பலப்படுத்தப்படும் உலக விதைக் காப்பகம்!| Dinamalar

சிறப்பு பகுதிகள்

அறிவியல் மலர்

பலப்படுத்தப்படும் உலக விதைக் காப்பகம்!

Added : மார் 01, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
பலப்படுத்தப்படும் உலக விதைக் காப்பகம்!

இயற்கைப் பேரிடராலோ அல்லது மனிதர்களின் அழிவுச் செயலாலோ உணவுப் பயிர்கள் பூண்டோடு அழிந்துபோனால் என்ன செய்வது? அப்படி அசம்பாவிதம் நிகழ்ந்தால், அதிலிருந்து தப்பிக்கத்தான், 'ஸ்வால்பார்டு உலக விதைக் காப்பகம்', 2008ல் உருவாக்கப்பட்டது.
நார்வேயிற்கும், வட துருவத்திற்கும் இடைப்பட்ட ஒரு பகுதியில் அந்த விதைக் காப்பகம் கட்டப்பட்டு, அதில் உலக நாடுகளிடமிருந்து சேமிக்கப்பட்ட 8.90 லட்சம் வகை பயிர்கள், தாவரங்களின் விதைகள் பத்திரப்படுத்தப்பட்டுள்ளன.
ஆனால் பாருங்கள், கடந்த ஆண்டு நார்வேயின் உறைபனிப் பகுதியில் பருவநிலை மாற்றத்தால் பனி உருக ஆரம்பித்தது. இதனால், பூமிக்கடியில் சுரங்கம் போலக் கட்டப்பட்டுள்ள விதைக் காப்பகத்தின் ஒரு பகுதிக்குள் நீர் புகுந்துவிட்டது.
பத்து ஆண்டுகள் ஆகிவிட்டதால், சுரங்கக் கட்டடத்தை புதுப்பிக்கவும், மாற்று பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யவும், நார்வே அரசு, 83 கோடி ரூபாய் நிதியை ஒதுக்கி உடனடியாக வேலையை துவங்கி,விட்டது.
சுவர்களை பலப்படுத்துவது, காப்பகத்தினுள், விதைகள் கெட்டுப்போகாமல் இருக்க, தட்பவெப்பத்தை சீராக வைப்பது, மின்சாரம் தொடர்ந்து கிடைக்கும்படி செய்வது ஆகியவற்றுக்கு இந்த நிதி செலவிடப்படும்.
சில ஆண்டுகளுக்கு முன் சிரியாவில் யுத்தத்தால் பயிர்கள் நாசமானதால், ஸ்வால்பார்டிடம் கொடுத்து வைத்திருந்த விதைகளை வாங்கிச் சென்றது.
பிறகு, 2015ல் எடுத்த விளைச்சலில் கிடைத்த விதைகளை மீண்டும் ஸ்வால்பார்டிடமே 'டிபாசிட்' செய்தது. எதிர்கால உலக உணவு வினியோகத்தில், ஸ்வால்பார்டுக்கு நிச்சயம் ஒரு இடம் இருக்கும்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை