சிலை தகர்ப்பு விவகாரத்தில் பிரதமர் மோடி கண்டிப்பு Dinamalar
பதிவு செய்த நாள் :
Statue busting, PM Modi,Lenin statue,சிலை தகர்ப்பு விவகாரம், பிரதமர் மோடி, பிரதமர் நரேந்திர மோடி கடும் கண்டனம் , மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத், மத்திய உள்துறை அமைச்சகம் , திரிபுரா சட்டசபை தேர்தல், லெனின் சிலை , ஈ.வெ.ரா சிலை, Prime Minister Narendra Modi strong condemnation, Union Home Minister Rajnath, Union Home Ministry, Tripura assembly election, EVR statue,

புதுடில்லி : நாட்டின் சில பகுதிகளில் சிலைகள் தகர்க்கப்படும் சம்பவங்களுக்கு, பிரதமர் நரேந்திர மோடி கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார். இதை தடுப்பது தொடர்பாக, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்துடன், மோடி பேசினார். சிலைகளை உடைப்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்கும்படி, அவர் உத்தரவிட்டுள்ளார். இது போன்ற சம்பவம் நடக்காமல் தடுக்கும்படி, அனைத்து மாநில அரசுகளுக்கும், மத்திய உள்துறை அமைச்சகம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

Statue busting, PM Modi,Lenin statue,சிலை தகர்ப்பு விவகாரம், பிரதமர் மோடி, பிரதமர் நரேந்திர மோடி கடும் கண்டனம் , மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத், மத்திய உள்துறை அமைச்சகம் , திரிபுரா சட்டசபை தேர்தல், லெனின் சிலை , ஈ.வெ.ரா சிலை, Prime Minister Narendra Modi strong condemnation, Union Home Minister Rajnath, Union Home Ministry, Tripura assembly election, EVR statue,


வட கிழக்கு மாநிலமான, திரிபுராவில் நடந்த சட்டசபை தேர்தலில், பா.ஜ., அமோக வெற்றி பெற்றது; 25 ஆண்டு கால, மார்க்.கம்யூ., ஆட்சி வீழ்ந்தது. இதையடுத்து, திரிபுராவில் வன்முறை வெடித்தது. பெலோனியா நகரில் நிறுவப்பட்டு இருந்த, மறைந்த, ரஷ்ய கம்யூனிஸ்ட் தலைவர், லெனின் சிலையை, சிலர் உடைத்ததால் பரபரப்பு நிலவியது.இதைத் தொடர்ந்து, தமிழகத்தில் ஈ.வெ.ரா., சிலைகளை சிலர் சேதப்படுத்தியதால், பதற்றம் நிலவுகிறது.

கடிதம்


இந்நிலையில், சிலை உடைப்பு விவகாரம் குறித்து, மத்திய உள்துறை அமைச்சர், ராஜ்நாத் சிங்குடன், பிரதமர் மோடி பேசினார். அப்போது, சிலை உடைப்புக்கு, மோடி கடும் கண்டனம் தெரிவித்தார். சிலைகளை உடைப்போர் மீது நடவடிக்கை எடுக்கும்படி, ராஜ்நாத் சிங்கிடம், பிரதமர் மோடி, கண்டிப்புடன் கூறியுள்ளார்.

இதையடுத்து, சிலை உடைப்பு சம்பவங்கள் நிகழ்வதை தடுக்கும்படி, அனைத்து மாநில அரசுகளுக்கு, மத்திய உள்துறை அமைச்சகம் கடிதம் அனுப்பியது.
இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்ட சில மணி நேரத்தில், மீண்டும் ஒரு அறிக்கை வெளியிட்டது.
அதில்கூறிஇருந்ததாவது: சிலைகள் உடைக்கப்படும் சம்பவம் தொடர்பாக, மாநில அரசுகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். சிலை இடிப்பு விவகாரத்தில், மாவட்ட கலெக்டர்கள், மாவட்ட போலீஸ் கண்காணிப்பாளர் மற்றும் போலீஸ் அதிகாரிகள், விரைந்து செயல்பட, மாநில அரசுகள் உத்தரவிட வேண்டும்.

