தெலுங்கு தேச மத்திய அமைச்சர்கள் ராஜினாமா| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தெலுங்கு தேச மத்திய அமைச்சர்கள் ராஜினாமா

Updated : மார் 08, 2018 | Added : மார் 08, 2018 | கருத்துகள் (20)
Advertisement

புதுடில்லி: மத்திய அமைச்சரவையில் இருந்து தெலுங்கு தேச கட்சியை சேர்ந்த இரண்டு அமைச்சர்கள் ராஜினாமா செய்துள்ளனர்.

ஆந்திராவிற்கு சிறப்பு அந்தஸ்து வழங்க மத்திய அரசு மறுத்துவிட்டது. இதையடுத்து அக்கட்சியை சேர்ந்த மத்திய அமைச்சர்கள் கஜபதி ராஜூ, ஓய்எஸ். சவுத்ரி ஆகியோர் இன்று ராஜினாமா செய்வார்கள் என அக்கட்சி அறிவித்தது. இதற்கு பதிலடியாக ஆந்திர அரசில் இடம்பெற்றிருந்த பா.ஜ., அமைச்சர்கள் 2 பேர் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர்.


ராஜினாமா

இந்நிலையில், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் ஆலோசனை நடத்தினார். சுமார் 10 நிமிடங்கள் நடந்த இந்த ஆலோசனையின் போது பதவி விலகுவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர். நேற்று இரவு சந்திரபாபு நாயுடுவுடன் பா.ஜ., தலைவர் அமித் ஷா ஆலோசனை நடத்தியிருந்தார். இதனிடையே, பதவி விலக உள்ள தெலுங்கு தேச கட்சியை சேர்ந்த அமைச்சர்கள் மாலை 6 மணியளவில் பிரதமர் மோடியை சந்தித்து பேசினர். அப்பொழுது தங்களது ராஜினாமா கடிதத்தை பிரதமர் மோடியிடம் வழங்கியுள்ளனர்.


கூட்டணி நீடிப்பு

இந்நிலையில் ராஜினாமா செய்த எம்.பி., ஓய்.எஸ். சவுத்ரி கூறுகையில்: 'தேசய ஜனநாயக கூட்டணியில் தொடர்ந்து நீடிக்கிறோம். அமைச்சர் பதவியில் இருந்து மட்டும் ராஜினாமா செய்கிறோம் '' என கூறினார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (20)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Panneerselvam Chinnasamy - chennai,இந்தியா
09-மார்-201811:18:26 IST Report Abuse
Panneerselvam Chinnasamy தெலுங்கு தேச நிழலில் பிஜேபி வளராது... வளர்ச்சிக்கு தடையான கூட்டில் இருந்து வெளிவந்தது பிஜேபி க்கு ஒரு விதத்தில் நல்ல விஷயமே...
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
09-மார்-201808:30:22 IST Report Abuse
Srinivasan Kannaiya நன்றாக அனுபவித்த பிறகு.. ச்சீ ச்சீ இந்த பழம் புளிக்கும் என்று போகிறீர்கள்... நல்ல பிழைக்க தெரிந்த ஆட்கள் நீங்கள்...
Rate this:
Share this comment
Cancel
mindum vasantham - madurai,இந்தியா
09-மார்-201807:47:14 IST Report Abuse
mindum vasantham Tamilakathu thelunngu thesamana stalin abiprayam enna
Rate this:
Share this comment
Cancel
Snake Babu - Salem,இந்தியா
09-மார்-201807:40:13 IST Report Abuse
Snake Babu பிஜேபி ன் சரிவின் ஆரம்பம், அந்த பக்கம் நிதிஷும் ஆட்டி பார்க்க போகிறார். எது எப்படியோ பிஜேபி சரிவானாலும் காங்கிரஸ் கானாமல் போணாலும் நடக்கும் அவலம் தொடரத்தான் செய்யும். பொதுவான எதிரி இருக்கிறான். அவனை அறிந்து கொள்ள யாரும் தயாராக இல்லை. அதுவும் தற்போது எப்போதும் ஒரு பதபதப்பையே இருக்கும் மாறு பார்த்துக் கொள்கிறார்கள். போதாக்குறைக்கு மதம் மற்றும் மற்ற மத ஏளன பேச்சு. குறிப்பாக sensitive ஆக பேசி சண்டை மூட்டிவிடுவது. இது இப்படியே தான் போகும். மொத்தத்தில் மக்களின் பிரச்சினை தீராது. அய்யா நல்லவன் நல்லவன் ஜாதி பேதமற்ற இந்துக்கள் ஒருங்கிணைவது என்பது முடியாத ஒன்று. நமக்குள் அடித்துக் கொண்டு இருந்தால் தான் அரசியல் வாதி பொழப்பு ஒடும். இதை வைத்து தான் corporate அரசை இயக்கி கொண்டு இருக்கிறது. இப்ப பிஜேபி அடுத்து வேரோறு ஆட்சி. எப்போதும் நமக்குள் அடித்துக் கொண்டு இருக்க வேண்டும். அவர்கள் ஆட்சியாளர்களை கொண்டு நாட்டை கொள்ளை அடிப்பார்கள். கொஞ்சம் எலும்பு துண்டை தேர்தல் நிதியாக கொடுத்து விட்டால் போதும். ......... சரி இந்துக்கள் ஒருங்கிணைப்பு எப்படி நடக்கும். எப்போதுமே பிஜேபி யினர் பேச்சை கவனியுங்கள். உங்களுக்கு பதில் போடவே சன்டை பெரிதாகிறது. நல்லவை வேண்டும் என்றால் நல்லதை கருத்தாக போடுங்கள். குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை. எல்லோரையும் சுற்றமாக பார்த்தால். நன்றி வாழ்க வளமுடன்.
Rate this:
Share this comment
Cancel
Giridharan S - Kancheepuram,இந்தியா
09-மார்-201806:19:20 IST Report Abuse
Giridharan S நாயடு காரு நீக்கு நேரம் சரியா காது. நீக்கு இந்த தைரியத்தை ஓரு இஸ்தாரு. நல்ல cm பேரு பெட்டுன்னாரு. அப்புறக்க நீவே decide சேசுக்கோ. உங்கள் தைரியத்தை பாராட்டுகிறேன். மத்தியில் தனிப்பட்ட செல்வாக்குடன் இருக்கும் மோடியை தயவு செய்து பகைத்துக்கொள்ள வேண்டாம். எங்க எடப்பாடி பழனிசாமி கிட்டே கத்துக்குங்க சார்
Rate this:
Share this comment
Cancel
ஏடு கொண்டலு - Cupertino,யூ.எஸ்.ஏ
09-மார்-201801:02:40 IST Report Abuse
ஏடு கொண்டலு கடிதத்தில் பிரதமரின் பெயரில் பிழை... இதைக்கூட ஒழுங்காகச் செய்யத் தெரியாதவர்களுக்கு, பதவி, சிறப்பு அந்தஸ்து...
Rate this:
Share this comment
Cancel
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
08-மார்-201823:43:32 IST Report Abuse
தமிழ்வேல் மீசை உள்ள ஆம்பளைங்க...
Rate this:
Share this comment
Cancel
தாமரை - பழநி,இந்தியா
08-மார்-201821:20:13 IST Report Abuse
தாமரை பாரதத்தில் எந்த மாநிலத்துக்கும் சிறப்பந்தஸ்த்து கூடாது என்பதுதான் பா ஜ க வின் கொள்கை. கூட்டணிக்கு கட்சியின் நிர்பந்தத்துக்குப் பணியாமல் இருக்கும் பா ஜ க வுக்கு வாழ்த்துக்கள்.
Rate this:
Share this comment
Gopalsami.N - chennai,இந்தியா
09-மார்-201806:58:42 IST Report Abuse
Gopalsami.Nகூட்டணி கட்சியின் நிர்பந்தத்திற்கு பணியாமல் இருக்க அதிகளவு தைரியம் வேண்டும். பி.ஜே.பி Valera வழிகாட்டியாக இருக்கும் தெலுங்குதேச கட்சிக்கு வாழ்த்துக்கள். அனைத்து கட்சிகளும் பி.ஜே.பி. யை irubbing செய்யவேண்டும். அப்போதுதான் வைரம் பட்டை தீட்டப்பட்டு ஜ்வலிக்கும். திரு மோடி அவர்களே, உங்கள் கட்சி ஊழல் செய்யாமலும், ஊழல் செய்பவர்களை தண்டித்தும் ஆட்சி செய்யுங்கள். மக்கள் உங்கள்பக்கம்தான். அஞ்சி அஞ்சி வாழ்ந்தது போதும் ராஜா இனி .................வரப்போகும் எலெக்ஷன்னுக்கு முன் இரண்டில் ஒன்று ...............
Rate this:
Share this comment
Anandan - chennai,இந்தியா
09-மார்-201810:22:36 IST Report Abuse
Anandanவாக்குறுதி கொடுத்துவிட்டு பின் அதிலிருந்து பின் வாங்குவது தைரியம் அல்ல பித்தலாட்டம்....
Rate this:
Share this comment
Cancel
Makkal Enn pakam - Riffa,பஹ்ரைன்
08-மார்-201820:39:42 IST Report Abuse
Makkal Enn pakam முதுகெலும்புள்ளவர்கள் ....
Rate this:
Share this comment
Cancel
sankaseshan - mumbai,இந்தியா
08-மார்-201819:41:18 IST Report Abuse
sankaseshan கூடவே இருந்து கழுத்தறுக்கும் தொல்லை ஒழிந்தது
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை