லேசர், 'சுட்ட' ஜீன்ஸ்!| Dinamalar

சிறப்பு பகுதிகள்

அறிவியல் மலர்

லேசர், 'சுட்ட' ஜீன்ஸ்!

Added : மார் 08, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
லேசர், 'சுட்ட' ஜீன்ஸ்!

புதியதையும் பழையதுபோல ஆக்கி விற்பதில் லீவைஸ் ஜீன்ஸ் கம்பெனியை அடித்துக்கொள்ள முடியாது. அவர்கள் இதுவரை புதிய ஜீன்சை பழசு போல தோற்றமளிக்க வைக்க, 18 முதல், 20 தடவை பல வேதிப் பொருட்களில் முக்கியெடுத்து வந்தனர்.
இந்த முறையில் லீவைஸ் ஆலையில் ஒருவர் மூன்று ஜீன்ஸ்களையே தயாரிக்க முடியும். ஆனால், அண்மையில் லேசர் கதிர்களை பயன்படுத்தி ஜீன்களை பழசுபோல ஆக்க ஆரம்பித்துள்ளது லீவைஸ்.
இதற்கென தனியாக உடை வடிவமைப்பாளர்களை அமர்த்தி, எங்கே கிழிசல், எங்கே பிசிறு, எங்கே வெளிரல் என்று எல்லாவற்றையும் வடிவமைத்து, ஒரு கணினியில் பதிவு செய்ய, ஒரு லேசர் கதிர் இயந்திரம் ஒவ்வொரு ஜீன்சின் முன் பகுதியையும், பின் பகுதியையும் ஒரு வருடு வருடுகிறது. அவ்வளவுதான், 90 வினாடிகளில் புத்தம்புதிய பழைய ஜீன்ஸ் தயார்!
ஆடைத் தொழிலில் ஒரு தலைமுறைக்கு ஒரு தடவை தான். இதுபோன்ற, 'புரட்சிகர' தொழில்நுட்பம் வரும். அது இப்போது லீவைசுக்கு வாய்த்திருக்கிறது என, லீவைசின் வடிவமைப்பாளர்கள் குழுவின் தலைவர், ஊடகங்களிடம் பெருமைப்பட்டுக் கொண்டிருக்கிறார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை