மூன்றாவது அணியில் சந்திரபாபு நாயுடு இணைகிறார்? Dinamalar
பதிவு செய்த நாள் :
இணைகிறார்?
மூன்றாவது அணியில் சந்திரபாபு நாயுடு...
அடுத்த தேர்தல் வியூகத்துக்கு தயாராகிறார்

மத்திய அரசில் இருந்து தெலுங்கு தேசம் விலகியுள்ளதை அடுத்து, அக்கட்சித் தலைவரும்,ஆந்திர முதல்வருமான, சந்திரபாபு நாயுடுவின் அடுத்தகட்ட அரசியல் நடவடிக்கைகள் எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. மூன்றாவது அணியில், சந்திரபாபு நாயுடு இணைவதற்கான வாய்ப்புகள், அதிகம் இருப்பதாக கூறப்படுகிறது.

மூன்றாவது அணியில் சந்திரபாபு நாயுடு இணைகிறார்?


ஆந்திராவில், முதல்வர்,சந்திரபாபு நாயுடு தலைமையில், தெலுங்கு தேசம் ஆட்சி நடக்கிறது. லோக்சபாவில், 16 மற்றும் ராஜ்யசபாவில், ஆறு,எம்.பி.,க்களை வைத்துள்ள தெலுங்கு தேசம், மத்தியில் உள்ள, பா.ஜ., தலைமையிலான, தே.ஜ., கூட்டணியில் முக்கிய அங்கம் வகிக்கிறது.
இந்நிலையில், ஆந்திராவில் நடக்கும் சில அரசியல் மாற்றங்கள், சந்திரபாபு நாயுடுவுக்கு மிகப் பெரிய நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளன.

இதையடுத்தே, 'ஆந்திரா மறுசீரமைப்பு மசோதாவில் குறிப்பிட்டபடி, மாநிலத்துக்கு உரிய திட்டங்களை, மத்திய அரசு செயல்படுத்த வில்லை' என, ஆந்திர அரசு, சமீபத்தில் குற்றஞ்சாட்டியது.மத்திய பட்ஜெட் தாக்கலுக்குப் பின், இந்தப்பிரச்னை விஸ்வரூபம் எடுத்தது. மத்திய அரசுக்கு எதிராக, நேரடியாக விமர்சனங்கள் வரத் துவங்கின.

மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையை, மத்திய அரசு, ஏற்கனவே நிராகரித்து விட்டது.

இந்நிலையில், அதை ஈடுசெய்யும் வகையில், மாநிலத்துக்கு சிறப்பு ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை என்பது, ஆந்திர அரசின் முக்கிய குற்றச்சாட்டு.

'அமராவதியில் அமைக்கப்படும் புதிய மாநில தலைநகருக்கு நிதி ஒதுக்கவில்லை; போலாவரம் கூட்டு குடிநீர் திட்டத்துக்கு நிதி ஒதுக்கவில்லை.'விசாகப்பட்டினத்தை தலைமையிடமாக வைத்து, புதிய ரயில்வே மண்டலம் அமைக்க வேண்டும் போன்றகோரிக்கைகள், பட்ஜெட்டில் இடம்பெறவில்லை' என, தெலுங்கு தேசம் வெளிப்படையாக பட்டியலிடத் துவங்கியது.

மாநிலத்தின் முக்கிய எதிர்க்கட்சியான, ஒய்.எஸ்.ஆர்., காங்கிரஸ் தலைவர், ஜெகன் மோகன் ரெட்டி, 'மாநிலம் வஞ்சிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு முழுமையாக புறக்கணிக்கிறது' என, கடுமையாக விமர்சனம் செய்துஉள்ளார்.

மேலும், ஏப்., 4க்குள், மாநிலத்துக்கான உரிமை நிலைநாட்டப்படாவிட்டால், தங்கள் கட்சி, எம்.பி.,க்கள் ராஜினாமா செய்வர் என்றும், அவர் காலக்கெடு விதித்து உள்ளார். இது, மாநிலத்தில் மிகப் பெரிய அளவில் விவாதிக்கப்பட்டது. இத்தனை ஆண்டுகளாக, மத்திய அரசுக்கு சாதகமாக பேசி வந்த நிலையில், எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்கும், மக்களின் மன ஓட்டத்துக்கும் ஈடு கொடுக்க முடியாமல், சந்திரபாபு நாயுடு திணறினார்.

அடுத்த ஆண்டு லோக்சபா மற்றும் மாநில சட்டசபை தேர்தல் நடக்க உள்ள நிலையில், இந்தப் பிரச்னையில் முடிவெடுக்க வேண்டிய நிலைக்கு, தெலுங்கு தேசமும் தள்ளப்பட்டது. தற்போது, மத்திய அமைச்சர்கள் விலகியுள்ள நிலையில், விரைவில், பா.ஜ., தலைமையிலான, தே.ஜ., கூட்டணியில் இருந்தும், தெலுங்கு தேசம் வெளியேறி, மூன்றாவது அணியில் இணையும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement


'கிங் மேக்கர்' ஆவாரா?

மிக நீண்ட அரசியல் அனுபவம் உள்ள, தெலுங்கு தேசம் தலைவரும், ஆந்திர முதல்வருமான, சந்திர பாபு நாயுடு, ஒரு காலத்தில், 'கிங் மேக்கர்' என, பெயர் பெற்றவர். மாநில அரசியலுடன், தேசிய அரசியலிலும் முத்திரையை பதித்தவர். ஐக்கிய முன்னணி மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் முதல் ஆட்சி அமைவதில், அவரது பங்கு மிகவும் முக்கியம். பா.ஜ.,வைச் சேர்ந்த, முன்னாள் பிரதமர் வாஜ்பாய் தலைமையிலான, தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசுக்கு, வெளியில் இருந்து ஆதரவு தந்தார். 2014ல், மாநில சட்டசபை மற்றும் லோக்சபா தேர்தலின் போது, அரசியலில் மிகவும் இக்கட்டான நிலையில் இருந்தார், சந்திரபாபு நாயுடு. அந்தத் தேர்தலில், வெற்றியே அவரது அரசியல் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் என்ற நிலையில், பா.ஜ., கூட்டணியில் இணைந்தார். அடுத்த ஆண்டு நடக்க உள்ள சட்டசபை மற்றும் லோக்சபா தேர்தலை கணக்கில் வைத்தே, மத்திய அமைச்சரவையில் இருந்து தெலுங்கு தேசம் விலகியது. அடுத்தகட்டமாக, தே.ஜ., கூட்டணியில் இருந்தும் வெளியேறும் என, கணிக்கப்படுகிறது. அந்த நிலையில், மீண்டும் மூன்றாவது அணிக்கான முயற்சியில் அவர் ஈடுபடுவார். ஏற்கனவே, மூன்றாவது அணிக்கான முயற்சிகள் நடந்து வரும் நிலையில், அதில், சந்திரபாபு நாயுடுவும் இணைவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக, அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.


- நமது சிறப்பு நிருபர் -

Advertisement

வாசகர் கருத்து (22)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
MaddyMaddy - chennai ,இந்தியா
19-மார்-201815:34:41 IST Report Abuse

MaddyMaddyஅன்று ஆளும் காங்கிரஸ் அரசு தெலுங்கானா தனி மாநிலம் என அறிவிக்கும்போது சந்திரபாபு நாயுடு அய்யா ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தார் ... திடீர் என்று விழிப்பு வரவே அவருக்கு புரிந்தது பணம் கொட்டும் ஹைதெராபாத் அவர் கையில் இல்லை KSR கையில் சென்றுவிட்டது என்று .. நன்று கொழுத்த வெள்ளாடு விருந்துக்கு கொஞ்சம் நேரம் முன் விடுபட்டு ஓடிவிட்டதை போல உணர்த்த நம்ம நாயுடு அய்யா அமராவதி இல்லை விஜயவாடா என இந்த இரண்டு ஆடுகளில் எதாவது ஒன்றை கொழுக்கவைக்க எண்ணுகிறார். தன காசில் தீவனம் வைத்தால் வேலைக்கு ஆகாது என்று அறிந்த நாயுடு வீட்டில் இருக்கும் பொது உண்டியலை உடையுங்கள் எனக்கு extra துட்டு வேணும் என்று அடம்பிடிக்கிறார் ஒரு மொழி பேசும் இரு மாநிலங்கள் என்ன செய்வது காலத்தின் கொடுமை ... கண்கெட்ட பின்னே எதற்கு அய்யா சூரியநமஸ்கரம் ...

Rate this:
Raajanarayanan Raaj Narayanan - SANKARAN KOVIL,இந்தியா
09-மார்-201819:58:18 IST Report Abuse

Raajanarayanan Raaj Narayananவைகோவையும் உங்கள் அணியில் சேர்த்துவிட்டு வருங்கால பிரதமர் சந்திர பாபு நாயுடு வாழ்க என்று ஒருமுறை சொன்னால் அடுத்த பிரதமர் கண்டிப்பாக மோடியே ஆட்சி அமைப்பார். விஜயகாந்த தெருவுக்கு வந்த மாதிரி நாயுடு வரவேண்டி வரும் காலம் யாரை விட்டது.

Rate this:
Poongavoor Raghupathy - MUMBAI,இந்தியா
09-மார்-201819:50:56 IST Report Abuse

Poongavoor RaghupathyFor a good democratic Country we require a strong opposition for BJP but somehow all India Party Congress has so far miserably failed. The people should not allow BJP to act like a dictator Party. In the interest of our Nation and people a strong opposition Party for BJP is A welcome move. But Chadrababu is to join in third alliance because Andhra was not give a special statue by the ruling Party. The great leaders are bothered about their own States but who will bother for the Nation. Let the time decide.

Rate this:
மேலும் 19 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X