மதவெறி ஆட்சியை கொண்டு வர முயற்சி: ஸ்டாலின் ஆவேசம் Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
மதவெறி ஆட்சியை கொண்டு வர முயற்சி
: ஸ்டாலின் ஆவேசம்

சென்னை : 'ஈ.வெ.ராமசாமியின் சிலையைத் தொட்டுப் பார்க்கட்டும். திராவிட லட்சியங்களைக் காக்கும், தி.மு.க., தொண்டர்கள், தாங்கள் யார் என்பதை காட்டும் தருணம் வரும்' என, தி.மு.க., செயல் தலைவர், ஸ்டாலின் எச்சரித்து உள்ளார்.

D.M.K,M.K.Stalin,Stalin,தி.மு.க,ஸ்டாலின்அவரது அறிக்கை:பல நுாறு ஆண்டுகளாக, அடக்கி, ஒடுக்கி, ஓரங்கட்டப்பட்ட மக்களுக்கு, உண்மையான சமூக விடுதலையைப் பெற்று தந்த, ஈ.வெ.ராமசாமி மறைந்து, 45 ஆண்டுகள் உருண்டோடி விட்டன. ஆனால், இனப் பகைவர்களுக்கு, இன்றைக்கும் கூட, அவர் பெயரைக் கேட்டால், அடிவயிறு கலங்குகிறது; நெஞ்சுக்கூட்டில் பயம் எனும் பந்து உருள்கிறது.அதனால் தான், 'அரண்மனையில் இருந்து ஆட்சி செய்வோரின் அருகில் இருக்கிறோம்' என்கிற அகந்தையில், ஒரு சிலர், ராமசாமியின் சிலைகளை அகற்றப் போவதாக, வக்கிரமாகக் கொக்கரித்து, தமிழ்சமுதாயத்திடம் சகட்டுமேனிக்கு வாங்கி, முடங்கும் நிலைமைக்கு ஆளாகி இருக்கின்றனர்.

எங்கிருந்து, இவர்களுக்கு இந்த திமிர் எட்டிப் பார்த்தது? திரிபுராவில், பேர அரசியல் நடத்தி, ஆட்சியைப் பிடித்தது போல, தமிழத்திலும், பினாமிகள் மூலம், மதவெறி ஆட்சியைக் கொண்டு வந்து விடலாம் என, மனப்பால் குடிக்கின்றனர். அவர்களின் சிந்தனைக் கறையான்கள், எப்பக்கத்திலும் நுழையாதபடி, எக்கு கோட்டையாக திகழ்கிறார், ராமசாமி.

இன்றைய தலைமுறையினர், கல்வி கற்று, உரிமை பெற்று, தலைநிமிர்ந்து நிற்கின்றனர் என்றால், அதற்கு காரணமானவர், ராமசாமி.அவர் விதைத்த கொள்கைகள், இன்று ஆலமரமாய் வளர்ந்து, அனைத்துத் தரப்பு மக்களுக்கும்

Advertisement

குடையாக, நிழலாக ஊன்றுகோலாக பாதுகாப்பு தருகிறது. மானமுள்ள தமிழர்களுக்கு, இப்போதும் அவரது கொள்கைகளே ஆயுதம். இன எதிரிகளுக்கோ, அவர் பெயரைச் சொன்னால் அச்சம்.

'ராமசாமி சிலைகளை அகற்றுவோம்' என்பவர், எவராக இருந்தாலும், தமிழர்கள் பெற்றுள்ள உரிமைகளாலும், உயர்வாலும், வயிறு எரிகிறார் என்றே அர்த்தம். இனி, கற்பனையிலும், கனவிலும் கூட, ராமசாமியின் சிலையைத் தொட்டுப் பார்க்கட்டும்; தி.மு.க., தொண்டர்கள், தாங்கள் யார் என்பதைக் காட்டும் தருணம் வரும்.இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.


Advertisement

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...


வாசகர் கருத்து (120)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
meenakshisundaram - bangalore,இந்தியா
09-மார்-201804:17:53 IST Report Abuse

meenakshisundaramஎன்ன இது சின்னப்பிள்ளைத்தனமா இருக்கு? காலாவதியான பொருட்கள் கடைத்தெருவிலிருந்து தானாகவே வெளியேறுவதில்லையா?அதே போலத்தான் உனது பாழாய்ப்போன கொளகைகளும் தத்துவமும்.

Rate this:
Viswanathan Meenakshisundaram - karaikudi,இந்தியா
08-மார்-201822:29:14 IST Report Abuse

Viswanathan Meenakshisundaramஎதுடா சாக்கு என காத்து கிடந்தார் , கிடைத்து விட்டது பெரியார் சம்பந்த பட்ட பேச்சு . எப்படியாவது ஆட்சியை பிடிக்க வேண்டும் . ஒரு செயல் தொடங்கும் போது தமிழன் பிள்ளையார் துணை , பேச்சியம்மன் துணை , சுடலைமாடன் துணை என எழுதி தொடங்குவான் . இவர்களுக்கு மற்ற நேரங்களில் ஞாபகம் இருக்கிறதோ இல்லையோ , ஆட்சியை பறி கொடுத்து விட்ட நிலையில் பெரியாரை துணைக்கு அழைக்கிறார் , உங்களையெல்லாம் அன்றே கண்ணீர் துளிகள் என்று அன்றே ஒதுக்கி விட்டார் அந்த பெரியார் . இருந்தாலும் ஊழல் செய்ய மறுமுறை ஓர் வாய்ப்பு கிடைக்காதா என்ற நப்பாசை . ஆனால் பெரியார் ஊழல் செய்து தான் ஆட்சி நடத்த வேண்டும் என்று கற்று கொடுக்க வில்லையே

Rate this:
YesJay - Chennai,இந்தியா
08-மார்-201820:58:17 IST Report Abuse

YesJayஅப்படியே தாலி இருப்பேன் பூணூல் இருப்பேன் என்று கூறும் காட்டுமிராண்டிகளையும் கடியவும். இல்லை என்றால் முடிந்தால் இஸ்லாமியர்களின் தாடியை மழிப்பேன் என்று கூறும் தைரியம் இருக்கிறதா?

Rate this:
S Rama(samy)murthy - karaikudi,இந்தியா
08-மார்-201819:49:08 IST Report Abuse

S Rama(samy)murthyஹிந்துக்களுக்கு மட்டும் நாத்திகம் பேசும் தைரியம் கொடுத்த எனது முன் தலைமுறையினரை நான் அடியோடு வெறுக்ககிறேன் . இனி இந்த தலைமுறை விழித்து கொண்டுள்ளனர் . இந்துக்கடவுள் இல்லை எனசொல்பவன் முட்டாள் , கட்டு மிராண்டி . இனி இந்துக்களை விழிப்புணர்ச்சி செய்வது எங்களது கடமை . நிச்சயமாம் உனது திமுக , காண் கிராஸ் , கம்யூனிஸ்ட் முஸ்லீம் செம்பு , விடுதலை புனை மீசை எல்லாம் ஒருபுறம் சேருங்கள் , நாங்கள் எதிர் அரசியல் செய்ய தயார் .சுபராம காரைக்குடி

Rate this:
vbs manian - hyderabad,இந்தியா
08-மார்-201819:28:14 IST Report Abuse

vbs manianபெரியாரின் சீடர்கள் நினைத்து பார்க்க வேண்டிய ஒரு விஷயம்,பெரியார் கை மிக மிக சுத்தம் என்று சொல்கிறார்கள் பொது வாழ்வுக்கு வந்து சொத்து சேர்க்கவில்லை.. ஆனால் அவர் புகழ் பாடி பொது வாழ்வில் இன்று இருப்பவர்கள் ஊழல் கடலில் மிதக்கிறார்கள்

Rate this:
Agni Shiva - Durban,தென் ஆப்ரிக்கா
08-மார்-201823:21:11 IST Report Abuse

Agni Shivaமயக்கம் போட்டு விழாதீர்கள்..திராவிட கழகத்திற்கு தற்போது இருக்கும் சொத்து மதிப்பு ஒரு லக்ஷம் கோடியை சாதாரணமாகவே தாண்டி விடும் என்பது உங்களுக்கு தெரியுமா?...

Rate this:
Thiagarajan Kodandaraman - Madurai,இந்தியா
08-மார்-201818:42:21 IST Report Abuse

Thiagarajan Kodandaramanஉங்க அப்பரே பேசி பேசி ஓஞ்சு போய்ட்டாரு இந்த கதையையெல்லாம் உடன்பெறுப்பும் கேட்டு கேட்டு ஓஞ்சு போயாச்சு வேற வேல இருந்த பாருங்க .இல்லேனா லண்டனுக்கு போயி ஓய்வு எடுத்துட்டு கணக்கு வழக்கெல்லாம் பார்த்துட்டு வாங்கோ

Rate this:
vns - Delhi,இந்தியா
08-மார்-201817:29:05 IST Report Abuse

vnsஎங்களை காட்டுமிராண்டிகள் என்று கூறியவனின் சிலையை காட்டுமிராண்டித்தனமாக உடைக்கிறோம்.. இதில் என்ன தவறு. காட்டுமிராண்டிகள் என்று எங்களை கேவலப்படுத்தினால் நாங்கள் கேட்டுக்கொண்டு இருக்க மாட்டோம். இனிமேல் திருப்பி அடித்தான்..

Rate this:
ஈரோடுசிவா - erode ,இந்தியா
08-மார்-201817:06:04 IST Report Abuse

 ஈரோடுசிவாஉங்கள் அறுபதாண்டு கால திராவிச பாஸிஸ கொடுங்கோல் ஆட்சியில் காயடிக்கப்பட்ட ஹிந்துக்கள் ஏதோ கொஞ்சம் உணர்வு பெற்று ... எதிர்ப்பு கேள்வி கேட்பது உங்களுக்கு மதவெறியாகத் தெரிகிறதா சுடலை .... ? ஊரூரா... கோயில் கோயிலா போயி சாமியும் கும்புடுற ... சொரியானுக்கும் வால் பிடிக்கிறே ... எதுக்கு இந்த ரெட்டை வேஷம் ...?

Rate this:
G.Loganathan - Coimbatore,இந்தியா
08-மார்-201816:14:18 IST Report Abuse

G.Loganathanபெரியார் சிலையை சேதப்படுத்தியவர்களை தண்டித்துவிடலாம்...ஆனால் பெரியார் லட்சியங்களை, கூறிய நல்ல கருத்துக்களை மண்ணில் புதைத்துவிட்ட மாபாவிகளை என்ன செய்ய?. சாதி மதம் வேண்டாம் என்றார் அணைத்து கட்சிகளும் சாதி அடிப்படையில்தான் அணைத்தும் நடக்க வேண்டும் என்கின்றனர். மதம் மனிதனின் முன்னேற்றத்தின் எதிரி என்றார் - தினம் ஒரு இந்து கோவில், கிறிஸ்த்துவ ஆலயம், இஸ்லாமிய தர்கா என்று உருவாக்கப்படுகிறது. சாதியின் அடிப்படையில் வேலை கொடுக்கப்பட்டது - விளைவு, அரசாங்க அலுவலகங்கள் அணைத்தும் சீரழிந்து கிடக்கிறது. சாதாரண குடி மக்கள் குரல் கொடுத்தால், அரசாங்க ஊழியரின் பதில் "நானும் 10 லட்சம் கொடுத்துதான் வேலை வாங்கியிருக்கிறேன்". முதலில் தமிழனை தலை நிமிர விடுங்கள் பிறகு உங்கள் சவடால்களை விடலாம்.

Rate this:
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
08-மார்-201815:45:32 IST Report Abuse

Nallavan Nallavanசுடலையை எதிர்த்து கருத்து எழுதும் சக பாஜக ஆதரவாளர்களே ..... தமிழகத்தில் சாதியைக் கடந்து மதத்தால் ஹிந்துக்கள் ஒன்றிணைய பாஜக என்ன செய்தது ? நாம்தான் என்ன செய்து விட்டோம் ?

Rate this:
Agni Shiva - Durban,தென் ஆப்ரிக்கா
08-மார்-201823:22:58 IST Report Abuse

Agni Shivaஹிந்துக்கள் மதத்தால் ஒன்றிணைந்து விட்டால் ஜாதிகள் ஒளிந்தே போம்....

Rate this:
மேலும் 108 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement