கார்த்தி விவகாரத்தில் சிக்கும் முக்கிய அரசியல் புள்ளி| Dinamalar

கார்த்தி விவகாரத்தில் சிக்கும் முக்கிய அரசியல் புள்ளி

Added : மார் 05, 2018 | கருத்துகள் (91)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
Karthi Chidambaram, INX Media Scam, CPI,கார்த்தி சிதம்பரம், ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு, சிபிஐ, அமலாக்கத்துறை, முக்கிய அரசியல் புள்ளி, கார்த்தி விவகாரம், ஸ்காட்லாந்து ராயல் வங்கி, 
 Enforcement Department, Important Politician, Karthi affair, Scotland Royal Bank,

புதுடில்லி : ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் சிபிஐயால் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்திடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது.

ஐஎன்எக்ஸ் மீடியா நிதி முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறை நடத்திய விசாரணையில், முக்கிய அரசியல் புள்ளி ஒருவருக்கு கார்த்தியின் வங்கி கணக்கில் இருந்து முறைகேடாக ரூ.1.8 கோடி பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஸ்கார்ட்லாந்து ராயல் வங்கியின் சென்னை கிளையில் உள்ள கார்த்தியின் கணக்கில் இருந்து 5 தவணைகளாக பணம் கொடுக்கப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மத்தியில் பெரும் செல்வாக்கும் மிகுந்த அந்த அரசியல் புள்ளிக்கு எதற்காக கார்த்தி பணம் கொடுத்துள்ளார், அந்த பணம் எந்த வழியில் வந்தது என விசாரிக்கப்பட உள்ளதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 2006 ம் ஆண்டு ஜனவரி 16 முதல் 2009 ம் ஆண்டு செப்டம்பர் 23 வரை இந்த தொகை பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது. அந்த அரசியல் புள்ளிக்கு பணம் கொடுக்கும்படி கார்த்திக்கு யார் பணம் கொடுத்தார்கள் என்றும் விசாரணை நடத்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

தற்போது சிபிஐ காவலில் இருக்கும் கார்த்தியின் காவல் நிறைவடைந்ததும், தங்களின் விசாரணையை துவக்குவதற்காக அமலாக்கத்துறை காத்துக் கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.

Advertisement
வாசகர் கருத்து (91)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Chandrasekaran Narayanan - Hosur,இந்தியா
11-மார்-201809:51:23 IST Report Abuse
Chandrasekaran Narayanan 2009 ல் நடந்த பண பரிவர்த்தனையை இப்போ தான் வெளீயே வந்துள்ளது. அமலாக்கத்துறையின் சுறுசுறுப்பு வியக்க வைக்கிறது.
Rate this:
Share this comment
Cancel
வெகுளி - Maatuthaavani,இந்தியா
06-மார்-201805:52:58 IST Report Abuse
வெகுளி யாரது?..... பப்புவா?......
Rate this:
Share this comment
Cancel
Agrigators - Chennai,இந்தியா
05-மார்-201821:01:39 IST Report Abuse
Agrigators சிக்குவதால் என்ன பெரிதாக நடந்துவிட போகிறது
Rate this:
Share this comment
madhavan rajan - trichy,இந்தியா
06-மார்-201819:24:08 IST Report Abuse
madhavan rajanகலைஞர் டி வி சொன்ன மாதிரி கடந்தான் வாங்கினேன் இதோ திருப்பி தருகிறேன் என்று கொடுத்துவிடுவார். கேஸ் முடித்துவிடுவார் நீதிபதி....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X