கூட்டணி கட்சி நிபந்தனை; பா.ஜ., தலைவர்கள் அதிர்ச்சி Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
கூட்டணி கட்சி நிபந்தனை
பா.ஜ., தலைவர்கள் அதிர்ச்சி

அகர்தலா : 'மாநில அரசில் மரியாதையுடன் நடத்தப்படாவிட்டால், வெளியில் இருந்து மட்டுமே ஆதரவு அளிப்போம்' என, திரிபுரா சட்டசபை தேர்தலில், பா.ஜ.,வுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட, ஐ.பி.எப்.டி., எனப்படும், திரிபுரா மலைவாழ் மக்கள் முன்னணி கட்சி கூறியுள்ளது.

B.J.P,BJP,Bharatiya Janata Party,பா.ஜ


வட கிழக்கு மாநிலமான, திரிபுராவில் நடந்த சட்டசபை தேர்தலில், பா.ஜ., - ஐ.பி.எப்.டி., கூட்டணி அமைத்து போட்டியிட்டன. மொத்தமுள்ள, 60 தொகுதிகளில், தேர்தல் நடந்த, 59 தொகுதிகளில், பா.ஜ., 35 தொகுதி களிலும், அதன் கூட்டணி

பா.ஜ., கூட்டணி, 43 இடங்களில் வென்றது. 25 ஆண்டுகளாக ஆட்சி செய்த, மார்க்.கம்யூ., 16 தொகுதிகளில் மட்டுமே வென்றது.
கட்சியான, ஐ.பி.எப்.டி., எட்டு தொகுதிகளிலும் வென்றன. புதிய முதல்வரை தேர்ந்தெடுப்பதற்கான, எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம், இன்று நடக்க உள்ளது.
இந்நிலையில், ஐ.பி.எப்.டி., தலைவர், என்.சி.தேப்பர்மா, நேற்று கூறியதாவது:மார்க்.கம்யூ., ஆட்சியை அகற்ற வேண்டும் என, பா.ஜ.,வுடன் இணைந்து கூட்டணி அமைத்தோம். அதில், வெற்றியும் பெற்றுள்ளோம். பா.ஜ.,வுக்கு தனிப் பெரும்பான்மை பலம் உள்ளது. இதனால், மாநில அரசில், எங்களுக்கு முக்கியத்துவம் கிடைக்காது என, பரவலாக பேசப்படுகிறது.
வெற்றி பெற்ற தொகுதிகளின் அடிப்படையில், எங்களுக்கு உரிய மரியாதை கிடைக்க வேண்டும்; முக்கிய துறைகள் ஒதுக்கப்பட வேண்டும்.

Advertisement


தகுந்த மரியாதை கிடைக்காவிட்டால், அரசுக்கு, வெளியில் இருந்து மட்டும் ஆதரவு தருவோம். எங்கள், எம்.எல்.ஏ.,க்களுக்கு தனி இடம் ஒதுக்க கோருவோம்.இவ்வாறு அவர் கூறினார்.
பதவியேற்பதற்கு முன்பே, கூட்டணி கட்சி நிபந்தனை விதித்து உள்ளதால், பா.ஜ., தலைவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.


Advertisement

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...


வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Endrum Indian - Kolkata,இந்தியா
06-மார்-201816:38:24 IST Report Abuse

Endrum Indianஇன்னும் என்ன என்னவோ அங்கே நடக்கும், 20 ஆண்டுகள் ஆட்சி செய்தவர் தனக்கு என்று ஒரு பெரும் "ஆமா சாமி" பட்டாளத்தை உருவாக்கியிருப்பார் அல்லவோ, அதை வைத்து இன்னும் எனென்னவெல்லமோ களேபரம் செய்யப்போகிறது இந்த தொத்தங்குளிகளான கம்ம்யூனிஸ்ட் பசங்கள். கேட்டால் நாங்கள் ஒண்ணுமே செய்யவில்லை இவர்கள் இரண்டு பேருக்கும் தகராறு என்று விரிஞ்சி கட்டிக்கொண்டு வருமே பார்க்கணும்.

Rate this:
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
06-மார்-201815:39:35 IST Report Abuse

Nallavan Nallavanதனித்து ஆட்சியமைக்க முடியாவிட்டால் பின்வாங்கிவிடலாம் என்பது எனது ஆலோசனை ....

Rate this:
Rahim - Riyadh,சவுதி அரேபியா
06-மார்-201811:54:33 IST Report Abuse

Rahimஇன்னும் நெறைய விஷயங்கள் மக்கள் அனுபவிக்க வேண்டி உள்ளது அப்போ தான் பக்தால்ஸின் உண்மை சுயரூபம் தெரியும்.

Rate this:
Agni Shiva - Durban,தென் ஆப்ரிக்கா
06-மார்-201809:47:17 IST Report Abuse

Agni Shivaஅடங்கி விடுவார்கள்..அல்லது அடக்கப்படுவார்கள். அது தான் நடக்கும். இந்தியாவிலேயே அதிக எண்ணிக்கையில் பழங்குடிகள் எம் பி க்களை கொண்ட கட்சி பிஜேபி கட்சி. மட்டுமின்றி தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட எம் பி க்களை கொண்ட கட்சியும் அதுவே. ஜனாதிபதி ஹரிஜன், பிரதமர் பிறப்படுத்தப்பட்டவர், பிஜேபி தலைவர் பிற்படுத்தப்பட்டவர் என்று சமுதாயத்தில் பிற்படுத்தவர்களின் கட்சி அது. அதற்கு பாடம் சொல்ல யாருமே முயற்சிக்க கூடாது. பாடம் சொல்ல முற்படுபவர்களுக்கு பாடம் கற்பிக்கப்பட்டு முடக்கப்படுவார்கள் சிவசேனாவிற்கு நடந்திருப்பது போல.

Rate this:
ஈரோடுசிவா - erode ,இந்தியா
06-மார்-201809:32:38 IST Report Abuse

 ஈரோடுசிவாபாஜகவின் அபார வெற்றிக்குப் பிறகு இந்த கூட்டணியின் தயவு தேவையில்லை தான் ... ஆனால் , உரிய மரியாதை தந்து பாஜக அவர்களை அரவணைத்து செல்லும் ....

Rate this:
Rahim - Riyadh,சவுதி அரேபியா
06-மார்-201808:54:19 IST Report Abuse

Rahimவளர்ச்சியின் வெற்றி பல்லை இளிக்குது,அதிகார போதையில் எவனோடும் கூட்டணி வைக்கலாம் என்ற நிலைமைக்கு போன கட்சி இடி வாங்கி கொண்டுதான் இருக்கும்.

Rate this:
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
06-மார்-201808:10:15 IST Report Abuse

Srinivasan Kannaiyaஇதுதான் குதிரை பேரம்...

Rate this:
raja - Kanchipuram,இந்தியா
06-மார்-201807:42:09 IST Report Abuse

rajaபாஜக பற்றி தெரியவில்லை அவர்களுக்கு, கட்சி என்பது இருந்தால் தானே அனைவரும் பாஜக mla ஆக மாறி விடுவர்

Rate this:
வெகுளி - Maatuthaavani,இந்தியா
06-மார்-201806:02:40 IST Report Abuse

வெகுளிகூட்டணி என்றாலே கூட்டுக்குள்ள ஆணிதான்......

Rate this:
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
06-மார்-201804:05:11 IST Report Abuse

Kasimani Baskaranகூட்டணி தர்மம் என்பது பசையுள்ள சில துறைகளை கூட்டாளிகளுக்கு ஒதுக்குவது ஞாயம்தான்... பசையை சாப்பிடாமல் பாஜக பார்த்துக்கொள்ள வேண்டும்... அதில்தான் பிரச்சினை வரும்... 2G யில் திமுக அடிக்கும் பொழுது காங்கிரஸ் பார்த்துக்கொண்டுதான் இருக்கமுடிந்தது...

Rate this:
Anandan - chennai,இந்தியா
06-மார்-201807:57:15 IST Report Abuse

Anandanஉங்க 2G கதையை இன்னும் எவ்வளவு நாள் ஓட்டுவீங்க?...

Rate this:
Pannadai Pandian - wuxi,சீனா
06-மார்-201808:12:48 IST Report Abuse

Pannadai Pandianசோத்த போட்டுட்டு அழகு பாக்க சொல்றீங்க.......

Rate this:
Kalyanaraman S - Bangalore,இந்தியா
06-மார்-201812:48:21 IST Report Abuse

Kalyanaraman S@Anandan - Chennai,இந்தியா, எப்போது கடைசியாக, அதற்கு மேல், யாரும் அப்பீல் பண்ணமுடியாத தீர்ப்பு வருகிறது, அதுவரை அம்மாவை விடுவித்ததும், அதற்கு அவர்கள் ஆடியதும், பிறகு திரும்ப தண்டனை கிடைத்ததும், பிறகு அப்பீல் செய்ததும், அது நிராகரிக்கப்பட்டதும், நினைவில் வரக்கூடும் அம்மாவிற்கு அந்த கதியென்றால், அய்யாவிற்கு வேறா இருக்கும்? ஆனால் அய்யா சாமர்த்தியசாலி தான் உள்ளே போகாமல், தன்னுடைய தொண்டர்கள் (முதல் வாய்ப்பு), தன்னுடைய குடும்பத்தார் (இரண்டாவது வாய்ப்பு) ஆகியோர்களை முன்னிறுத்துவார்...

Rate this:
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
06-மார்-201815:53:27 IST Report Abuse

Nallavan Nallavan\\\\ பசையுள்ள சில துறைகளை கூட்டாளிகளுக்கு ஒதுக்குவது ஞாயம்தான்... பசையை சாப்பிடாமல் பாஜக பார்த்துக்கொள்ள வேண்டும்... //// துறையில் அனுபவம், திறமை உள்ளவர்களை (கூட்டணியில் யாராக இருந்தாலும் அவர்களிடம்) பார்த்து கொடுக்க வேண்டும் என்று எழுதியிருக்கலாம் .......

Rate this:
மேலும் 1 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement