிட வேண்டும். 'அதன்பின், பள்ளியில் உள்ள விபரங்களை, ஆதார் எண் அடிப்படையில் மாற்றி கொள்ள வேண்டும்.

மாறாக, தேவையற்ற வதந்திகளை நம்பி, தேர்வுக்கான பதிவுகளில் பிழைகளை ஏற்படுத்தி விட வேண்டாம்' என, சி.பி.எஸ்.இ., கூறியுள்ளது.
- நமது நிருபர் -

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
26-பிப்-201808:17:36 IST Report Abuse
Srinivasan Kannaiya சாதகமோ...பாதகமோ... ஏதோ ஒன்றை கொடுத்து விட்டார்கள்... உபயோகிக்க வேண்டியதுதான்...
Rate this:
Share this comment
Cancel
26-பிப்-201805:56:59 IST Report Abuse
ஆப்பு இவனுக சொல்றதிலே எதுவுண்மை, எது வதந்தீன்னு நம்ப முடியலையே...நேத்திக்கு சொன்னதை இன்னிக்கு மாத்திடறானுவ.... நாராயணா...நாட்டக் காப்பாத்துப்பா...
Rate this:
Share this comment
NRK Theesan - chennai,இந்தியா
26-பிப்-201807:31:53 IST Report Abuse
NRK Theesanடாஸ்மாக் கடைய வச்சு வியாபாரம் பண்ற நீதான் ..........
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை