delhi ush... | சி.பி.ஐ., அதிகாரிகளுக்கு மிரட்டல்| Dinamalar

சி.பி.ஐ., அதிகாரிகளுக்கு மிரட்டல்

Updated : மார் 04, 2018 | Added : மார் 04, 2018 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
டில்லி உஷ், delhi ush, cbi, modi, karthi chidambaram, chidambaram, modi, paneerselvam, pon.radhakrishnan, சிபிஐ, மோடி, கார்த்தி சிதம்பரம், சிதம்பரம், மோடி, பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி, பொன்.ராதாகிருஷ்ணன்

சமீபகாலமாக, டில்லி மீடியாக்களில் அதிகமாக அலசப்படும் செய்தி, சிதம்பரம் மகன், கார்த்தியின் கைது தான். 'தமிழக மீடியாக்கள் இந்த செய்தியை வெளியிட்டாலும், டில்லி அளவிற்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை' என, விமர்சிக்கப்படுகிறது. கார்த்தி வழக்கு தொடர்பான முக்கிய ஆவணங்கள், பணப் பரிமாற்றம் என, அனைத்தும், வட மாநில, 'டிவி' சேனல்களில் தெளிவாக காட்டப்படுகின்றன.தங்களை எதுவும் செய்ய முடியாது என, நினைத்திருந்த சிதம்பரம் குடும்பத்தை, கார்த்தியின் கைது கலங்க வைத்து விட்டது. கார்த்தியை தற்போது, சி.பி.ஐ., விசாரிக்கிறது.அதிகாரிகளின் பல கேள்விகளுக்கு, சரியான பதிலைசொல்லாமல் மழுப்பி வருகிறார்.
மகளை கொலை செய்ததற்காக கைது செய்யப்பட்டுள்ள, இந்திராணி முகர்ஜி, அவரது கணவர், பீட்டர் முகர்ஜி ஆகியோரது நிறுவனத்துக்காக, கார்த்தியும், சிதம்பரமும் எப்படி உதவி செய்தனர்; அதற்கு கொடுக்கப்பட்ட பணம் எவ்வளவு ஆகிய விபரங்களை, அவர்கள் வாக்குமூலமாக கொடுத்து உள்ளனர்.இது குறித்து கேட்டால், கார்த்தி பதில் சொல்லாமல் மவுனம் காப்பதாக கூறப்படுகிறது. சி.பி.ஐ., அதிகாரிகள் விசாரணையின் போது, ஓரிரு ஹிந்தி வார்த்தைகளை பேசி உள்ளனர். 'ஹிந்தி தேசிய மொழி கிடையாது; எதற்கு ஹிந்தியில் பேசுகிறீர்கள்? எனக்கு ஹிந்தி தெரியாது. அடுத்த முறை, காங்., தான் ஆட்சி அமைக்கும்; அப்போது பார்த்துக் கொள்கிறோம்' என, கார்த்தி கூறியதாக, தகவல்கள் கசிந்துள்ளன.'இவர் மாதிரி எத்தனை பேரை பார்த்து உள்ளோம். எத்தனையோ வழக்குகளை தீர்த்து வைத்து உள்ளோம். நிச்சயம் அனைத்து விஷயங்களையும் கக்கி விடுவார்' என்கின்றனர் அதிகாரிகள்.
'மற்றொரு பக்கம், இந்திராணி முகர்ஜியின் வாக்குமூலம், சிதம்பரத்திற்கு எதிராகவும் உள்ளது. அதற்கான ஆதாரங்களும் கிடைத்துள்ளன. கார்த்தியிடம் விசாரிக்கும் போது, பல தகவல்கள் தெரிய வரும்' என, சி.பி.ஐ., வட்டாரங்களில் பேசப்படுகிறது. இதனால், விரைவில், சிதம்பரமும் கைது செய்யப்படலாம் என, பேச்சு அடிபடுகிறது.
'சிதம்பரம் மகன் கைது, பா.ஜ.,வின் பழிவாங்கும் நடவடிக்கை' என, காங்., செய்தித் தொடர்பாளர் தெரிவித்தாலும், கட்சிக்குள் பல தலைவர்கள் மகிழ்ச்சியாக உள்ளனர். தமிழகத்தைச் சேர்ந்த ஒரு தலைவர், தன் மனைவியிடம், கேசரி தயார் செய்யச் சொல்லி கொண்டாடி உள்ளார்.

மோடியிடம் பேசியது என்ன?
சமீபத்தில், சென்னை மற்றும் புதுச்சேரிக்கு வந்து, நிகழ்ச்சிகளில் பங்கேற்றார், பிரதமர் மோடி. இவரது சென்னை வருகையின் போது நடந்த பல விஷயங்கள், தற்போது தெரிய வந்துள்ளன.'இலவச ஸ்கூட்டர் வழங்கும் விழா மேடையில் யார் இடம் பெறுவர்' என்ற பட்டியலை, பிரதமர் அலுவலகத்திற்கு, தமிழக அரசு அனுப்பி வைத்தது. அதில், துணை முதல்வர் பன்னீர்செல்வம் பெயர் இடம் பெறவில்லை. இது, பிரதமருக்கு தெரிய வந்ததும், 'மேடையில், பன்னீர்செல்வமும் இடம் பெற வேண்டும்; அவரும் பேச வேண்டும்' என, உத்தரவிட்டாராம்.இதன் பின் தான், பன்னீர்செல்வம் பெயர், அந்த பட்டியலில் இடம் பிடித்தது. தமிழக அரசியல் நிலை குறித்து,பிரதமரிடம் பேசி உள்ளார், முதல்வர் பழனிசாமி.

மேலும், அமைச்சர் தங்கமணியும், தனியாக மோடியைச் சந்தித்து பேசி உள்ளார். இவருக்கு, ஹிந்தி ஓரளவு தெரியும் என்பதால், இந்த தனி சந்திப்பாம்.இது குறித்து, அரசியல் வட்டாரங்கள் கூறியதாவது:

தினகரன் ஆதரவு, 18 எம்.எல்.ஏ.,க்களை பதவி நீக்கம் செய்த, சபாநாயகர் உத்தரவு, சட்டப்படி செல்லாது என, தீர்ப்பு வந்தாலும், அ.தி.மு.க., அரசுக்கு எந்த பிரச்னையும் வராது என, முதல்வர் தரப்பில், பிரதமரிடம் கூறப்பட்டது.இப்போதுள்ள சூழ்நிலையில், தி.மு.க., உட்பட எந்தவொரு அரசியல் கட்சியும், தேர்தலுக்கு தயாராக இல்லை; தேர்தலை விரும்பவும் இல்லை. எனவே, சிறுபான்மை அரசாக, மீதமுள்ள பதவிக் காலத்தை ஓட்டி விடுவோம். ஆனால், மத்திய அரசு, எங்கள் மீது கை வைக்காமல் இருக்க வேண்டும் என்றும் கூறப்பட்டது. அதற்கு தலையாட்டிய பிரதமர், 'நீங்கள் இருவரும், ஒற்றுமையாக இருக்க வேண்டும்' என, அறிவுரை வழங்கினாராம்.இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்த விவகாரத்தில், மற்றொரு கூத்தும் நடந்துள்ளது.சமீபகாலமாக, பன்னீர்செல்வம் - மத்திய இணை அமைச்சர், பொன்.ராதாகிருஷ்ணன் இடையே, நட்பு சரியில்லை.இதனால், பிரதமர் விழாவில், நன்றியுரையின் போது, ராதாகிருஷ்ணன் பெயரை அடக்கி வாசிக்கும்படி, அதிகாரிகளுக்கு, பன்னீர்செல்வம் கட்டளையிட்டதாக கூறப்படுகிறது.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
POORMAN - ERODE,இந்தியா
10-மார்-201818:37:07 IST Report Abuse
POORMAN 18 MLA க்கள் தொடர்பான தீர்ப்பு வராது. அப்படியே வந்தாலும் மேல் முறையீடு செய்து மீதி உள்ள நாட்களை ஓட்டி விடுவார்கள்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X