சென்னையில் 23.1 கிலோ தங்கம் பறிமுதல்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சென்னையில் 23.1 கிலோ தங்கம் பறிமுதல்

Updated : மார் 08, 2018 | Added : மார் 08, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
சென்னையில் 23.1 கிலோ தங்கம் பறிமுதல்

சென்னை: இலங்கையில் இருந்து இந்தியாவிற்கு கடத்த முயன்ற சுமார் 23.1 கிலோ தங்கத்தை வருவாய் புலணாய்வு துறையினர் பறிமுதல் செய்தனர்.

இலங்கையில் இருந்து, படகு மூலம் ராமேஸ்வரம் மூலமாக இந்தியாவிற்கு தங்கம் கடத்தப்படுவதாக வருவாய் புலனாய்வு துறையினருக்கு தகவல் கிடைத்தது. அவர்கள் ராமேஸ்வரத்தில் இருந்து சேது எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் சென்னைக்கு வருவதாகவும் தகவல் வெளியானது.

இதையடுத்து சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் அவர்களை குறி வைத்து வருவாய் புலனாய்வு துறையினர் நடத்திய விசாரணையில், அவர்கள் தங்கம் கடத்தியது தெரியவந்தது. அவர்கள் கடத்திய 23.1 கிலோ தங்கத்தை பறிமுதல் செய்தனர். கடந்த ஒரு மாதத்தில் வருவாய் புலனாய்வு துறையினர் 50 கிலோ தங்கத்தை பறிமுதல் செய்துள்ளது தெரியவந்துள்ளது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை