ஜனாதிபதி காருக்கும் 'நம்பர் பிளேட்' கட்டாயம்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

ஜனாதிபதி காருக்கும் 'நம்பர் பிளேட்' கட்டாயம்

Added : மார் 05, 2018 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement

புதுடில்லி: 'ஜனாதிபதி மற்றும் துணை ஜனாதிபதி பயன்படுத்தும் கார்களின் பதிவு எண்கள், கண்ணுக்கு தெரியும்படி வைக்கப்பட வேண்டும்' என, டில்லி உயர் நீதிமன்றத்தில், மத்திய அரசு மனு தாக்கல் செய்துள்ளது.டில்லியைச் சேர்ந்த தன்னார்வ தொண்டு நிறுவனம், டில்லி உயர் நீதிமன்றத்தில், பொது நல மனு தாக்கல் செய்தது. அதன் விபரம்:ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, கவர்னர்கள், வெளியுறவுத் துறை அமைச்சகம் உள்ளிட்ட அலுவலக வாகனங்கள், மோட்டார் வாகனச் சட்டப்படி பதிவு செய்யப்படவில்லை.அவை உடனடியாக பதிவு செய்யப்பட்டு, வாகன பதிவெண்கள் வெளியில் தெரியும்படி, கார்களில் வைக்கப்பட வேண்டும். அப்படி பதிவு செய்யப்படாத வாகனங்களை, போலீசார் பறிமுதல் செய்ய வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.இதையடுத்து, இதுகுறித்து பதில் அளிக்கும்படி, மத்திய அரசுக்கு, டில்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.இந்நிலையில், டில்லி உயர் நீதிமன்ற, தற்காலிக தலைமை நீதிபதி, கீதா மிட்டல், நீதிபதி, ஹரி கிருஷ்ணன் ஆகியோர் அடங்கிய அமர்வின் முன், மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் தாக்கல் செய்துள்ள மனு:ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, கவர்னர்கள், வெளியுறவுத் துறை அமைச்சக வாகனங்கள் அனைத்தும், வாகன போக்குவரத்து சட்டத்தின்படி பதிவு செய்யப்பட வேண்டும். இது குறித்து, தொடர்புடைய அலுவலகங்களுக்கு, சமீபத்தில் கடிதம் அனுப்பப்பட்டது.இது தொடர்பாக, துணை ஜனாதிபதி அலுவலகத்தில் இருந்து பதில் வந்துள்ளது. அதில், துணை ஜனாதிபதி மற்றும் அவரது மனைவி உட்பட, தங்கள் அலுவலக கார்கள் அனைத்தும் பதிவு செய்யப்பட்டு உள்ளதாகவும், பதிவெண்கள், கார்களில் தெரியும்படி வைக்கப்பட்டு உள்ளதாகவும் கூறப்பட்டு இருந்தது.வெளியுறவு அமைச்சகம் அளித்த பதிலில், வெளிநாட்டு பிரதிநிதிகள் இந்தியா வரும்போது, அவர்கள் பயன்பாட்டுக்காக, 14 கார்கள் உள்ளதாகவும், அவை, விரைவில் பதிவு செய்யப்படும் என்றும் பதில் அளிக்கப்பட்டுள்ளது.எனவே, ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, கவர்னர்கள் பயன்படுத்தும் கார்கள் மற்றும் அவர்களது அலுவலக கார்கள் அனைத்தும் பதிவு செய்யப்பட்டு, அந்த எண், வெளியில் தெரியும்படி வைக்கப்பட வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டு உள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Pasupathi Subbian - trichi,இந்தியா
05-மார்-201816:18:07 IST Report Abuse
Pasupathi Subbian இதனால் என்ன பயன் . சற்று விளக்கம் கூறுங்களேன்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X