ஆய்வகத்தில் வளர்ந்த மாட்டிறைச்சி!| Dinamalar

சிறப்பு பகுதிகள்

அறிவியல் மலர்

ஆய்வகத்தில் வளர்ந்த மாட்டிறைச்சி!

Added : மார் 01, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
ஆய்வகத்தில் வளர்ந்த மாட்டிறைச்சி!

மாட்டுக் கறி என்றாலே சர்ச்சைதான். சில ஆண்டு களாக, மாட்டிறைச்சியின் செல்களை ஆய்வகத்தில் வைத்து வளர்க்கும் சோதனைகள் வெற்றி கண்டுள்ளன. அத்தகைய ஆய்வக இறைச்சிக்கும், அசல் மாட்டிறைச்சிக்கும் சுவையில் அதிக வித்தியாசம் இல்லை. எனவே, விரைவில் அத்தகைய இறைச்சியை பெருமளவில் தயாரிக்கும் முயற்சி, அமெரிக்காவில் துவங்கியிருக்கிறது.
உடனே அந்நாட்டின் கால்நடை வளர்ப்போர் சங்கம், போர்க்கொடியை உயர்த்தியிருக்கிறது. பண்ணை அல்லது புல்வெளிகளில் மேய்த்து வளர்த்து, வெட்டி விற்கப்படும் இறைச்சிதான் மாட்டிறைச்சி என்பது அவர்கள் வாதம். எனவே, 'பீப்' எனப்படும் 'மாட்டுக் கறி' மற்றும், 'மீட்' எனப்படும், 'இறைச்சி' ஆகிய இரு சொற்களையும், ஆய்வுக்கூட இறைச்சியை தயாரித்து விற்பனைக்குவிடவிருக்கும் நிறுவனங்கள் பயன்படுத்தவே கூடாது என, கால்நடை சங்கத்தினர் வழக்குத் தொடர்ந்திருக்கின்றனர்.
'மெம்பிஸ் மீட்ஸ்' என்ற ஆய்வக இறைச்சி நிறுவனம், 2021ல் தங்கள் ஆய்வக மாட்டுக்கறி விற்பனைக்கு வரும் என்று அறிவித்திருக்கிறது. ஆனால், 'ஜஸ்ட்' என்ற இன்னொரு ஆய்வகக் கறி நிறுவனம், 2018 டிசம்பருக்குள் தங்கள் மாட்டு செல்லில் விளைந்த மாட்டுக்கறியை, பெட்டிகளில் அடைத்து விற்கப்போவதாக அறிவித்திருக்கிறது.
தோற்றத்திலும், சுவையிலும் இயற்கை மாட்டுக் கறியைப் போலவே ஆய்வகத்தில் வளர்ந்த கறி இருப்பதோடு, மேய்சலால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புகள் எதுவும் தங்கள் கறியால் ஏற்படாது என, அந்நிறுவனங்கள் மார்தட்டிக்கொள்கின்றன. முக்கியமாக, இனி ஒரு மாட்டையும் இறைச்சிக்காக கொல்லவேண்டியிருக்காது என்றும் அவை தெரிவித்துள்ளன. பல சமையல் கலை பிரபலங்களிடம் தந்து சமைக்கச் சொல்லி, 'ஆஹா, பேஷ், பேஷ்' என்று பாராட்டுக்களையும் வாங்கியிருக்கின்றன மெம்பிஸ் மற்றும் ஜஸ்ட் போன்ற நிறுவனங்கள்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை