சுற்றுலா விருது வருகிறது,அதை மதுரா டிராவல்ஸ் தருகிறது..| Dinamalar

சுற்றுலா விருது வருகிறது,அதை மதுரா டிராவல்ஸ் தருகிறது..

Updated : மார் 02, 2018 | Added : மார் 02, 2018
Advertisement


சுற்றுலா விருது வருகிறது,அதை மதுரா டிராவல்ஸ் தருகிறது..

வெளிநாடு மற்றும் உள்நாட்டு சுற்றுலா பயணிகள் அதிகமாக வரும் மாநிலங்களில் தமிழகமே கடந்த நான்கு வருடங்களாக முதலிடத்தை பிடித்துவருகிறது.

சிறந்த ஒட்டல்,சிறப்பான உணவு,சிறந்த பயண முகவர்,சிறந்த வழிகாட்டி என்று பல விஷயங்கள் இதன் பின்னனியில் இருக்கிறது.

பின்னனியில் இருக்கும் இவர்களை முன்னிலைப்படுத்தி ஊக்கப்படுத்தி விருது வழங்கினால் இன்னும் உற்சாகமாக பணிபுரிவர், இதன் பலன் தொடர்ந்து தமிழகத்திற்கு கிடைக்கவும் செய்யும்.

இந்த அருமையான பணியினை சென்னையில் உள்ள மதுரா டிராவல் சர்வீஸ் நிறுவனமானது, மதுரா வெல்கம் என்ற முதன்மை சுற்றுலா இதழுடன் இணைந்தும் மத்திய மாநில அரசுகளின் ஆதரவு பெற்றும் கடந்த சில ஆண்டுகளாக நடத்திவருகிறது.

கடந்த ஆண்டுகளில் விழாவிற்கு கிடைத்த வரவேற்பு மற்றும் ஆதரவு காரணமாக இந்த வருடம் விழா பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது.

வருகின்ற 14 ந்தேதி சென்னை தேனாம்பேட்டை காமராஜர் அரங்கில் காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை 12 மணி நேர விழாவாக நடைபெற உள்ளது.

விழாவில் சிறப்பம்சமாக தமிழகத்தின் பராம்பரிய விளையாட்டுக்களான சிலம்பாட்டம்,காளியாட்டம்,பறையாட்டம்,புலியாட்டம் என பல ஆட்டங்கள் தாரை தப்பட்டை முழக்கத்துடன் நடைபெற உள்ளது.கூடுதலாக பண்பாட்டை எடுத்துச் சொல்லும் ஆடல் பாடல் நடனங்களும் உண்டு.

விழாவில் நகைச்சுவை பேச்சாளர் ஞானசம்பந்தன் பங்கேற்கும் பட்டிமன்றம் மற்றும் பல்வேறு கருத்தரங்குகளும் நடைபெறுகிறது.விழாவின் ஹைலைட்டாக மனித நேய சேவைக்காக தம்மை அர்ப்பணித்துக் கொண்டுள்ள ஒருவருக்கு மதுரா விருதும் ஒரு லட்ச ரூபாய் ரொக்கப்பரிசும் வழங்கப்படுகிறது.நிகழ்ச்சியினை அன்பு அறிவிப்பாளர் அப்துல் ஹமீது தொகுத்து வழங்குகிறார்.

சுற்றுலாவே எனது மூச்சு எனது உணவு எனது வாழ்க்கை என்று வாழும் மதுரா டிராவல்ஸ் அதிபர் வீகேடி.பாலன் விழாக்குழு தலைவராக இருந்து இந்த விழாவினை நடத்துகிறார்.விழா தொடர்பாக பேசுவதற்க்கான எண்:98410 78674.

-எல்.முருகராஜ்
murugaraj@dinamalar.in

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை