இன்று ஒரு நாள் மட்டும் மகளிர் நடத்தும் சுங்கச்சாவடி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

இன்று ஒரு நாள் மட்டும் மகளிர் நடத்தும் சுங்கச்சாவடி

Added : மார் 08, 2018 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
இன்று ஒரு நாள் மட்டும் மகளிர்  நடத்தும் சுங்கச்சாவடி

தமிழகத்தில், முதன்முறையாக, மகளிர் மட்டும் பணிபுரியும் வகையில், இன்று ஒரு நாள் முழுவதும், பட்டரை பெரும்புதுார் சுங்கச்சாவடி இயக்கப்பட உள்ளது.

தமிழகத்தில், 5,000 கி.மீ., தேசிய நெடுஞ்சாலைகளில், 46 இடங்களில், வாகன கட்டணம் வசூலிப்பதற்காக, சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன. இவற்றில் கட்டணம் வசூலிப்பு பணியை, ஆண்கள் மட்டுமே மேற்கொள்கின்றனர்.

இதற்காக, வட மாநிலத் தவர் அதிகளவில் பணியமர்த்தப்பட்டு உள்ளனர். சுங்கச்சாவடி நிர்வாக அலுவலக பணியில் மட்டுமே, பெண்கள் சில இடங்களில் ஈடுபடுகின்றனர்.இதற்கிடையே, தமிழக பிரிவு, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சார்பில், இன்று, மகளிர் தின கொண்டாட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதன் ஒரு பகுதியாக, சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள, பட்டரை பெரும்புதுார் சுங்கச்சாவடி, நாள் முழுவதும், மகளிரால் இயக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. தமிழகத்தில், முதன்முறையாக, இந்த ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இச்சாலையில் பயணிக்கும் மகளிருக்கு, இனிப்புகள் வழங்கப்பட உள்ளன.

மத்திய அரசின் சுகாதார திட்டத்தில், தேசிய நெடுஞ்சாலைகளை சுகாதாரமாக வைப்பது குறித்தும், வாகனம் ஓட்டும் போது கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்தும், விழிப்புணர்வு பிரசாரம் செய்யப்பட உள்ளது.
- நமது நிருபர் -

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ushadevan -  ( Posted via: Dinamalar Android App )
08-மார்-201806:22:24 IST Report Abuse
ushadevan வாழத்துக்கள்.Happy womens day always.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை