பெரியாறு புலிகள் சரணாலயத்தில் 'ஹீரோ'வான மோப்ப நாய்கள்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பெரியாறு புலிகள் சரணாலயத்தில் 'ஹீரோ'வான மோப்ப நாய்கள்

Added : மார் 05, 2018 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
Tiger Reserve,Hero Dogs, Kerala Forestry,பெரியாறு புலிகள் சரணாலயம்,ஹீரோ மோப்ப நாய்கள், வனக்குற்றவாளிகள், மோப்ப நாய் ஜூலி, மோப்ப நாய் ஜெனி, கேரள வனத்துறை, இந்தியன் இன்ஸ்டியூட் ஆப் டாக் டிரெயினிங் சென்டர், ஜெர்மன் ஷெப்பர்டு இன மோப்ப நாய்கள், Periyar Tiger Reserve,  Indian Institute of Dog Training Center, German Shepherd Dog ,

கூடலூர் : பெரியாறு புலிகள் சரணாலயப் பகுதியில் வனத் துறையினரால் பிடிக்க முடியாத வனக்குற்றவாளிகளை, மோப்ப நாய்களான ஜூலி, ஜெனி பிடித்து கொடுத்து தற்போது ஹீரோவாக வலம் வருகின்றன.

பெரியாறு புலிகள் சரணாலயம் 925 சதுர கி.மீ., பரப்பளவு கொண்டது. இங்கு வனவிலங்கு வேட்டை, சந்தன மரக்கடத்தல் அதிகமாக நடந்து வந்தது. தடுக்க கேரள வனத்துறையினர், பல வழிகளை கையாண்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக மோப்ப நாய்கள் மூலம் குற்றவாளிகளை பிடிக்கும் முயற்சியில் தற்போது இறங்கியுள்ளனர்.

புலிகள் ஆணையத்தின் உத்தரவின் படி, மத்திய பிரதேசம் குவாலியரில் உள்ள மத்திய அரசின், இந்தியன் இன்ஸ்டியூட் ஆப் டாக் டிரெயினிங் சென்டரில் (நாய்களுக்கான தேசிய பயிற்சி மையம்) ஒன்பது மாதங்கள் சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்ட 'ஜெர்மன் ஷெப்பர்டு' இனத்தை சேர்ந்த ஜூலி, ஜெனி என்ற மோப்பநாய்கள் அண்மையில் தேக்கடிக்கு கொண்டு வரப்பட்டன.

சில நாட்களிலேயே, பெரியாறு புலிகள் சரணாலயத்தை ஒட்டி புதிதாக கட்டப்பட்டுவரும் தங்கும் விடுதியின் அறையில் மான் இறைச்சி ஒளித்து வைக்கப்பட்டிருந்ததை கண்டு பிடித்தன. விடுதி உரிமையாளர் உட்பட மூன்று பேரை கேரள வனத்துறையினர் கைது செய்தனர்.

சில நாட்களுக்கு முன் புலிகள் காப்பகத்தில் சகுந்தலாக்காடு பகுதியில் சந்தன மரங்கள் வெட்டிக்கடத்திய தேனி மாவட்டம் கூடலுாரைச் சேர்ந்த இரண்டு பேரை மோப்பநாய் கண்டுபிடித்தது. பல குற்றவாளிகளை பிடித்து கொடுத்து, மோப்ப நாய்கள் ஹீரோவாக வலம் வருகின்றன.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
vasu - Sydney,ஆஸ்திரேலியா
05-மார்-201808:28:13 IST Report Abuse
vasu ஹீரோ. போலீஸ் நாய்கள் ஜாக்கிரதை . இவற்றை கவனமுடன் பாது காக்கவும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை