ராகுலின் திட்டத்துக்கு சோனியா எதிர்ப்பு? Dinamalar
பதிவு செய்த நாள் :
ராகுலின் திட்டத்துக்கு
சோனியா எதிர்ப்பு?

புதுடில்லி : காங்கிரஸ் தலைவர், ராகுலின் முயற்சிக்கு, அவரது தாயாரும், கட்சியின் முன்னாள் தலைவருமான, சோனியா எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக, தகவல்கள் தெரிவிக்கின்றன.

Congress,Sonia Gandhi,காங்கிரஸ்,சோனியா,சோனியா காந்தி, ராகுல்


காங்கிரஸ் தலைவ ராக, 19 ஆண்டுகள் பதவி வகித்த சோனியா, கடந்தாண்டு இறுதியில் விலகினார். இதையடுத்து, அவரது மகனும், துணைத் தலைவருமான, ராகுல், தலைவ ராகப் பொறுப்பேற்றார்.

கலைப்பு


'கட்சியின் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழு உட்பட, பல்வேறு பதவிகளுக்கு தேர்தல் நடத்த வேண்டும்' என, ராகுல் விரும்புகிறார். இதற்காக, செயற்குழு கலைக்கப்பட்டுள்ளது.

அதற்கு பதில், மூத்த தலைவர்கள் அடங்கிய நிர்வாகக் குழு, தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ளது.
காங்கிரஸ் விதிகளின்படி, செயற்குழுவுக்கு, 10 உறுப்பினர்களை, கட்சித் தலைவர் நியமிக்கலாம். மேலும், 10 உறுப்பினர்களை, தேர்தல் மூலம் தேர்வு செய்ய வேண்டும். பல ஆண்டுகளாகவே, நிரந்தர அழைப்பாளர் என்ற பெயரில், நிர்ணயிக்கப்பட்ட, 20 உறுப்பினர்களை விட, அதிகமான உறுப்பினர்களே, செயற்குழுவில் இருந்துள்ளனர்.

இது குறித்து, கட்சி யின் மூத்த தலைவர்கள் கூறியதாவது: இதற்கு முன், 1992 மற்றும், 1997ல், செயற்குழுவுக்கு தேர்தல் நடந்தது. அப்போது, கட்சியின் தலைவர்களாக இருந்த நரசிம்ம ராவ், சீதாராம் கேசரி ஆகியோருக்கு எதிராக, கட்சியின் மூத்த தலைவர்கள் பலர் குரல் கொடுத்ததால், தேர்தல் நடத்தப்பட்டது.

ஆனால், தற்போது, ராகுலுக்கு கட்சியில் எந்த எதிர்ப்பும் இல்லை. அதனால், தேர்தல் நடத்தாமல், செயற்குழு உறுப்பினர்களை அவரே நியமிக்க வேண்டும் என, கட்சியின் மூத்த தலைவர்கள் பலர் கருதுகின்றனர்.

Advertisement


விருப்பம்


அதேபோல், 19 ஆண்டுகளாக தன்னுடன், செயற்குழுவில் இருந்தவர்கள், அதே பதவியில் தொடர வேண்டும் என்றும், சோனியா விரும்புகிறார்.தேர்தல் குறித்து, கட்சியின் தேசியக் கூட்டத்தில் தான் முடிவு செய்யப்பட உள்ளது. இருப்பினும், தேர்தல் நடத்தாமல், நியமனம் செய்வது குறித்து, மூத்த தலைவர்கள் நிர்ப்பந்தம் செய்து வருகின்றனர்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


Advertisement

வாசகர் கருத்து (23)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
V Gopalan - Bangalore ,இந்தியா
09-மார்-201816:15:30 IST Report Abuse

V GopalanDynasty rule must be wiped out.

Rate this:
சிற்பி - Ahmadabad,இந்தியா
09-மார்-201814:41:44 IST Report Abuse

சிற்பி நரசிம்ம ராவ் மற்றும் சீதாராம் கேசரி தலைவர்களாய் இருந்த காலத்தில் ஜனநாயகம் முழுவதுமாக காங்கிரஸ்சில் இருந்தது. ஒதுங்கி இருந்த சோனியாவை மீண்டும் உள்ளே கொண்டு வந்தது யார்..? எல்லாம் நமது ஒற்றுமை இன்மையும் அடிமை புத்தியும். அவர் ஒதுங்கி தான் இருந்தார். இவர்கள் போட்டுக்கொண்ட சண்டையால் அவர் மூக்கை நுழைத்து, மீண்டும் கட்சி தலைமை ஏற்றார். இப்போது இருபது வருடங்களாக ஜனநாயகம் கட்சியில் இல்லை என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால் சோனியா நல்லவர். ராகுல் நல்லவர். நியமன உறுப்பினர்களே போதும். ஜனநாயக முறைப்படி தேர்தல் வைத்து உறுப்பினர்களை தேர்வு செய்தால், அந்த சுதந்திரம் பிடிக்காமல் வெட்டி மடிந்தனர். இந்த காங்கிரச்சா நாட்டை ஆள தகுதியானது? இதில் உள்ளவர்களா நாட்டை ஆள தகுதியானவர்கள்..?

Rate this:
pradeesh parthasarathy - Mylapore,இந்தியா
09-மார்-201813:28:57 IST Report Abuse

pradeesh parthasarathyதேர்தல் மூலம் தேர்ந்தெடுப்பது தான் நல்லது .. அது தான் உண்மையான ஜனநாயகம் ... அப்படியே கட்சி பொறுப்புகளுக்கு , எம் எல் எ , எம் பி வேட்ப்பாளர்களையும் உள்கட்சி தேர்தல் மூலம் தேர்ந்தெடுங்கள் ....

Rate this:
மேலும் 20 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X