சித்தராமையா உத்தரவுப்படி சிறையில் சசிக்கு சலுகை: கர்நாடக ஐகோர்ட்டில் சத்ய நாராயணராவ் தகவல் Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
சித்தராமையா உத்தரவுப்படி சிறையில் சசிக்கு சலுகை
கர்நாடக ஐகோர்ட்டில் சத்ய நாராயணராவ் தகவல்

பெங்களூரு : ''பெங்களூரு மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவுக்கு, கர்நாடக முதல்வர், சித்தராமையா உத்தரவுப்படி, கட்டில், மெத்தை போன்ற வசதிகளை செய்து கொடுத்தேன்,'' என, அப்போதைய சிறைத் துறை, டி.ஜி.பி., சத்ய நாராயணராவ், கர்நாடக உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் குறிப்பிட்டு உள்ளார்.

A.D.M.K,Sasikala,அ.தி.மு.க,சசிகலா

சொத்து குவிப்பு வழக்கில், ஜெ., தோழி சசிகலா, பெங்களூரு பரப்பன அக்ர ஹாரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.

குற்றச்சாட்டு

சிறையில், சசிகலாவுக்கு சிறப்பு வசதிகள் செய்து கொடுப்பதற்காக, அப்போதைய சிறைத் துறை, டி.ஜி.பி., சத்ய நாராயணராவ், இரண்டு கோடி ரூபாய் லஞ்சம் பெற்ற தாக, ஐ.பி.எஸ்., அதிகாரி, ரூபா குற்றஞ்சாட்டி இருந்தார்.

சிறையின் தலைமை கண்காணிப்பாளராக இருந்த கிருஷ்ணகுமார், கண்காணிப்பாளராக இருந்த, அனிதா ஆகியோரும் உறுதுணையாக செயல்பட்டதாகவும், தனக்கு தகவல் வந்துள்ளதாக, அவர் கூறினார்.இதையடுத்து, ஓய்வு பெற்ற, ஐ.ஏ.எஸ்., அதிகாரி, வினய்குமார் தலைமையில் அமைக்கப்பட்ட குழு, விசாரணை நடத்தி, சிறையில் நடந்த முறைகேடு உண்மை என, அறிக்கை தாக்கல் செய்தது.

இந்த வழக்கை, சி.ஐ.டி., விசாரணைக்கும், லஞ்ச புகாரை, ஏ.சி.பி., எனப்படும், ஊழல் ஒழிப்பு படை விசாரணைக்கும், கர்நாடக அரசு மாற்றியது.

தனக்கெதிராக பதிவாகி உள்ள, எப்.ஐ.ஆர்., எனப்படும், முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்யக் கோரி, கர்நாடக உயர் நீதிமன்றத்தில், சத்ய நாராயணராவ், நேற்று முன்தினம், மனு தாக்கல் செய்தார்.

மனுவில், 'முதல்வர், சித்தராமையாவின் உத்தரவுப்படியே, சசிகலாவுக்கு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டன' என, குறிப்பிட்டு உள்ளார். மனுவுடன், ஓய்வு பெற்ற, ஐ.ஏ.எஸ்., அதிகாரி, வினய் குமார் தலைமையிலான குழுவிடம், 2017 ஜூலை, 25ல் கூறிய விபரங்களையும் இணைத்து உள்ளார்.

அதில் கூறப்பட்டு உள்ளதாவது: காங்கிரசைச் சேர்ந்த முதல்வர், சித்தராமையா உத்தரவுப்படி, சசிகலாவுக்கு கட்டில், மெத்தை, தலையணை போன்ற வசதிகளை செய்து கொடுத்தேன். இவ்விஷயத்தில், அரசுக்கு அதிகாரம் உள்ளது. எனவே, அவர் உத்தரவை பின்பற்றினேன். சசிகலா, சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜரான பின், அவர் தரப்பு வக்கீல்கள், சசிகலாவுக்கு, 'கிளாஸ் - 1' சலுகைகள் அளிக்கும்படி, வேண்டுகோள் விடுத்தனர்.

இவ்விஷயம் தொடர்பாக, சிறை அதிகாரி, என்னிடம் ஆலோசனை கேட்டார். விதிப்படி, இது போன்ற சலுகைகள் வழங்க முடியாது என, கூறினேன். இதன் பின்னரும், சசிகலா பல முறை, தனக்கு சலுகைகள் செய்து கொடுக்கும்படி, எழுத்துப்பூர்வமாக வேண்டுகோள் விடுத்தார். இவர் வேண்டுகோள் மனுவை, மாநில அரசுக்கு அனுப்பினேன். ஆனால், அரசிடமிருந்து எந்த பதிலும் வரவில்லை.

இரு மாதங்களுக்கு பின், தன் அந்தரங்க உதவியாளர், வெங்கடேஷ் மூலம், என்னை, பெங்களூரு, கே.பி.சி., விருந்தினர் இல்லத்துக்கு
வரவழைத்த, முதல்வர் சித்தராமையா, 'சசிகலாவுக்கு என்னென்ன சலுகைகள் அளிக்கப்படுகின்றன?' என, கேட்டார்.

'எவ்வித சிறப்பு வசதிகளும் செய்யவில்லை. சாதாரண கைதியாக நடத்தப்படுகிறார்' என்றேன்.

Advertisement

தடை


அப்போது, கட்டில், மெத்தை, தலையணை வழங்கும்படி, சித்தராமையா உத்தரவிட்டார். அதுபோல், இந்த வசதி தவிர, வேறெந்த சலுகைகளும் கொடுக்க முடியாதென, சசிகலாவிடமும் கூறினேன். அவரும் ஒப்புக் கொண்டார்.

சசிகலா, இளவரசிக்கு, முதல் மாடியில், தனி செல் கொடுக்கப்பட்டது. ஆனால், அக்கம்பக்கத்து செல்கள் யாருக்கும் வழங்கப்படவில்லை. சிறையின் இந்த பகுதிக்கு, மற்ற கைதிகள் நுழைய தடை விதிக்கப்பட்டிருந்தது.இவ்வாறு கூறியுள்ளார்.

இந்த விஷயம், கர்நாடகாவில் நேற்று பரபரப்பாக பேசப்பட்டது.இதைத் தொடர்ந்து, முதல்வர் சித்தராமையா, நிருபர்களிடம் நேற்று கூறியதாவது: என் உத்தரவுப்படி, சிறையில், சசிகலாவுக்கு மெத்தை, தலையணை வழங்கப்பட்டதாக, சத்ய நாராயணராவ் கூறியது பொய்.சிறையில் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கவில்லை என, தமிழக குழுவினர், என் அலுவலகத்துக்கு வந்து புகார் செய்தனர்.

சட்டத்துக்கு உட்பட்டும், சிறை விதிப்படியும் மட்டுமே, சசிகலாவுக்கு வசதிகள் செய்து தரும்படி கூறினேன்; ராஜ மரியாதை வழங்கும்படி கூறவில்லை.சிறை முறைகேட்டில் சிக்கியுள்ள சத்ய நாராயணராவ் வழக்கு, ஏ.சி.பி.,யிடம் விசாரணை நடத்த ஒப்படைக்கப்பட்டு உள்ளதால், ஆதாரமின்றி எனக்கு எதிராக குற்றஞ்சாட்டி உள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.


Advertisement

வாசகர் கருத்து (21)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
08-மார்-201816:33:09 IST Report Abuse

தமிழ்வேல் சந்தேக மில்லை.

Rate this:
Endrum Indian - Kolkata,இந்தியா
08-மார்-201816:15:47 IST Report Abuse

Endrum Indianசசியின் பரப்பன சிறை வழக்கை தாவூதுக்கு தெரிவிக்கப்பட்டது. உடனே தாவூத் சரணடைய மூன்றே கண்டிஷன் தான் போட்டிருக்கிறான் சரணடைய. 1 ) அவனை பரப்பன சிறையில் தான் வைத்துக்கொள்ளவேண்டும். 2 ) சித்தம் கலங்கின ராமையா முதல் அமைச்சராக இருக்கவேண்டும் 3 ) அசத்திய நாராயண சிறை மேல் அதிகாரியாக இருக்கவேண்டும். அப்படி இருந்தால் மட்டுமே சரணடைவானாம்.

Rate this:
Endrum Indian - Kolkata,இந்தியா
08-மார்-201816:10:39 IST Report Abuse

Endrum Indianசசிக்கு சிறையில் ஒன்றும் சலுகை காண்பிக்கவில்லை. அவர் அதற்கு பக்கத்தில் உள்ள பிளாட்டில் இருந்து தான் தான் எப்பொழுது சிறைக்கு வரவேண்டுமோ, எப்போது மாலுக்கு செல்லவேண்டுமோ செல்கின்றார். இதில் என்ன சலுகை? அவரிடம் நிறைய பணம் இருந்தது எப்படி, எங்கே வைப்பது என்று தெரியவில்லை ஆகவே அசத்திய நாராயணாவிடம் கொஞ்சம் 1 .3 கோடி கொடுத்தார், சித்தம் கலங்கின ராமைய்யாவிடம் ஆஸ்திரேலியாவில் இருக்கும் ஒருவரிடம் 14 கோடி பணம் கொடுத்து அவருக்கு கொடுக்க சொன்னார், அதை அவர் பஞ்சாப் நேஷனல் வங்கியில் வைத்திருக்க விரும்பவில்லை அதனால். இதில் என்ன தவறு. இப்படி தவறே இல்லாமல் உ பி சகோதரியை தியாகத்தின் அறிகுறியாக அந்த கடவுளிடம் அனுப்பியவர். அவரையே தியாகம் செய்த தியாகத்தலைவி சின்னாபின்ன கழக பொதுச்செயலாளர் பற்றி இப்படி எல்லாம் சொல்லவேண்டாம். பாவம் இன்னும் 6 மாதமோ 7 மாதமோ தான், பிறகு அவரது உ பி சகோதரியின் ஆவி அவரை துணைக்கு எடுத்துச்சென்று விடும்.

Rate this:
மேலும் 18 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X