தினகரன் சகோதரிக்கு கணவருடன் சிறை Dinamalar

கோர்ட் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
தினகரன் சகோதரிக்கு
கணவருடன் சிறை

சென்னை : சொத்து வழக்கில் விதிக்கப்பட்ட சிறை தண்டனையை, உயர் நீதிமன்றம் உறுதி செய்ததால், சி.பி.ஐ., நீதிமன்றத்தில், தினகரனின் சகோதரி மற்றும் அவரது கணவர், சரணடைந்தனர். இதையடுத்து, இருவரும் சிறைக்கு அனுப்பப்பட்டனர்.

Dinakaran,TTV Dinakaran,டி.டி.வி. தினகரன்,தினகரன்


ரிசர்வ் வங்கியில், பாஸ்கரன் என்பவர் பணியாற்றி வந்தார். இவரது மனைவி, ஸ்ரீதளாதேவி. இவர், தினகரனின் சகோதரி. வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக, பாஸ்கரன் மற்றும் ஸ்ரீதளாதேவிக்கு எதிராக, சி.பி.ஐ., வழக்கு பதிவு செய்தது.வழக்கை விசாரித்த, சென்னை, சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்றம், பாஸ்கரனுக்கு, ஐந்து ஆண்டு சிறை, 20 லட்சம் ரூபாய் அபராதம்; ஸ்ரீதளாதேவிக்கு, மூன்று ஆண்டு சிறை, 10 லட்சம் ரூபாய் அபராதம் விதித்தது. 2008
ஆகஸ்டில், இந்த தீர்ப்பு வழங்கப்பட்டது.

இதை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில், இருவரும் மேல்முறையீடு செய்தனர். மனுவை தள்ளுபடி செய்து, இருவருக்கும் விதிக்கப்பட்ட தண்டனையை, உயர் நீதிமன்றம் உறுதி செய்தது. ௨௦௧௭ நவம்பரில், இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இதையடுத்து, இருவரும், உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். விசாரணை முடியும் வரை, சிறை தண்டனையை நிறுத்தி வைக்கும்படி கோரப்பட்டது.மனுக்களை விசாரித்த உச்ச நீதிமன்றம், முதலில், சி.பி.ஐ., நீதிமன்றத்தில், இருவரும் சரணடைய உத்தரவிட்டது. அதன்படி, நேற்று இருவரும், நீதிமன்றத்தில் சரண் அடைந்தனர்.

Advertisement


இருவரையும் சிறையில் அடைக்க, நீதிபதி, திருநீல பிரசாத் உத்தரவிட்டார். பின், சிறைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.வருமான வரி செலுத்துவதால், சிறையில் முதல் வகுப்பு வழங்கவும், மருத்துவமனையில் சிகிச்சை பெற அனுமதிக்கவும் கோரி, இருவர் சார்பிலும், சி.பி.ஐ., நீதிமன்றத்தில், வழக்கறிஞர், கே.எம்.சுப்ரமணியன் மனு தாக்கல் செய்தார். இதற்கு பதிலளிக்க, சி.பி.ஐ.,க்கு உத்தரவிட்டு, விசாரணையை, நீதிபதி தள்ளி வைத்தார்.


Advertisement

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...


வாசகர் கருத்து (28)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
thiru mannaar - Thiruvarur,இந்தியா
09-மார்-201810:28:19 IST Report Abuse

thiru mannaarமன்னார்குடி திருவாரூர் கிட்ட நெருங்கி விட்டது சொம்பை உள்ள தூக்கி வை காவிரி தண்ணியோட மகிமை

Rate this:
Tamilselvan - Chennai,இந்தியா
06-மார்-201818:32:19 IST Report Abuse

Tamilselvanகொள்ளை கும்பலை உடேன உள்ளே தள்ள வேண்டும். வெளியில் வர முடியாத படி கடும் தண்டனை கூட கொடுக்கலாம். கொள்ளையின் அளவை பொறுத்து மரண தண்டனை கூட கொடுக்கலாம்.

Rate this:
Endrum Indian - Kolkata,இந்தியா
06-மார்-201815:57:48 IST Report Abuse

Endrum Indianஎல்லா குடும்பத்துக்கும் ஒரு தனி வழக்கம், பாடல், வீடு, நிலம் என்று பிதுரார்ஜித சொத்துக்கள் எனப்படும் ஒன்று இருக்கும். அது போலத்தான் இந்த மன்னார்குடி மாபியா - அவர்களின் டி.என்.ஏ- ஊழல் என்று மிக தீவிரமாக ஊடுருவியிருக்கின்றது.

Rate this:
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
06-மார்-201815:41:23 IST Report Abuse

Nallavan Nallavanசேர்த்துப் போடாதீங்க .... ஏடாகூடம்தான் ....

Rate this:
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
07-மார்-201802:25:01 IST Report Abuse

தமிழ்வேல் இருக்குற கும்பல் போதும்.....

Rate this:
ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா
06-மார்-201814:42:38 IST Report Abuse

ஆரூர் ரங்kutrap parambarai?

Rate this:
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
06-மார்-201814:06:37 IST Report Abuse

தமிழ்வேல் ரெண்டும் 1000 ம்னு வருஷத்துக்கு வருமான வரி கட்டிட்டு, ஆளுக்கு நாளொன்னுக்கு 6000 த்துக்கு வசதி அடைவானுவோ..

Rate this:
christ - chennai,இந்தியா
06-மார்-201813:23:22 IST Report Abuse

christஇதுங்க குடும்பமே பிராடு குடும்பம்

Rate this:
Yaro Oruvan - DUBAI,ஐக்கிய அரபு நாடுகள்
06-மார்-201813:13:38 IST Report Abuse

Yaro Oruvanபோற போக்க பாத்தா மன்னார்குடி கும்பலுக்கு தனி ஜெயில் வச்சி நடத்தணும் போலிருக்கு.. என்னா குடும்பம்டா.. பூராங்குத்துவிளக்கா இருக்குதுக.. ஐ மீன் குடும்ப குத்துவெளக்கு..

Rate this:
Balaji - Bangalore,இந்தியா
06-மார்-201811:24:47 IST Report Abuse

Balaji தினகரன் எப்போது?

Rate this:
karthi - chennai,இந்தியா
06-மார்-201811:23:02 IST Report Abuse

karthiமத்திய, மாநில அரசுகளுக்கு என்னுடைய தாழ்மையான வேண்டுகோள். சசிகலா கும்பலை சேர்ந்த அத்துணை பேரையும், நண்டு சிண்டு உட்பட, இந்தியாவில் உள்ள அனைத்து சிறைகளிலும்,சிறைக்கு இருவர் வீதம் கொண்டு போய் 12 ஆண்டுகளுக்கு அடைத்து வைத்தால் தமிழகம் காப்பாற்றப்படும். சசிகலா கும்பலை, தமிழக மக்கள் எல்லோருமே எதிர்க்கிறார்கள். அவர்களுக்கு என்ன தண்டனை கொடுத்தாலும் மக்கள் மகிழ்ச்சி அடைவார்கள். இருந்தும், அந்த கும்பலிடம் உள்ள கோடி கணக்கான கொள்ளை அடிக்கப்பட்ட பணத்தால் அவர்கள் அரசியல் செய்து வருகிறார்கள். இது தமிழ்நாட்டுக்கு மிக பெரிய ஆபத்து. ஆகவே மத்திய அரசு இதை உடனே செய்து தமிழ்நாட்டை காப்பாற்றவேண்டும். அதற்காக தற்போது இருக்கும் தமிழக அமைச்சர்கள் உத்தமர்கள் அல்ல. அவர்களில் தவறு செய்தவர்கள் மீது, மத்திய அரசு நடவடிக்கை எடுத்து, கொள்ளை அடித்த பணத்தை மீட்க வேண்டும்.

Rate this:
06-மார்-201814:24:07 IST Report Abuse

ரகுஒவ்வொரு சிறைகளிலும் இரண்டு பேரை அடைத்தால், அவர்கள் சிறையில் உள்ள கைதிகளை தங்களைப் போல் மாற்றி விடுவார்கள்...!...

Rate this:
மேலும் 16 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement