மறுசுழற்சிக்கென்றே பிறந்த கார்!| Dinamalar

சிறப்பு பகுதிகள்

அறிவியல் மலர்

மறுசுழற்சிக்கென்றே பிறந்த கார்!

Added : மார் 01, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
மறுசுழற்சிக்கென்றே பிறந்த கார்!


நெதர்லாந்திலுள்ள இந்தோவென் தொழில்நுட்ப பல்கலைக்கழகம், ஆண்டுக்கொரு புதிய காரை வடிவமைத்து வெள்ளோட்டம் பார்த்து வருகிறது.
இந்த வரிசையில் அண்மையில், 'நோவா' என்ற மின்சார காரின் வடிவமைப்பை வெளியிட்டுள்ளது.
இந்த காரில் பயன்படுத்தப்பட்டுள்ள, 90 சதவீத பொருட்கள் உயிரி பிளாஸ்டிக் போன்ற சுற்றுச்சூழலுக்கு கெடுதல் செய்யாதவை.
அதுமட்டுமல்ல, நோவா காரை வடிவமைக்கும்போதே, அதை மறுபயன் மற்றும் மறுசுழற்சிக்கு ஏற்றவாறு வடிவமைத்திருப்பதாக இந்தோவென் விஞ்ஞானிகள் சொல்கின்றனர்.
இரண்டு பேர் பயணிக்கும் நகர்புற காரான நோவாவின், உற்பத்தி முறையும் சுற்றுச்சூழலுக்கு கேடு தராத வகையில் இருக்கும்.
ஒரு முறை மின்னேற்றம் செய்தால், 240 கி.மீ., துாரம் பயணிக்கும் நோவாவின் அதிக பட்ச வேகம் மணிக்கு, 100 கி.மீ.,
அதுமட்டுமல்ல, இந்த வண்டியிலுள்ள ஆறு மின் தேக்கிகளையும், தேவைப்பட்டால், உடனே கழற்றிவிட்டு, மின்னேற்றம் நிறைந்த மின் தேக்கிகளை பொருத்தி பயணத்தை தொடரும் வகையில் வடிவமைத்திருக்கின்றனர் விஞ்ஞானிகள்.
உலோக மோட்டார், சேசிஸ் போன்றவற்றைத் தவிர, 350 கிலோ எடையுள்ள இந்த வண்டியில், கரும்பிலிருந்து எடுக்கப்பட்ட பாலிலாக்டிக் அமிலம் போன்ற இயற்கை பாலிமர்களால் ஆன பாகங்களே அதிகம்.
வாகனங்கள் மறுசுழற்சி நோக்கில் தயாரிக்கப்படுவது இன்று அவசியம், அவசரம் என்கின்றனர் இந்தோவென் விஞ்ஞானிகள்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை