மூன்று புதிய வகை சர்க்கரை நோய்கள் கண்டுபிடிப்பு!| Dinamalar

சிறப்பு பகுதிகள்

அறிவியல் மலர்

மூன்று புதிய வகை சர்க்கரை நோய்கள் கண்டுபிடிப்பு!

Added : மார் 08, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

நீரிழிவு நோயை மருத்துவர்கள் இரண்டு வகையாகப் பிரித்து, அகற்கு ஏற்றபடி சிகிச்சை அளித்து வருகின்றனர். ஆனால், சர்க்கரை நோயில் மேலும் மூன்று வகைகள் இருப்பதாக, பின்லாந்து மற்றும் சுவீடன் நாட்டு ஆராய்ச்சியாளர்கள் அண்மையில் கண்டறிந்து உள்ளனர்.
இந்த கண்டுபிடிப்பால், ஒருவருக்கு சர்க்கரை நோய் வந்தால், அது இந்த ஐந்தில் எந்த வகை என தெரிந்து, அதற்கேற்றபடி சிகிச்சை அளிக்க முடியும் என, ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.
உடல் சர்க்கரையை சக்தியாக மாற்ற உதவும் இன்சுலின் உற்பத்தியில் ஏற்படும் குறைபாடுகளை சார்ந்து இரண்டு வகையும், உடல் பருமன் சார்ந்து இரண்டு வகையும், வயது சார்ந்து ஒருவகையுமாக இனி சர்க்கரை நோய்களை வகைப்படுத்த வேண்டும் என, இரு நாட்டு ஆராய்ச்சியாளர்களும் அறிவுறுத்துகின்றனர்.
'தி லான்செட் டயாபெட்டிஸ் அண்ட் எண்டோக்ரினாலஜி' இதழில் வெளிவந்துள்ள இந்த புதிய வகைப்பாட்டுக்கு உலகெங்கும் உள்ள நீரிழிவு மருத்துவர்கள் வரவேற்புத் தெரிவித்து உள்ளனர்.
அதேசமயம், உலகெங்கும் உள்ள பல தரப்பட்ட நோயாளிகளுக்கு மேலும் பல வகை சர்க்கரை நோய்கள் இருக்கலாம். அவற்றையும் வகைப்படுத்தினால், அந்தந்த நோயாளிக்கு வந்துள்ள வகை சர்க்கரை நோய்க்கு ஏற்ற துல்லியமான மருந்துகளையும் சிகிச்சை முறைகளையும் மருத்துவர்கள் பரிந்துரைக்க முடியும் என, கருத்து தெரிவித்து உள்ளனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை