மனித கண்ணை மிஞ்சும் செயற்கை கண்| Dinamalar

சிறப்பு பகுதிகள்

அறிவியல் மலர்

மனித கண்ணை மிஞ்சும் செயற்கை கண்

Added : மார் 08, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
மனித கண்ணை மிஞ்சும் செயற்கை கண்

ஹார்வர்டு பல்கலைக் கழக விஞ்ஞானிகள், செயற்கை குவி ஆடி ஒன்றை உருவாக்கியுள்ளனர்.
வெறும், 30 மைக்ரான் அளவே உள்ள இந்த குவி ஆடி, மனித கண்களில் குவி ஆடி தசையால் இயக்கப்படுவதைப் போலவே இயங்குகிறது.
ஒளிப்படக் கருவி, தொலைநோக்கி, நுண்நோக்கி, போன்றவற்றில் பலவித ஆடிகளை வரிசையாக வைத்து ஒளியை குவியச் செய்வர்.
இப்படி பல ஆடிகளை வைக்கும்போது, உள்ளே வரும் ஒளிக் கற்றைகள் பாதிப்படைந்து, அவை திரையில் உருவாக்கும் தோற்றம் பாதிக்கப்பட வாய்ப்புகள் அதிகம். ஆனால், ஹார்வர்டு ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ள இந்த புதிய ஆடி, தட்டையாக இருந்தாலும், மின் துாண்டுதலால் தசைகள் போல இயங்கி ஒளியை திரையில் குவிக்கிறது.
இதனால், படத்தின் துல்லியம் பாதிக்கப்படுவதில்லை என, ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த ஆடியில் ஒளி ஊடுருவும் புதிய வகை, 'எலாஸ்டோமர்' செயற்கை தசையாக செயல்படுகிறது.
இந்த தசை மின்துாண்டலில் விரியவும் சுருங்கவும் எடுத்துக்கொள்ளும் நேரத்தை மேலும் குறைக்க முடியுமா... என, ஆய்வாளர்கள் தற்போது ஆராய்ந்து வருகின்றனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை