ரயில் நிலையங்களில் 'நாப்கின்' வழங்க ஏற்பாடு | Dinamalar

பொது செய்தி

இந்தியா

ரயில் நிலையங்களில் 'நாப்கின்' வழங்க ஏற்பாடு

Added : மார் 06, 2018 | கருத்துகள் (4)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
Piyush Goyal,Sanitary Napkin,Railway station, ரயில் நிலையங்கள்,சானிட்டரி நாப்கின், விழிப்புணர்வு பிரசாரம், ரயில்வே அமைச்சர் பியுஷ் கோயல், 
 awareness campaign, Railway Minister Piyush Goyal,

புதுடில்லி : ''கிராமப்புற பெண்கள் மத்தியில், 'சானிட்டரி நாப்கின்'கள் குறித்து, விழிப்புணர்வு பிரசாரம் நடத்த வேண்டும்,'' என, ரயில்வே அமைச்சர், பியுஷ் கோயல் வலியுறுத்தி உள்ளார்.

டில்லியில் நடந்த ஒரு நிகழ்ச்சியில், ரயில்வே அமைச்சரும், பா.ஜ.,வைச் சேர்ந்தவருமான, பியுஷ் கோயல் பேசியதாவது: தற்போது ரயில் நிலையங்களில், தனியார் நிறுவனங்களின், சானிட்டரி நாப்கின்கள் வழங்கும் இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளன.

அவற்றை விட, விலை மலிவான, மக்கும் வகையைச் சேர்ந்த, சானிட்டரி நாப்கின்களை, தயாரித்து விற்பனை செய்தால், கிராமப்புற பெண்களும் பயனடைவர். இதன் தயாரிப்பு பணியில், பெண்கள் மற்றும் சுய தொழில் ஆர்வலர்கள் ஈடுபடலாம்.

நாடு முழுவதும் உள்ள, 8,000 ரயில் நிலையங்களின் மேல்தளத்தில், நாப்கின் தயாரிப்பு பிரிவுகளை அமைக்கலாம். நாப்கின் தயாரிப்பதற்கு தேவையான இயந்திரங்களின் விலை மிகவும் குறைவு.

பெரிய நிறுவனங்களின் நாப்கின்களை விட, ரயில் நிலையங்களில் தயாரிக்கப்படும் நாப்கின்கள், குறைந்த விலையில் கிடைக்கும். இதுகுறித்து, மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் நல மேம்பாட்டு துறை அமைச்சர் மேனகாவுடன் பேசியுள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Loganathan Kuttuva - Madurai,இந்தியா
07-மார்-201810:10:37 IST Report Abuse
Loganathan Kuttuva நல்ல யோசனை.செயல்படுத்தப்பட வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
07-மார்-201808:28:15 IST Report Abuse
Srinivasan Kannaiya இதை விட எல்லோருக்கும் இலவசமாக குடிக்க குடிநீர் வழங்கலாம்... எதை கொடுக்க வேண்டுமோ அதை கொடுக்க மாட்டீர்கள்...
Rate this:
Share this comment
Cancel
ilicha vaay vivasaayi (sundararajan) - maduraikku therku pakuthi ,இந்தியா
07-மார்-201801:30:13 IST Report Abuse
ilicha vaay vivasaayi  (sundararajan) நாப்கின்கள் சுற்றுப்புற சூழலுக்கு எதிரி என்று கூறுகிறார்கள் . மேலும் உடலின் ஆரோக்கியம் கெடும் என்கிறார்கள் . சரியா தவறா தெரியவில்லை
Rate this:
Share this comment
07-மார்-201812:25:51 IST Report Abuse
gopalakrishnanமக்கும் நாப்கின் .... செய்தியை. மீண்டும் படிக்கவும்...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X