என்னால் எம்.ஜி.ஆர்., ஆட்சியை தர முடியும்: ரஜினி| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

என்னால் எம்.ஜி.ஆர்., ஆட்சியை தர முடியும்: ரஜினி

Updated : மார் 06, 2018 | Added : மார் 05, 2018 | கருத்துகள் (297)
Advertisement

சென்னை : ''தமிழகத்தில், நல்ல தலைவனுக்கு வெற்றிடம் உள்ளது. அந்த வெற்றிடத்தை பிடிக்க வருகிறேன். எம்.ஜி.ஆர்., போல் என்னால் வர முடியாது; ஆனால், அவர் கொடுத்த நல்லாட்சியை, என்னால் கொடுக்க முடியும்,'' என, நடிகர் ரஜினி திட்டவட்டமாக தெரிவித்தார்.
சென்னை, வேலப்பன்சாவடியில் உள்ள, ஏ.சி.எஸ்., மருத்துவக் கல்லுாரி வளாகத்தில், எம்.ஜி.ஆர்., சிலையை திறந்து வைத்து, ரஜினி பேசியதாவது:நீதிமன்ற உத்தரவை மீறி, வழியில் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன; இது தவறு. இனிமேல், இந்த தவறை செய்யக் கூடாது. பேனர்கள் இடையூறாக இருந்திருந்தால், மக்கள் மன்னிக்கவும்.
நான், 1996ல் அரசியலில் ஈடுபடும் சூழல் வந்த போது, 'அரசியலுக்கு வந்தே ஆக வேண்டும்' என வற்புறுத்தியவர்களில், ஏ.சி.சண்முகமும் ஒருவர். அவர், என் மீது கொண்ட அன்பு அளவு கடந்தது. 'பல்கலையில் அமைக்கப்பட்டுள்ள, எம்.ஜி.ஆர்., சிலையை, நீங்கள் தான் திறக்க வேண்டும்' என்றார்.

என்னால் எம்.ஜி.ஆர்., ஆட்சியை தர முடியும்: ரஜினி


தகுதி உள்ளதா


எத்தனையோ பெரிய மனிதர்கள் இருக்கும் போது, எம்.ஜி.ஆர்., சிலையை திறக்கும் தகுதி, எனக்கு உள்ளதா என்ற, சந்தேகம் ஏற்பட்டது. அவரிடம் கேட்ட போது, 'எம்.ஜி.ஆர்., திரையுலகத்திலிருந்து வந்தவர். நீங்கள் அவரது நண்பர். எனவே, நீங்கள் திறக்க வேண்டும்' என்றார். இங்கு அரசியல் பேசக் கூடாது என, நினைத்தேன். ஆனால், பேசும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளேன். சில விஷயங்களை மட்டும் பேசுகிறேன். எம்.ஜி.ஆர்., நுாற்றாண்டு இது. தற்போது, அவரது கட்சியின் ஆட்சி நடக்கிறது. ஊரெல்லாம் போய், நுாற்றாண்டு விழா கொண்டாடுகின்றனர். அவருக்கு தாய் வீடு திரையுலகம். இதய தெய்வம் எனக் கூறப்படும் ஜெயலலிதாவும், திரையுலகில் இருந்து வந்தவர். அதை மதித்து, திரையுலகினரை கூப்பிட்டு, பெரிய விழாவை நடத்தி, எம்.ஜி.ஆருக்கு மரியாதை செய்வர் என, எதிர்பார்த்தேன்.


கரை வேட்டி


அவ்விழாவில், எம்.ஜி.ஆருக்கும், எனக்கும் உள்ள தொடர்பு குறித்து பேச வேண்டும் என, நினைத்தேன். ஆனால், அதுபோன்ற நிகழ்ச்சி நடத்தப்படவில்லை. அதற்கு பதிலாக, ஏ.சி.சண்முகம், இந்த விழாவை நடத்துகிறார். அவர்கள், 'திரையுலகிலிருந்து ஒருவர் அரசியலுக்கு வரக் கூடாது' என்கின்றனர். 'நாங்கள், கரை வேட்டியை கழற்றி விட்டு, பேன்ட் -- சட்டை போட்டு, 'ஹீரோயினோடு டூயட்' பாட வரவில்லை. நீங்கள், ஏன் கரை வேட்டி கட்டிக்கொண்டு, அரசியலுக்கு வருகிறீர்கள்' என, கேட்கின்றனர். நான், என் வேலையை சரியாக செய்து கொண்டிருக்கிறேன். நீங்கள், உங்கள் வேலையை சரியாக செய்யவில்லை. 1996ல் இருந்து, அரசியல் தண்ணீர் என் மீது பட்டுவிட்டது. அரசியல் குறித்து, அவ்வப்போது தெரிந்து கொண்டிருக்கிறேன். கருணாநிதி, மூப்பனார், சோ ஆகியோருடன் பழகி, நானும் கொஞ்சம் அரசியல் கற்றுள்ளேன். எங்க தப்பு நடக்குது; எப்படி தடுக்கணும் என தெரியும். மக்களுக்கு நல்லது செய்யணும் என்பதற்காக, அரசியலுக்கு வருவதாக கூறினேன். என்னை ரத்தின கம்பளம் விரித்து, வாழ்த்து கூறுவீர்கள் என, எதிர்பார்க்கவில்லை. வாழ்த்து கூற வேண்டாம்; ஏன் ஏளனம் செய்கிறீர்கள்... அரசியல் பாதை, பூ பாதை அல்ல; முள் இருக்கிற பாதை; பாம்பு இருக்கிற பாதை என்பது, எனக்கும் தெரியும். எனக்கு தெரிந்திருந்தும், மக்களுக்கு நல்லது செய்ய, அரசியலுக்கு வருகிறேன் என்றால், ஏன் ஏளனம் செய்கிறீர்கள் என்பது தெரியவில்லை.


திட்டுகிற அரசியல் இனி வேண்டாம்.


'எல்லாரும் எம்.ஜி.ஆர்., ஆகிவிட முடியாது' என, கூறுகின்றனர்.சத்தியமாக, யாரும், எம்.ஜி.ஆர்., ஆக முடியாது. அவர், யுக புருஷர்; பொன்மன செம்மல். இன்னும், ஆயிரம் ஆண்டு வந்தாலும், அவரை போல் ஒருவர் பிறக்க இயலாது.எம்.ஜி.ஆர்., போல் ஆக வேண்டும் என நினைத்தால், அவனை போன்ற பைத்தியக்காரன் இருக்க முடியாது. அதே நேரத்தில், அவர் கொடுத்தது போல் நல்லாட்சியை, ஏழைகளுக்கான ஆட்சியை, சாமானியருக்கான ஆட்சியை, மத்திய குடும்பத்தினருக்கான ஆட்சியை, என்னால் கொடுக்க முடியும் என்ற, நம்பிக்கை எனக்கு உள்ளது.


ஆன்மிக அரசியல்


மக்கள் ஆசிர்வாதத்தால், இளைஞர்கள் ஆதரவால், தொழில்நுட்பம் பயன்படுத்தி, நல்ல திறமைசாலிகளை வைத்து, அந்த மாதிரி ஆட்சியை கொடுக்க முடியும்.ஆன்மிக அரசியல் என்ன என, கேட்கின்றனர். உண்மையான, நேர்மையான, வெளிப்படையான, ஜாதி, மத கலப்பற்ற ஆட்சியை தருவது தான் ஆன்மிக அரசியல். துாய்மை என்பது தான் ஆன்மிகம். அதாவது, துாய்மையான அரசியல்.அனைத்து ஜீவராசிகளும் ஒன்று தான். இறை நம்பிக்கை இருப்பது தான் ஆன்மிக அரசியல்.
திராவிடத்தில் துாய்மை கிடையாதா... நேர்மை கிடையாதா... இறை பக்தி கிடையாதா... இனிமேல் தான் பார்க்க போகிறீர்கள், ஆன்மிக அரசியலை!கடந்த, டிச., 31ம் தேதி, அரசியலுக்கு வருகிறேனா, இல்லையா என்பதை தெரிவிக்கப் போவதாக கூறினேன். 29ம் தேதியே, 'உங்கள் கொள்கை என்ன...' என, கேட்கின்றனர். பெண் பார்க்க செல்லும் போது, அழைப்பிதழ் வரவில்லை எனக் கூறுவது போல் இருந்தது. பொதுமக்கள் முன், ஜாக்கிரதையாக பேசவேண்டும். சினிமாக்காரங்களுக்கு, மாத கணக்கில், 'ரூம்' போட்டு, கதை செய்வோம். படத்தை பார்த்து விட்டு, 'அது சரியில்லை' என, கூறி விடுவர்.அரசியலுக்கு ஏன் வருகிறீர்கள்; ஜெ., இருக்கும் போது ஏன் வரவில்லை என் றும் கேட்கின்றனர். பயமா என்றும் கேட்கின்றனர். மறுபடி மறுபடி, 1996 பற்றி கூற வேண்டியதில்லை. அவர் இருக்கும் போதே, குரல் கொடுத்தேன். வெற்றிடம் இருப்பதாக நினைத்து, வரப் பார்க்கிறீர்கள் என்கின்றனர்.தமிழகத்தில், நல்ல தலைவனுக்கு வெற்றிடம் உள்ளது; நல்ல தலைமைக்கு வெற்றிடம் உள்ளது. சக்தி வாய்ந்த, திறமை வாய்ந்த இரண்டு தலைவர்கள் இருந்தனர்.ஜெ.,வின் ஆளுமை குறித்து, யாரும் கேள்வி கேட்க முடியாது. கட்சியை கட்டுப்பாட்டோடு வைத்து இருந்தார். அந்த பக்கம் கருணாநிதி; எனது அருமை நண்பர். 13 ஆண்டுகள், ஆட்சியில் இல்லாமலிருந்தாலும், கட்சியை காப்பாற்றினார்; எத்தனையோ தலைவர்களை உருவாக்கினார்.


தலைவன் தேவை


அவர், தற்போது உடல்நிலை சரியில்லாமல் உள்ளார். தமிழகத்திற்கு, ஒரு தலைவன் தேவை. அந்த இடத்தை நிரப்ப, நான் வருகிறேன். நம் பக்கம், ஆண்டவன் இருக்கிறான். நான், சிவாஜியின் ரசிகன். சென்னை வந்த பின், சினிமா உலகில் நுழைந்த பின், எம்.ஜி.ஆர்., குறித்து கேள்விப்பட்டு, அவரது சாதனைகளை பார்த்து, வாழ்க்கையில் அவரது ரசிகனாகினேன்.அவரது சாதனைகள் பெரிது. 1950களில், அவர் பெரிய, 'ஆக் ஷன் ஹீரோவாக' இருந்தார். திடீரென, 1952ல், சிவாஜி நுழைந்தார். நடிப்பு என்றால் என்ன என்று, காட்டி விட்டார்; ஒரு புரட்சியை உருவாக்கினார். அந்த கால கட்டத்தில், பெரிய தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், சிவாஜி பின்னால் சென்றனர். எம்.ஜி.ஆர்., கதை முடிந்து விட்டதாக நினைத்தனர். எம்.ஜி.ஆர்., சொந்தமாக படம் தயாரித்தார். அந்த படத்தை, அவரே இயக்கினார். இவருக்கு, இது தேவையா என, நினைத்தனர். அந்த படம், 'நாடோடி மன்னன்' இதிகாசம் படைத்தது. இயக்குனர்கள் நடுங்கினர்; தான் யார் என, நிரூபித்தார். சினிமாவில் நடிப்பின் இமயமான சிவாஜியோடு போட்டியிட்டு, அவரை விட புகழ் சம்பாதித்து, பெரிய படங்கள் கொடுத்து, சாதனை படைத்தார். அரசியலில், அவருக்கு கருணாநிதி போட்டி. அவரை மாதிரி, ஒரு எழுத்தாளர், பேச்சாளர், அரசியல் ஞானி, ராஜதந்திரி, இந்தியாவில் கிடையாது. ஆனால், அவரை, 13 ஆண்டுகள் கோட்டையில், முதல்வர் பதவி பக்கம் வர முடியாது செய்தவர், எம்.ஜி.ஆர்., இது சாதாரண சாதனையா? சாமானிய மக்களுக்கு, மின்சாரம் சென்றது. குடிசை வீடுகளுக்கு, இலவச மின்சாரம் கொடுத்தனர். சாலை போட்டனர்; பஸ் விட்டனர். பஸ் கட்டணம் ஏறவில்லை. மதிய உணவு, காமராஜர் கொண்டு வந்தார். அதை சத்துணவாக, அனைவருக்கும் உணவு வழங்கினார். சைக்கிளில், 'டபுள்ஸ்' போனால் பிடித்து விடுவர்; அந்த சட்டத்தை மாற்றினார். சந்தேகத்தில் யார் மீது வேண்டுமானாலும் வழக்கு போடலாம் என்ற, சட்டத்தை மாற்றினார். அதனால் தான், 13 ஆண்டுகள் இருந்து, அமெரிக்காவில் இருந்த படி வெற்றி பெற்றார். அவர் மாமனிதர். அவரது சமாதியில், கடிகாரம் சத்தம் கேட்கிறதா என, மக்கள் கேட்டுக் கொண்டிருக்கின்றனர். எனக்கும், இரண்டு நிகழ்ச்சி, அவருடன் நடந்துள்ளது. அவரை முதலில், நான் பார்த்தது, 1973ல், நடிப்பு கல்லுாரியில் படித்த போது தான். வகுப்பில் இருந்து, போன் பேசுவதற்காக, வௌியில் வந்தேன். அப்போது, காரில் தொப்பி, கண்ணாடி போட்டு, ஆப்பிள் கலரில், சூரியன் மாதிரி ஜொலித்து கொண்டு, இறங்கினார்.
அதன் பின், 1975ல், 'மூன்று முடிச்சு' படம், ராகினி ஸ்டூடியோவில், 'செட்' போட்டிருந்தனர். ஒரு நாள் அனைவரும் அமைதியாக இருந்தனர். 'எம்.ஜி.ஆர்., ஷூட்டிங்' என்றனர். தென்னிந்தியாவில், முதலில் வீட்டில் நீச்சல் குளம், உடற்பயிற்சிக் கூடம் அமைத்தது அவர் தான்! ஏழைகளுக்கு மாதம்தோறும், 300 ரூபாய், 400 ரூபாய் என கொடுப்பார். அதற்கு, ஆட்கள் வைத்திருந்தார். பணம் கொடுத்து சிவந்த கை. 1978ல், எனக்கு உடல் நிலை சரியில்லை. சென்னை, விஜயா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தேன். நரம்பு தளர்ச்சி. எம்.ஜி.ஆர்., வாரம் ஒரு முறை, இரு முறை போன் செய்து, 'எப்படி இருக்கிறார்' என, விசாரித்தார். நான் குணமடைந்த பின், வெளியில் விடவில்லை. 'நான் அவரிடம் பேசணும்' என, முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர்., கூறியதாக கூறினார். எம்.ஜி.ஆர்., பேசினார். 'டில்லி போய் கொண்டிருக்கிறேன். வந்த பின், பாருங்கள்' எனக் கூறினார். தி.நகர் அலுவலகத்தில் சென்று சந்தித்தேன். 'நடிகனுக்கு உடல் தான் மூலதனம். அதை நன்றாக பார்த்துக் கொள். சண்டை காட்சியில், 'ரிஸ்க்' எடுக்காதே' எனக் கூறினார். 'திருமணம் எப்போது' எனக் கேட்டார். 'முதலில், திருமணம் செய்து கொள்ளுங்கள். நான் திருமணத்திற்கு வருகிறேன். பெண்ணை பார்த்ததும், முதலில் என்னிடம் தான் சொல்ல வேண்டும்' என்றார். அதன் பின், இரண்டு அல்லது மூன்று மாதங்களில், என் மனைவி, லதாவை பார்த்தேன்; எம்.ஜி.ஆரிடம் தெரிவித்தேன்; மகிழ்ச்சி அடைந்தார். லதா வீட்டில் சம்மதிக்கவில்லை. ஐந்து மாதங்கள் கழித்து, என்னாச்சு என கேட்டார். ஒப்புக்கொள்ள தாமதிக்கின்றனர் என, கூறினேன்.
அப்படி சொல்லி, இரண்டு நாட்களில் ஒப்புக் கொண்டனர். ஒய்.ஜி.பார்த்தசாரதி உறவினர், லதா என்பதால், எம்.ஜி.ஆர்., போன் செய்து, 'ஏன் தயங்குகிறீர்கள்; கொஞ்சம் கோபக்காரன். உங்கள் மகளை நன்றாக பார்த்துக் கொள்வார்' என, கூறினார். இன்று, நான் மகிழ்ச்சியாக இருப்பதற்கு காரணம், எம்.ஜி.ஆர்! அதில், ஊடகங்களுக்கு சந்தேகம் இருந்தால், ஒய்.ஜி.பி.,யோட மனைவி இருக்காங்க; அவங்க கிட்ட கேட்டு தெரிஞ்சுக்கோங்க. கடந்த, 1984ல், கோடம்பாக்கத்தில், ராகவேந்திரா திருமண மண்டபம் கட்டினேன். தடையில்லா சான்றிதழ் பெற விண்ணப்பித்தேன்; அனுமதி கிடைக்கவில்லை; வேலையை நிறுத்தினேன். ஒரு நபர், பைலை தடுக்கிறார். நான் அவரை சந்திக்க சென்ற போது, அனுமதி அளிக்கவில்லை. அதன் பின், நண்பர்கள், 'முதல்வரை சென்று பாருங்கள்' எனக் கூறினர். எனக்கு யாரிடமும் கேட்டு பழக்கமில்லை.ஒரு நாள், மும்பையிலிருந்தேன். முதல்வரை பார்க்க நேரம் கேட்டேன். உடனே கிடைத்தது. மறுநாள், ராமாவரம் தோட்டத்தில் சந்தித்தேன். கோடம்பாக்கத்தில் மண்டபம் கட்டுகிறேன். ஒரு நபர் பிரச்னை செய்வதாகக் கூறினேன். 'மும்பை ஷூட்டிங் முடித்துவிட்டு வாருங்கள்' எனக் கூறினார். 'ஷூட்டிங்' முடித்து சென்றேன். நான், ஆறு மாதங்களாக அனுமதி கேட்ட நபர், கை கட்டிய படி இருந்தார். 'இவர் யார் தெரியுமா' என, அவரிடம் எம்.ஜி.ஆர்., கேட்டார். 'இந்த காலத்தில் பணம் சம்பாதிப்பதே கஷ்டம். நல்ல காரியம் செய்கிறார். தொல்லை கொடுக்கலாமா' என்றார், எம்.ஜி.ஆர்., அப்போது, வீட்டு வசதித்துறை அமைச்சராக இருந்த திருநாவுக்கரசுக்கு போன் செய்தார்; மூன்று நாளில் சான்றிதழ் கிடைத்தது. இதில் ஊடகங்களுக்கு சந்தேகம் இருந்தால், திருநாவுக்கரசரிடம் கேட்டுக் கொள்ளுங்கள். எம்.ஜி.ஆர்., ஒரு தெய்வப்பிறவி. அவரை இறைவன் இயக்கினான். அவர் குறித்து பேசினால், அ.தி.மு.க., ஓட்டு, எம்.ஜி.ஆர்., விசுவாசிகளை இழுக்க பார்க்கிறார் என, கூறுகின்றனர்.இவ்வாறு ரஜினி பேசினார்.
ரசிகர்கள் உற்சாக வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்க ரஜினி, நேற்று மாலை, போயஸ் கார்டன் பகுதியில் உள்ள வீட்டில் இருந்து, காரில் புறப்பட்டார். பூந்தமல்லி நெடுஞ்சாலை வழியாக, வேலப்பன் சாவடி செல்வதை அறிந்த ரசிகர்கள், மன்ற நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள், கோயம்பேட்டில் இருந்து, நிகழ்ச்சி நடந்த இடம் வரை, சாலையில் இருபுறமும் ஆயிரக்கணக்கில் திரண்டனர். ரஜினியை உற்சாகத்துடன் வரவேற்றனர். அவர்களை பார்த்ததும், ரஜினி இருக்கையில் அமர்ந்தவாறு இரு கரம் கூப்பி அவர்களுக்கு வணக்கம் தெரிவித்தவாறு பயணித்தார். வேலப்பன்சாவடி அருகே சென்றதும், காரின், மேல் கண்ணாடி திறப்பை திறந்து நின்றவாறு, ரசிகர்களை பார்த்து கை அசைத்தார்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (297)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sandru - Chennai,இந்தியா
29-மார்-201804:41:46 IST Report Abuse
Sandru கர்நாடகா புறம்போக்கு .
Rate this:
Share this comment
Cancel
Anandan - chennai,இந்தியா
11-மார்-201803:15:56 IST Report Abuse
Anandan திரையில் இருப்பதை உண்மைன்னு நம்பிய முட்டாள் கூட்டத்தால் முதல்வரானார் இப்போ அப்படிப்பட்ட கூட்டம் அதிகம் இல்லைங்க. அப்போ நீங்களும் கொள்கை வளர்ச்சி பாதையில் ஆட்சி செய்ய விருப்பம் இல்லை. அப்படித்தானே ரஜினி.
Rate this:
Share this comment
Cancel
bairava - madurai,இந்தியா
10-மார்-201811:14:58 IST Report Abuse
bairava யாராச்சும் ரெண்டு வார்த்தை நறுக்குன்னு இந்த பரட்டைய கேட்க துப்பிருக்கா ?? 1 . இதுவரைக்கும் வயசுக்கு வராத நீ இப்போ ஏன் திடீர்னு வருகிறாய் ? 2.இந்த வயசில் எம் ஜி ஆர் இறந்துவிட்டார் நீர் எப்படி அவருடைய ஆட்சியை கொடுப்பேன் என்று சவுடால் பேசுகிறாய்? என்று கேட்க கூடாதா
Rate this:
Share this comment
தலைவா - chennai,இந்தியா
19-மார்-201800:50:34 IST Report Abuse
தலைவா முதல்ல எழுந்து நிக்க தெம்பு இருக்கா? மிஸ்டர் டூப் ஸ்டார்....
Rate this:
Share this comment
Cancel
Dominic Rajendran - mumbai,இந்தியா
09-மார்-201812:15:25 IST Report Abuse
Dominic Rajendran அது எங்களுக்கு வேண்டாம். அவரது வழிகாட்டலில் ஜெயலலிதாவின் ஆட்சி, நாட்டுக்கு தந்தது ஊழல் மட்டும். மக்கள் இன்னும் அறிவார்த்தவர்களாய்ஆக இன்னும் ஆண்டுகள் தேவை.
Rate this:
Share this comment
Cancel
Gopal Thiyagarajan - Chennai,இந்தியா
09-மார்-201809:20:09 IST Report Abuse
Gopal Thiyagarajan அவர் எம்.ஜி.ஆர்.ஆட்சியையும் தர முடியாது. ஒரு படத்தில் நடிப்பதற்கு எத்தனை கோடிகள் வாங்குகிறார்? பள்ளிக்கு சில ஆண்டுகளாக வாடகையே கொடுக்கவில்லை. இவரெல்லாம் வந்தால் ஊழல் கரை புரண்டு ஓடும்.தமிழக மக்களுக்கு உதவி செய்யவேண்டாம்.ஏதாவது குரலாவது கொடுத்திருக்கிறாரா?
Rate this:
Share this comment
Cancel
Gopalsami.N - chennai,இந்தியா
09-மார்-201807:13:58 IST Report Abuse
Gopalsami.N எம்.ஜி.ஆர். ஆட்சி என்றால் அதுவும் ஒரு திராவிட ஆட்சிதான். காமராஜரைப் போல் ஒரு தன்னலமற்ற தலைவன் கிடைப்பது அரிது. கிடைத்தால் தமிழகத்திற்கு விடிவு. இந்த என் கருத்திற்கு பிறகு தயவு செய்து காமராஜர் ஆட்சி தரமுடியும் என்று மாற்றிப்பேசவேண்டாம்.
Rate this:
Share this comment
Cancel
Ramu - Birmingham,யுனைடெட் கிங்டம்
08-மார்-201818:29:28 IST Report Abuse
Ramu ரஜினி என்ன பேசினாலும் இந்த காலத்தில் எடுபடாது. இவர்தான் சரியான தலைவர் என்கிற மக்களின் நம்ம்பிக்கையை இதுவரை பெறவில்லை இனியும் பெறுவார் என்பது சந்தேகமே. சினிமா கொடுத்த புகழைத்தவிர வேறு எதுவும் இப்போதைக்கு இவரிடம் இல்லை. எதோ முதலமைச்சர் ஆகவேண்டும் என்கிற பேராசைப்பிசாசு இவரை வந்து பிடித்துக்கொண்டு இருக்கிறது...... என்ன செய்ய? இவரும் மனிதன்தானே சட்டியில் இருந்தால்தானே அகப்பையில் வரும் : உண்மையில் இவரிடம் நாட்டு மக்களுக்கான முன்னேற்ற திட்டங்கள் உள்ளனவா? புலியை பார்த்து பூனை கோடு போட்டுக்கொண்டதுபோல : MGR உம இவரும் ஒன்றா? ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா? : இவரது வயது என்ன இப்போது? இன்றுவரை நாட்டு நலத்திற்கு என்ன செய்து உள்ளார். 96 இல் குரல் கொடுத்தது ஒன்றும் இவரது கருத்து இல்லை. அது ஜெ. வுக்கு எதிரான தமிழகத்தின் ஒட்டுமொத்த குரல். மாற்றான் தொட்டது மல்லிகையும் மணக்கும்: இவர் சினிமா புகழ், மற்றும் ரசிகர்களை மட்டுமே நம்பி களத்திற்கு வருகிறார். மற்ற அனைத்து தரப்பினரையும் இவரால் அரவணைத்து செல்ல இயலாது. கமலுக்கும் இது பொருந்தும்.
Rate this:
Share this comment
Dr. Kumar - Fair Fax,யூ.எஸ்.ஏ
22-மார்-201801:55:26 IST Report Abuse
Dr.  Kumarமது குடித்த மண்டிபோல என்றோரு செய்யுள் படித்த ஞாபகம். என்ன பேசுகிறோம் என்று யோசிக்காமல் பேசுகிறார் இவர். எம்ஜியார் உடைய சித்தாந்தம் மற்றும் அவருடைய கொள்கை இவருக்கு தெரியுமா? நம்முடைய பேசிக் தேவைகளை கூட தெரிந்து வைக்கவில்லை. முதலில் தமிழகத்தின் தண்ணீர் தேவையை எப்படி பூர்த்தி செய்வார் என்று மட்டும் கூறட்டும். அதன் பிறகு எம்ஜியார் செண்டிமெண்டெல்லாம் பார்க்கலாம். எந்த பெயரை சொன்னால் கடையை ஓட்டலாம் என்று யாரோ சொல்லிக் கொடுத்ததை சொல்றார். கொள்கையற்ற அரசியல் செய்ய முடியுமா? சும்மா வெத்து வெட்டு எம்ஜியார் நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா என்று கூறியவர். இவை இரண்டும் ரஜினிக்கு உண்டோ? நேர்மை இல்லாத தலைவனை மக்கள் விரும்ப மாட்டார்கள். சொந்த கடனையே அடைக்க தெரியாதவர் நாட்டு நலனில் உண்மையை இருக்க முடியுமா?...
Rate this:
Share this comment
Cancel
hasan - Chennai,இந்தியா
08-மார்-201818:12:44 IST Report Abuse
hasan இவன் நடத்தும் பள்ளிக்கு வாடகை கொடுக்காதவன் இவன் மனைவி வாங்கிய கடனை கொடுக்காதவள் இவன் அரசியலுக்கு வந்தால் நாடு குட்டிச்சுவர்.
Rate this:
Share this comment
Dr. Kumar - Fair Fax,யூ.எஸ்.ஏ
22-மார்-201801:56:25 IST Report Abuse
Dr.  Kumarநன்று...
Rate this:
Share this comment
Cancel
Dominic Rajendran - mumbai,இந்தியா
08-மார்-201813:20:11 IST Report Abuse
Dominic Rajendran எம்.ஜி.ஆர் ஆட்சி தர, கமல் ஹஸன்னால் முடியும்.
Rate this:
Share this comment
Cancel
ரத்தினம் - Muscat,ஓமன்
08-மார்-201808:52:39 IST Report Abuse
ரத்தினம் அதென்ன எதெற்கெடுத்தாலும் எம் ஜி ஆர் ஆட்சி ? அப்படி என்ன பிரமாதமாக செய்து விட்டார்? தனது அடிப்பொடிகளை கல்வி வியாபரம் செய்ய விட்டார். காசு சம்பாதிக்க அனுமதித்தார். அரசியல் குண்டர்களை உருவாக்கினார். உருப்படியான திட்டங்கள் ஒன்றும் இல்லை. உண்மையான தமிழகத்தின் வளர்ச்சி பழைய காங்கிரஸ் ஆட்சியில் காமராஜர் காலத்தில் தான்.
Rate this:
Share this comment
Dr. Kumar - Fair Fax,யூ.எஸ்.ஏ
22-மார்-201801:58:23 IST Report Abuse
Dr.  Kumarஉண்மை. காமராஜர் ஆட்சி மலர வேண்டும்.. நிறைய திட்டங்களை வகுத்தவர் காமராஜர். மக்கள் தலைவன் அவரே....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை