அதிநவீன பெட்டிக்கடை!| Dinamalar

சிறப்பு பகுதிகள்

அறிவியல் மலர்

அதிநவீன பெட்டிக்கடை!

Added : மார் 01, 2018 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
அதிநவீன பெட்டிக்கடை!

இந்தோனேஷியாவில் புத்திளம நிறுவனங்களில் முதலீடு செய்யும் முதலீட்டாளர்கள், திடீரென பெட்டிக்கடைகள் மீது கவனத்தைப் பாய்ச்சியுள்ளனர். சாலையோரங்களில் உறுத்தலாக இருக்கும் பெட்டிக்கடைகளையும், நவீனமயமாக்க முடியும் என்பது அவர்களது இலக்கு.
முதலில், பெட்டிக்கடைகளின் தோற்றத்தை பிரகாசமான மஞ்சள் நிற இழைப் பெட்டிகளால் உருவாக்கினர். அடுத்து அதில் கச்சிதமான அலமாரிகள், எல்.இ.டி., விளக்குகள், ஒரு தொலைக்காட்சி, தொலைபேசி இணைப்பு போன்றவற்றை இணைத்தனர். பிறகு, 'வை - பை' வசதி, வாடிக்கையாளர்களுக்கு நிழல் அமைப்பு, இருக்கைகள், குளிர்பதன பெட்டி போன்றவற்றையும் தந்தனர். உடனே அதி நவீன பெட்டிக்கடை தயார்.
வைபை போன்ற வசதிகள் மூலம் கடைக்கு பொருட்களை வினியோகிக்கும் அமைப்புகளுடன் நேரடி தொடர்பு கொள்ள முடியும். சரக்கு இருப்பு போன்ற தகவல்கள் உடனுக்குடன் வினியோகஸ்தர்களுக்கு போய்விடும்.
இது போல அமைக்கப்பட்ட, 12 கடைகளிலும் வாடிக்கையாளர்கள் வரத்து அதிகரித்து, விற்பனையும் அதிகரித்திருப்பதாக இத்திட்டத்தின் நிறுவனங்கள் சொல்கின்றன.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
04-மார்-201805:52:57 IST Report Abuse
J.V. Iyer மிகவும் நன்றாக உள்ளது. இலவசம் கொடுத்தால், இதுமாதிரி கொடுத்து உதவலாம்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை