நாடுகளின் பெயரில் வாக்காளர்கள் மேகாலயாவில் விசித்திர கிராமம்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

நாடுகளின் பெயரில் வாக்காளர்கள் மேகாலயாவில் விசித்திர கிராமம்

Added : மார் 03, 2018 | கருத்துகள் (1)
Advertisement
நாடுகளின் பெயரில் வாக்காளர்கள் மேகாலயாவில் விசித்திர கிராமம்

உம்னியூ : மேகாலயாவில், ஒரு கிராமத்தில் வசிக்கும் பலர், தங்கள் பிள்ளைகளுக்கு, மாநிலங்கள், நாடுகள், தலைவர்களின் பெயர்களை சூட்டி வரும் தகவல், சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலின் போது தெரிய வந்துள்ளது.


மகிழ்ச்சி


வட கிழக்கு மாநிலமான, மேகாலயாவில், சமீபத்தில், சட்டபை தேர்தல் நடந்தது. இதில் ஓட்டளித்த பலரது பெயர்கள், மிக வித்தியாசமாக இருந்ததை பார்த்து, தேர்தல் அதிகாரிகள் ஆச்சரியப்பட்டனர்.

இது குறித்து, மலைப் பிரதேசமான, ஷெல்லா சட்டசபை தொகுதியைச் சேர்ந்த, உம்னியூத்மர் எலாகா கிராம தலைவர், எலாகா கூறியதாவது: எங்கள் கிராமத்தில், படிப்பறிவு உடையோர் மிகக் குறைவு. எனினும், ஆங்கில வார்த்தைகளை அதிகம் நேசிக்கின்றனர்.

அந்த வார்த்தைகளுக்கு அர்த்தம் தெரிகிறதோ இல்லையோ, அவற்றை உச்சரிப்பது அவர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.எனவே, மிகவும் பிரபலமான ஆங்கில வார்த்தைகள், மாநிலங்கள், நாடுகள், தேசிய, உலக தலைவர்களின் பெயர்களை, தங்கள் பிள்ளைகளுக்கு சூட்டி மகிழ்கின்றனர்.


ஆச்சரியம்


இந்த தேர்தலில் ஓட்டளித்தோர் பெயர் பட்டியலை பார்த்து, அதிகாரிகள் ஆச்சரியம்அடைந்தனர்.அவர்களில், இத்தாலி, அர்ஜென்டினா, சுவீடன், இந்தோனேஷியா போன்ற நாடுகளின் பெயர்கள், திரிபுரா, சிக்கிம் போன்ற மாநிலங்களின் பெயர்கள், கென்னடி, நேரு உள்ளிட்ட தலைவர்களின் பெயர்களை உடையோர் பலர், இத்தேர்தலில் ஓட்டளித்து உள்ளனர்.

ஆண் வாக்காளர்கள் 850 பேரும், பெண் வாக்காளர்கள் 916 பேர் மட்டுமே உள்ள, இந்த சிறிய கிராமத்தில், நுாற்றுக்கணக்கானோர், வித்தியாசமான பெயர்களை உடையவர்களாக உள்ளனர். என் பெற்றோர், எங்கள் கிராமத்தின் பெயரான, எலாகா என்பதையே, எனக்கு வைத்துள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ray - Chennai,இந்தியா
04-மார்-201812:00:02 IST Report Abuse
Ray மகாராஜபுரம் சந்தானம் செம்மங்குடி ஸ்ரீனிவாச அய்யர் லால்குடி ஜெயராமன் இவை ஊர் பெயர்களையே முதல் எழுத்தாக கொண்டுள்ளது போகட்டும் ஊரே பெயராக சிதம்பரமாக பழனியாக பலருண்டே அப்படியிருக்க இந்த செய்தி என்ன வினோதம்?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை