'அம்மா' ஸ்கூட்டர்களை விற்க மூன்றாண்டு தடை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

'அம்மா' ஸ்கூட்டர்களை விற்க மூன்றாண்டு தடை

Added : மார் 05, 2018 | கருத்துகள் (40)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
Amma scooter,RC book,Tamil nadu,அம்மா ஸ்கூட்டர், மூன்றாண்டுகளுக்கு விற்க தடை, தமிழக அரசு, ஆர்.சி புத்தகம், கிராமப்புற வாழ்வாதார திட்டம் , மானிய விலை ஸ்கூட்டர் , banned to sell for three years, Tamil Nadu government,  rural livelihood scheme, subsidized price scooter,

சென்னை : தமிழக அரசால், மானிய விலையில் வழங்கப்படும், 'அம்மா ஸ்கூட்டர்'களை, மூன்று ஆண்டுகளுக்கு விற்க தடைவிதிக்கப்பட்டு உள்ளது. அதற்கேற்ற வகையில், ஆர்.சி., புத்தகத்தில், 'சீல்' வைக்கப்பட்டுள்ளது.

வேலைக்கு செல்லும் பெண்களுக்கு, 25 ஆயிரம் ரூபாய் மானியத்தில், தமிழக அரசால், அம்மா ஸ்கூட்டர் வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில், எந்த நிறுவன வாகனத்தையும், அரசின் மானியத்தில் பெறலாம். அது, இந்தாண்டு தயாரிப்பாகவும், 125 சி.சி., திறனுள்ள, கியர் இல்லாத வாகனமாகவும் இருக்க வேண்டும்.

இந்த ஸ்கூட்டரை மூன்றாண்டுகளுக்கு விற்க முடியாது என, அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின், கிராமப்புற வாழ்வாதார திட்டம் மற்றும் மானிய விலை ஸ்கூட்டர் திட்ட இயக்குனர் அனுமதி இல்லாமல், மூன்றாண்டுகளுக்கு, வாகன உரிமையை மாற்ற முடியாது.

இதை, உறுதிப்படுத்தும் வகையில், வாகன உரிமையாளருக்கு வழங்கப்படும்,ஆர்.சி., புத்தகத்தில், 'அம்மாஇருசக்கர வாகன மானிய திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட இந்த வாகனத்தை, மூன்றாண்டுகளுக்கு விற்கவோ, உரிமம் மாற்றமோ செய்யக்கூடாது' என, 'சீல்' வைக்கப்பட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (40)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ARASU - ,சிங்கப்பூர்
07-மார்-201811:17:28 IST Report Abuse
ARASU ஸ்குட்டர் தூக்கிட்டு ஒடுங்கடா
Rate this:
Share this comment
Cancel
rajan. - kerala,இந்தியா
05-மார்-201817:18:35 IST Report Abuse
rajan.  அது சரியப்பு அப்போ மானிய ஸ்குட்டர் வாங்கித்தரேன்னு உங்க ஆளுங்க ரூபா 5000 வசூல் பண்ணுறாங்களே அதற்கு தடை எதுவும் இல்லையோ.
Rate this:
Share this comment
Cancel
05-மார்-201816:05:05 IST Report Abuse
அண்ணாமலை ஜெயராமன் இப்போதே விற்றுவிட்டு மூன்று வருடம் கழித்து பெயர் மாற்றம் செய்வார்கள்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X