13-year-old Karnataka girl goes on 2-day fast, gets toilet | கழிப்பறை எங்கே? மாணவி உண்ணாவிரதம் | Dinamalar

கழிப்பறை எங்கே? மாணவி உண்ணாவிரதம்

Added : பிப் 28, 2018 | கருத்துகள் (11)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
Toilet, student fasting, Mahanagali, கழிப்பறை, மாணவி உண்ணாவிரதம்,கர்நாடகா, மஹனகலி, அரசு பள்ளி, 
கழிப்பறை விழிப்புணர்வு , மாணவி மஹனகலி, கிராம பஞ்சாயத்து, 
 Karnataka, government school, Toilet awareness, Student Mahanagali, Gram Panchayat,

பெல்லாரி, கர்நாடகாவில், வீட்டில் கழிப்பறை கட்டும் வரை உண்ணாவிரதம் இருந்த மாணவியை, அப்பகுதி மக்கள் பாராட்டி உள்ளனர்.
கர்நாடகாவில், முதல்வர் சித்தராமையா தலைமையில், காங்., ஆட்சி நடக்கிறது. இங்கு, பெல்லாரி மாவட்டத்தில் உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர், மல்லேஷ் என்பவரின் மகள், மஹனகலி, 13; அங்குள்ள அரசு பள்ளியில், 8ம் வகுப்பு படிக்கிறார்.சமீபத்தில் இந்த பள்ளியில், கழிப்பறை அமைக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. இதில் பங்கேற்ற மஹனகலி, வீட்டுக்கு வந்ததும், தந்தையிடம், கழிப்பறை கட்டும் வரை உண்ணாவிரதம் இருக்கப் போவதாக கூறினார்.

கழிப்பறைக்காக, மாணவி உண்ணாவிரதம் இருக்கும் தகவல், கிராம பஞ்சாயத்து மற்றும் மாவட்ட நிர்வாகத்திற்கு தெரிய வந்தது. மாணவியிடம், உண்ணாவிரதத்தை கைவிடும்படி, அதிகாரிகள் கூறியும் கேட்காததால், அவரது வீட்டுக்கு வெளியில், கழிப்பறை கட்டுவதற்கான ஏற்பாடுகளை, அதிகாரிகள் செய்தனர்.இரு நாட்களில், கழிப்பறை கட்டி முடிக்கப்பட்டதும், மாணவி உண்ணாவிரதத்தை கைவிட்டார். உண்ணாவிரதம் இருந்து கழிப்பறை கட்டச்
செய்த மாணவியை, அப்பகுதி மக்கள் பாராட்டினர்.

Advertisement




வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
கேண்மைக்கோ சேகர் - Dharmapuri/Bangalore,இந்தியா
28-பிப்-201816:22:42 IST Report Abuse
கேண்மைக்கோ சேகர் இத பாத்தாவது திருந்தட்டும் பெரும் கொள்ளை கூட்டங்கள்
Rate this:
Share this comment
Cancel
Kuppuswamykesavan - Chennai,இந்தியா
28-பிப்-201815:55:07 IST Report Abuse
Kuppuswamykesavan ஓர் உன்னத நோக்கத்திற்காக உண்ணாவிரதம் இருந்து, சாதித்த அந்த சிறுமியின் செயல் பாராட்டிற்குரியது.
Rate this:
Share this comment
Cancel
N Maheswaran - Itanagar,இந்தியா
28-பிப்-201812:55:49 IST Report Abuse
N Maheswaran Hats up, dear.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X