அசம்பாவிதங்கள் ஏற்பட்டால், சம்பந்தப்பட்ட கலெக்டர்கள், எஸ்.பி.,க்கள் தான் பொறுப்பேற்க வேண்டும்.இது தொடர்பாக, நாங்கள் ஏற்கனவே அறிவுறுத்தியதை, மாநில அரசுகள், முறையாக பின்பற்ற வேண்டும். சிலை உடைப்பு விவகாரத்தில் ஏற்பட்டுள்ள சூழ்நிலையை, உள்துறை அமைச்சகம் உன்னிப்பாக கவனித்து வருகிறது.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

'பா.ஜ., ஆதரிக்காது''திரிபுராவில், லெனின் சிலை உடைப்பு, தமிழகத்தில், ஈ.வெ.ரா., சிலை சேதமடைந்த சம்பவங்கள், துரதிருஷ்டவசமானவை' என, பா.ஜ., தேசியத் தலைவர், அமித் ஷா கூறி உள்ளார்.இது குறித்து, அமித் ஷா, 'டுவிட்டரில்' வெளியிட்டுள்ள பதிவில், 'சிலைகளை உடைக்கும் விஷமிகள் மீது, நடவடிக்கை எடுக்கப்படும்.

'சிலைகள் உடைக்கப்படுவதை, பா.ஜ., ஒருபோதும் ஆதரிக்காது. இது தொடர்பாக, தமிழகம், திரிபுரா மாநிலங்களின், பா.ஜ., தலைவர்களுடன் பேசி உள்ளேன்' என,கூறியுள்ளார்.

Advertisement


ஜனசங் நிறுவனர் சிலை சேதம்

மேற்கு வங்கத்தில், பா.ஜ.,வின் முந்தைய அமைப்பான, ஜனசங்கத்தை துவக்கிய, ஷியாமா பிரசாத் முகர்ஜி சிலையின் தலையை சேதப்படுத்திய ஆறு பேரை, போலீசார் கைது செய்தனர். முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில், திரிணமுல் காங்கிரஸ் ஆட்சி நடக்கும் மேற்கு வங்கத்தின், கோல்கட்டாவில் உள்ள பூங்கா ஒன்றில், ஷியாமா பிரசாத் முகர்ஜியின் சிலை நிறுவப்பட்டு உள்ளது. நேற்று காலை, பூங்காவை சுத்தம் செய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது, ஜாதவ்பூர் பல்கலையில் படிக்கும், ஒரு மாணவி மற்றும் ஐந்து மாணவர்கள், பூங்காவுக்குள் நுழைந்தனர். தாங்கள் வைத்திருந்த சுத்தியல்களால், ஷியாமா பிரசாத் முகர்ஜி சிலையை உடைத்து சேதப்படுத்தினர். மேலும், சிலையின் முகத்தில், கறுப்பு மை பூசி சென்றனர். இது குறித்து, பூங்கா ஊழியர்கள், போலீசுக்கு தெரிவித்தனர். இதையடுத்து, முகர்ஜியின் சிலையை சேதப்படுத்திய ஆறு பேரை, போலீசார் கைது செய்தனர். இவர்கள் ஆறு பேரும், இடதுசாரி தீவிரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள் என தெரிய வந்தது.Advertisement

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...


வாசகர் கருத்து (118)

 • புதியவை
 • பழையவை
 • அதிகம் விவாதிக்கப்பட்டவை
 • மிக மிக தரமானவை
 • மிக தரமானவை
 • தரமானவை
Roopa Malikasd - Trichy,இந்தியா
09-மார்-201812:14:33 IST Report Abuse

Roopa Malikasdtest

Rate this:
meenakshisundaram - bangalore,இந்தியா
09-மார்-201804:14:53 IST Report Abuse

meenakshisundaramபதஞ்சலி சாமியார் என்று கேலி பேசுவது தவறு. அறியாமை.இதே போல தான் சீமான் அவரை என்றும் இகழ்கிறான். அவரின் சேவை மகத்தானது.தரையில் படுத்துறங்கும், பல கோடி முதலீடு செயதுள்ளவர்களில் அவர் மட்டுமே தனி .வேறு எந்த முதலாளியும் தரையிலே படுப்பதில்லை. குடிஸை போன்ற வீட்டிலே உறங்கும் உன்னத மனிதர், அவரின் தயாரிப்புக்கள் கண்டு multinationals அதிர்ந்து போயுள்ளார்கள். தேசிய உணர்வுடன் மகத்தான சேவை செயும் இவரின் வெளி உருவை கொண்டு மதிப்பீடு செயது கைதட்டல் பெற வேண்டுமென்ற ஒரே நோக்கத்தில் இயங்கும் சீமான் ,கறுப்பின,வைகோ பாரதி ராஜா போன்றோர் antinational என்ற ஒரே வார்த்தையினால் விலக்கப்பட வேண்டியவர்களே .ஒதுக்கப்பட வேண்டியவர்களே.மக்கள் சிந்திக்க தொடங்கி விட்டனர். ஈவேராவை முன்பே தாரகேஸ்வரி Sinha என்னும் பெண் அமைச்சர் சொன்ன து .colored buffoon .அன்று இப்போது கூப்பாடு போடுபவர்கள் எங்கே இருந்தார்கள்?

Rate this:
Praveen - Chennai,இந்தியா
08-மார்-201823:42:39 IST Report Abuse

PraveenThani manitha olukkam vum.... Thalaiyila kombu vechutu aada kudathu .

Rate this:
veeratamilan - chennai,இந்தியா
08-மார்-201822:34:46 IST Report Abuse

veeratamilanபிறர்கின்னா முற்பகல் தமக்கின்னா பிற்பகல் தாமே வரும் - திருவள்ளுவர் அவர் அவர் வினை வழிஅவர் அவர் அனுபவம் வினை விதைத்தவன்வினை அறுப்பான் இவர் அப்போ பிள்ளையார் சிலையை உடைச்சார்,இப்போ அவர் சிலையை மக்கள் உடைக்கிறார்கள் சிலைகளை உடைக்க சொல்லி கொடுத்தது, ஈ வே ரா .இப்போ அவர் சிலையை உடைக்கஉதவுது எப்படியோ எலும்பு பாதிரியார் விஷயத்தை மறக்கடிச்சாச்சு

Rate this:
muttam Chinnapathas - Chennai,இந்தியா
08-மார்-201820:56:04 IST Report Abuse

muttam Chinnapathasமக்களே இங்கு ராஜா பேன்ற அரசியல்வியாதியின் செயலை ஆதாரிப்பவர் யார் என்று பாருங்கள்.... உண்மைபுரியம் ...எல்லாம் நன்னா வருவேள்

Rate this:
sankar - trichy,இந்தியா
08-மார்-201823:25:10 IST Report Abuse

sankarநன்னா வருவோம் வாழ்த்துக்கு நன்றி ரெங்கநாதர் கோயில் சிலை முன் பெரியார் ஏன் தேவுடு காக்கிறார் . பிள்ளையார் கோயிலை இடித்தவர்கள் பூணுலை அறுத்தவர்கள் எல்லாம் நாசமா போவார்கள் என்று சொன்னால் நீங்களும் நன்னா வரலாம் செய்வீர்களா செய்வீர்களா...

Rate this:
TamilReader - Dindigul,இந்தியா
08-மார்-201819:27:04 IST Report Abuse

TamilReaderமுதலில் இவர் இன்னும் ஏன் ராஜா மீது நடவடிக்கை எடுக்காமல் உள்ளார் தினமும் இந்த ராஜா கலவரத்தை தூண்டுகிற மாதிரி பேசி கொண்டு இருக்கிறார் இதில் இருந்தே தெரிகிறது மோடியும் மறைமுகமாக ராஜாவின் பேச்சை ஆதரிக்கிறார் என்று

Rate this:
Tamilan - NA,ஐக்கிய அரபு நாடுகள்
08-மார்-201819:25:29 IST Report Abuse

Tamilanபெரியார் ஒரு பேட்டை ரவுடி. காட்டுமிராண்டிகளின் உபதேசி . அப்படிப்பட்டவரின் சிலையை உடைத்தால் என்ன?

Rate this:
S Varadharajan - Kuwait,குவைத்
08-மார்-201818:55:02 IST Report Abuse

S Varadharajanமறுமலர்ச்சி திராவிட சீர்திருத்த கொள்கையால் முன்னேறிய இவர்களால் நம் தமிழ்நாடு இந்தியா இப்போது எப்படி உள்ளது? எங்கும் எதிலும் லஞ்ச லாவண்யம் ,எந்த வேலையும் செய்ய விடுவதில்லை, புது முயற்ச்கள் கூடாது, காசிமணி, அக்னி சிவா தமிழ் செல்வன் இந்த போலி திராவிட வெறி மூடர்களிடம் பேசுவது வீண். பாலகிருஷ்ணன், ஜைஹிந்த்புரம், அனந்த வேலை இல்லை, வம்புக்கு அலைவதே அவர்களின் கொள்கை, அவர்களுக்கு விழும் லைக் பாருங்கள். மோடி மற்றும் இந்துக்கள் ஒழிந்தால் இவர்கள் தமிழ்நாட்டை இன்னும் முன்னேற்றி பிணம் தின்னும் கழுகை சுடுகாற்றில் வாழ்வார்கள். கடவுள் பக்தி உள்ள என்ற மற்றும் கர்நாடக மாநிலங்கள் நம்மை விட பின்தங்கியிருந்து இன்று அணைத்து துறையிலும் முன்னேறி விட்டார்கள். . ஆனால் இந்த போலி பகுத்தறிவு லஞ்சக லாவண்ய பிறவிகள் இதையும் முன்னேற விடாது. இவர்களை விட்டு நாம் விலகி செல்வதே மேல் ,

Rate this:
Appavi Tamilan - Chennai,இந்தியா
08-மார்-201817:20:23 IST Report Abuse

Appavi Tamilanபாஜகவினர் செய்யும் இப்படிப்பட்ட அருவருப்பான அரசியலால் அக்கட்சிக்கு மேலும் மேலும் அவப்பெயர் கிட்டும் அன்றி, எந்த ஆதாயமும் கிடைக்காது. எச்.ராஜாவின் இந்த கண்டிக்கத்தக்க செயலால் ஒரு நன்மை என்னவென்றால், இன்றைய மிக இளம் தலைமுறையினரும் பகுத்தறிவு பகலவன் பற்றி கற்றறிந்துகொள்ள உதவியதுதான். என் வீட்டின் அருகில் வசிக்கும் பதினேழு வயது இளைஞன் தற்போது பெரியார் பற்றி கூகுளில் தேடி படிக்கிறான் என்று பதிவிட்டிருந்தான். ஆக ராஜா செய்தது தீமையிலும் நன்மையாக முடிந்துள்ளது. ஆனால் பாஜகவிற்கு இது மேலும் ஒரு கருப்பு புள்ளி. நோட்டாவைவிட குறைவாக சில ஆயிரக்கணக்கில் வாக்குகள் வாங்கும் அக்கட்சி, இனி நூற்றுக்கணக்கில் வாக்குகள் வாங்கினால், அதற்கு இது போன்ற அட்டூழிய ஆட்டங்கள்தான் மூலகாரணமாக இருக்கும்.

Rate this:
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
08-மார்-201820:46:02 IST Report Abuse

Nallavan Nallavan\\\ என் வீட்டின் அருகில் வசிக்கும் பதினேழு வயது இளைஞன் தற்போது பெரியார் பற்றி கூகுளில் தேடி படிக்கிறான் என்று பதிவிட்டிருந்தான். //// நீ ஒரு கூமுட்டை -ன்னு நிரூபிக்கிற ..... இந்த காலத்துப் பசங்க உணர்ச்சி வசப்படுறதில்ல ..... யோசிக்கிறாங்க ..... கடவுள் இல்ல -ன்னு சொல்லி, ஹிந்துக் கடவுளை மட்டும் அசிங்கப்படுத்துறவன் உண்மையான பகுத்தறிவுவாதியா இருக்க முடியுமா ? என்றெல்லாம் யோசிக்கிறார்கள் ...... பெரியார், அண்ணா உருவங்களை மாநாட்டில் திமுக வே இப்பல்லாம் அதிகம் போடுறதில்லை ..... இளைய தலைமுறை வாக்குரிமை பெறுவது அதிகமானதால் திமுக, நாசமாப்போச்சு ..... இதைப்பத்தி யோசிக்க மரத்துப்போன தனது மூளையை திராவிட விடத்தை ஆதரிக்கும் அறிவிலிகள் உபயோகிக்க வேண்டும் ........

Rate this:
Appavi Tamilan - Chennai,இந்தியா
08-மார்-201817:15:40 IST Report Abuse

Appavi Tamilanபெரியார் சிலையை உடைப்பேன் என்று வன்முறையை தூண்டும் வகையில் பேசி பிரச்னையை உண்டாக்கியது பாஜகவின் எச்.ராஜா. அதைக்கேட்டு அவசரப்பட்டு பெரியார் சிலையை சேதப்படுத்தியது பாஜகவின் முத்துராமன். ராஜா மீது நடவடிக்கை இல்லை. ஆனால் முத்துராமன் உடனே கட்சியை விட்டு நீக்கப்பட்டுள்ளார். இருவருக்கும் ஒரே வேறுபாடு. அந்த வேறுபாடு என்ன என்று அனைவருக்கும் புரியும். முத்துராமன் தூண்டிவிடப்பட்ட தமிழர். எச்.ராஜா தூண்டிவிட்டவர். ஆனால் தமிழர் அல்லாதவர். பிரச்னையை கிளப்புவது யாரோ. அடிப்பதும், அடிவாங்குவதும் தமிழன்.... இதனால்தான் அக்கட்சியை தமிழ் இனவிரோத கட்சி என்று மக்கள் நம்பி வாக்களிப்பதில்லை.

Rate this:
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
08-மார்-201818:44:53 IST Report Abuse

Kasimani Baskaranதிராவிடர்கள் கோவில் சிலைகளை உடைப்பது மட்டுமல்ல தாலியை, பூணூலை அறுப்பது போன்ற கேவலங்களை செய்வது வன்முறையை தூண்டுவது கிடையாதா?...

Rate this:
மேலும் 105 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement