'டோக்லாமில் ஹெலிபேட் அமைக்கிறது சீன ராணுவம்' Dinamalar

பொது செய்தி

இந்தியா

பதிவு செய்த நாள் :
'டோக்லாமில் ஹெலிபேட் அமைக்கிறது சீன ராணுவம்'

புதுடில்லி: ''இந்தியா - சீனா - பூடான் எல்லையில் உள்ள டோக்லாம் பகுதியில் இருந்து, இந்தியா மற்றும் சீன ராணுவம் படைகளை குறைத்துள்ளன. அந்தப் பகுதியில் சீனா ஹெலிபேட்கள், பதுங்குக் குழிகள் போன்ற கட்டுமானப் பணியில் ஈடுபட்டுள்ளது,'' என, ராணுவ அமைச்சர், நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

Doklam,டோக்லாம், சீனா, பாதுகாப்பு அமைச்சர், நிர்மலா சீதாராமன்
இந்தியா - சீனா - பூடான் எல்லையில் உள்ள டோக்லாம் பகுதியில், சீன ராணுவம் சாலை அமைக்கும் பணியில், கடந்தாண்டு ஜூன் மாதம் ஈடுபட்டது; இதை, நம் படைகள் தடுத்து நிறுத்தின. இரு படைகளுக்கும் இடையே, 73

நாட்கள் ஏற்பட்ட இந்த மோதல், பேச்சுக்கு பின் சுமுகமானது.இந்நிலையில், டோக்லாம் பகுதியில், சீன ராணுவம், 'ஹெலிபேட்' அமைப்பது போன்ற கட்டுமான பணிகளில் ஈடுபட்டு வருவதாக, 'சாட்டிலைட்' படங்களில்தெரியவந்தது.

இது குறித்த கேள்விக்கு, ராணுவ அமைச்சரும், பா.ஜ.,வைச் சேர்ந்தவருமான, நிர்மலா சீதாராமன், ராஜ்யசபாவில் அளித்த பதில்:கடந்தாண்டு நடந்த சம்பவத்துக்குப் பின், டோக்லாம் பகுதியில் நிறுத்தப்பட்ட ராணுவம், படிப்படியாக குறைக்கப் பட்டுள்ளது.குளிர்காலத்தில், அந்தப் பகுதியில், தன் ராணுவத்தை நிறுத்துவதற்கு வசதியாக, ஹெலிபேட்கள், பதுங்குக் குழிகளை சீனா அமைத்து வருகிறது.எல்லைப் பிரச்னை குறித்து, சீனாவுடன், துாதரக உறவு உள்ளிட்டமுறைகள் மூலமாக தொடர்ந்து பேசி வருகிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.

பாகிஸ்தானில் சீனா, தன் ராணுவ தளத்தை அமைத்து வருவதாக அமெரிக்கா கூறியுள்ளது குறித்த கேள்விக்கு, ராணுவ இணையமைச்சர், சுபாஷ் பாம்ரே அளித்துள்ள பதில்:

Advertisement

கடல் பகுதியில், தன் பலத்தை அதிகரித்துக் கொள்ளும் முயற்சியில், சீனா இறங்கி உள்ளது.இந்தியப் பெருங்கடல் பகுதியில் உள்ள நாடுகளிலும் இதற்கான நடவடிக்கைகளில், சீனா இறங்கியுள்ளது.துறைமுகங்கள் அமைப்பது போன்ற நடவடிக்கைகளிலும், ஈடுபட்டுள்ளது. இது குறித்து சீனாவிடம் நம் கவலையை தெரிவித்து உள்ளோம். தொடர்ந்து, அதன் செயல்பாடுகளை கண்காணித்து வருகிறோம். நம் நாட்டின் பாதுகாப்புக்கு பாதிப்பு ஏற்படாமல் தடுப்போம்.இவ்வாறு அவர் கூறினார்.


Advertisement

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...


வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Dominic Rajendran - mumbai,இந்தியா
08-மார்-201813:11:58 IST Report Abuse

Dominic Rajendranரொம்ப ரொம்ப பெருமை,

Rate this:
Kuppuswamykesavan - Chennai,இந்தியா
06-மார்-201819:41:58 IST Report Abuse

Kuppuswamykesavanசரி, அதே போல, சீனாவின் எதிரி நாடுகளுக்கு, ஹெலிபேட்களும், பதுங்கு குழிகளும், அவர்கள் நாட்டு எல்லைகளில், நம் நாடு, இலவச செலவில், செய்து தரலாமே?.

Rate this:
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
06-மார்-201817:34:39 IST Report Abuse

தமிழ்வேல் நாம ஒன்னும் அதுக்கு செய்யலியா ?

Rate this:
06-மார்-201814:45:40 IST Report Abuse

MurugeshSivanBjpOddanchatramசப்பை மூக்குக்காரன் என்றுமே நமக்கு எதிரிதான்.ஆசிய பிராந்தியத்தில் சீனாவுக்கு சவால் விடும் தகுதியுள்ள ஒரே நாடு இந்தியா தான் ,.எனவே இந்தியாவின் வளர்ச்சியை சீனா விரும்பாது.எனவே சீன எல்லையில் இந்திய ராணுவத்தை அதிகரிக்க வேண்டும்.பதிலுக்கு நாமும் விமானதளங்களை உருவாக்க வேண்டும்.ஆயுதங்களை குவிக்க வேண்டும் ,அப்போது தான் சீனாக்காரன் அடங்குவான்

Rate this:
Vamanan Nair - சான் ஹோஸே , கலிபோர்னியா ,யூ.எஸ்.ஏ
06-மார்-201813:02:44 IST Report Abuse

Vamanan Nairஇவர் யாரு ?. செய்தி ஒளிபரப்பு துறை அமைச்சரா ?. தகவலை தர இவர் தேவை இல்லையே ?. சீனா ஹெலிபேட் அமைக்கும் செய்தியை நமக்கு தருவதற்கு ஒரு அமைச்சர் தேவையா ?. அதை முறியடிக்க வக்கில்லாத அமைச்சர் .... என்ன கொடுமை ???

Rate this:
rajan - kerala,இந்தியா
06-மார்-201809:52:01 IST Report Abuse

rajanஇங்கு சைனாவை கண்காணித்து நமது பாதுகாப்பு வழிமுறைகளை திட்டங்களை வகுத்து கொள்வது ஓன்று தான் தீர்வு. பேச்சு வார்த்தை என்பதெல்லாம் கண்துடைப்பே. சைனா ஒருக்காலும் நம்பகமான நாடு அல்ல. சைனாவின் மீது நம் நாடு சார்ந்த பொருளாதார தடை யுக்திகள் தான் நமக்கு வழிகாட்டும்.

Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement