புடவையுடன், 'மாரத்தான்' பங்கேற்று அசத்திய பெண்கள் | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

புடவையுடன், 'மாரத்தான்' பங்கேற்று அசத்திய பெண்கள்

Added : மார் 06, 2018 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
புடவையுடன், 'மாரத்தான்' பங்கேற்று அசத்திய பெண்கள்

ஐதராபாத் : தெலுங்கானாவில், புடவை கட்டிய பெண்கள் பங்கேற்ற, மாரத்தான் ஓட்டம் நடந்தது.

தெலுங்கானாவில், முதல்வர் சந்திரசேகர ராவ் தலைமையில், தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி ஆட்சி நடக்கிறது.பெண்கள் தினத்தை முன்னிட்டு, 'பிங்கத்தான்' அமைப்பு சார்பில், நேற்று முன்தினம், ஐதராபாத் நகரில், பாலிவுட் நடிகர், மிலிந்த் சோமன் தலைமையில் நடந்த மாரத்தான் ஓட்டத்தில், ஏராளமான பெண்கள் பங்கேற்றனர்.

இவர்கள் அனைவரும், வழக்கமான மாரத்தான் போட்டியில் பங்கேற்கும் போது அணியும் உடையை அணியாமல், புடவை அணிந்திருந்தனர்.இது குறித்து, மிலிந்த் சோமன் கூறியதாவது:மாரத்தான் என்றாலே, பெண்கள் மத்தியில், டிராக் பேன்ட், டி - ஷர்ட் அணியும் மனநிலை காணப்படுகிறது.

இதை மாற்றி, புடவை, சல்வார் கமீஸ் அணிந்தும், மாரத்தானில் பங்கேற்கலாம் என்ற மனநிலையை உருவாக்குவதற்காக, இந்நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. பெண்கள் எந்த உடை அணிந்தும் உடற்பயிற்சி செய்யலாம். இவ்வாறு அவர் கூறினார்.

இதே போல், பெண்கள் மத்தியில் அச்சமற்ற மனநிலையை ஏற்படுத்துவதற்காக, ஐதராபாத் நகரில், நள்ளிரவு மாரத்தான் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதை, ஐதராபாத் மகளிர் போலீசார் ஏற்பாடு செய்திருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
KayD -  ( Posted via: Dinamalar Android App )
06-மார்-201812:49:28 IST Report Abuse
KayD .. இது பெருமை யான விஷயம் இல்லை. Safety வேணும். Beach ku silk saree and full make up la porathu namba ஊரில் மட்டும் aa.. Saree kattitu ஓடினா தடுக்கும்.. Better track ஷூட் தான். விவசாயம் panna பட்டு veshti la poga முடியாது office ku kovanam la போக முடியாது. எங்க எந்த suitable ஆடை aniyanumo அது aniyarathu புத்திசாலிthanam
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X