மத்திய அமைச்சரவையில் அ.தி.மு.க., சேருமா? Dinamalar
பதிவு செய்த நாள் :
 AIADMK,National Democratic Alliance,Union Cabinet, அ.தி.மு.க, தேசிய ஜனநாயக கூட்டணி, பார்லிமென்ட் பட்ஜெட் கூட்டத் தொடர் , பிரதமர் நரேந்திர மோடி, தெலுங்கு தேசம், ஆந்திரா சிறப்பு அந்தஸ்து, விமான போக்குவரத்து துறை அமைச்சர் அசோக் கஜபதி ராஜு, தகவல் தொழில் நுட்பத்துறை இணை அமைச்சர் ஒய்.எஸ்.சவுத்ரி , முதல்வர் சந்திரபாபு நாயுடு ,மத்திய அமைச்சரவை, Anna Dravida Munnetra Kazhagam, Parliamentary Budget Session, Prime Minister Narendra Modi, Telangana, Andhra Pradesh Special status,
Aviation Minister Ashok Gajapathi Raju, Minister YS Southri, Chief Minister Chandrababu Naidu,அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்,

புதுடில்லி : பார்லிமென்ட் பட்ஜெட் கூட்டத் தொடர் முடிந்த பின், மத்திய அமைச்சரவையை மாற்றியமைக்க, பிரதமர், நரேந்திர மோடி முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த அமைச்சர்கள் விலகியதால், அதை ஈடுகட்டும் வகையிலும், தே.ஜ., கூட்டணியை பலப்படுத்தும் வகையிலும், அ.தி.மு.க.,வை அமைச்சரவையில் சேர்க்க, பா.ஜ., மேலிடம் திட்டமிட்டுள்ளது.

 AIADMK,National Democratic Alliance,Union Cabinet, அ.தி.மு.க, தேசிய ஜனநாயக கூட்டணி, பார்லிமென்ட் பட்ஜெட் கூட்டத் தொடர் , பிரதமர் நரேந்திர மோடி, தெலுங்கு தேசம், ஆந்திரா சிறப்பு அந்தஸ்து, விமான போக்குவரத்து துறை அமைச்சர் அசோக் கஜபதி ராஜு, தகவல் தொழில் நுட்பத்துறை இணை அமைச்சர் ஒய்.எஸ்.சவுத்ரி , முதல்வர் சந்திரபாபு நாயுடு ,மத்திய அமைச்சரவை, Anna Dravida Munnetra Kazhagam, Parliamentary Budget Session, Prime Minister Narendra Modi, Telangana, Andhra Pradesh Special status,
Aviation Minister Ashok Gajapathi Raju, Minister YS Southri, Chief Minister Chandrababu Naidu,அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்,


லோக்சபாவுக்கு, 2014ல் நடந்த தேர்தலில், பா.ஜ., தலைமையிலான, தே.ஜ., கூட்டணி வெற்றி பெற்றது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில், தே.ஜ., கூட்டணி அரசு பதவியேற்றது. அரசில், தெலுங்கு தேசம் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளுக்கு இடம் அளிக்கப்பட்டது.

'ஆந்திர மாநில மறுசீரமைப்பு மசோதாவின்படி, ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டும்' என, மத்திய அரசை, ஆந்திராவை ஆளும், முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையிலான, தெலுங்கு தேசம் வலியுறுத்தி வந்தது; இதற்கு, மத்திய அரசு சம்மதிக்கவில்லை.

இதையடுத்து, தே.ஜ., கூட்டணியிலிருந்து விலக, தெலுங்கு தேசம் முடிவு செய்தது.மத்திய அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த, தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த, விமான போக்குவரத்து துறை அமைச்சர், அசோக் கஜபதி ராஜு, தகவல் தொழில் நுட்பத்துறை இணை அமைச்சர், ஒய்.எஸ்.சவுத்ரி ஆகியோர், தங்கள் பதவிகளை நேற்று ராஜினாமா செய்தனர்.இதனால், தே.ஜ., கூட்டணியில் திடீர் குழப்பம் ஏற்பட்டுள்ளது.'மத்திய அமைச்சரவையிலிருந்து விலகினாலும், தே.ஜ., கூட்டணியிலிருந்து விலக மாட்டோம்' என, தெலுங்கு தேசம் தரப்பில் கூறப்பட்டாலும், இதை, பிரதமர் மோடியும், பா.ஜ., மூத்த தலைவர்களும் நம்பவில்லை. லோக்சபா தேர்தலுக்கு, இன்னும் ஒரு ஆண்டே உள்ள நிலையில், கூட்டணியை பலப்படுத்த, பா.ஜ., முடிவு செய்துள்ளது.

இதற்காக, கட்சியிலும், ஆட்சியிலும் மாற்றம் செய்ய, பிரதமர் மோடி விரும்புகிறார். பார்லிமென்ட் பட்ஜெட் கூட்டத் தொடர் முடிந்த பின், மத்திய அமைச்சரவை மாற்றம் செய்யப்படும் எனத் தெரிகிறது.மத்திய அமைச்சரவையை, கடைசியாக, கடந்தாண்டு செப்டம்பரில், பிரதமர் மோடி மாற்றி அமைத்தார்.

அப்போது, இணை அமைச்சராக பதவி வகித்து வந்த, நிர்மலா சீதாராமன், கேபினட் அந்தஸ்துக்கு உயர்த்தப்பட்டு, ராணுவ அமைச்சராக நியமிக்கப்பட்டார்.

பீஹாரில், ராஷ்ட்ரீய ஜனதா தளத்துடன் கூட்டணியை முறித்த, ஐக்கிய ஜனதா தள தலைவரும், அம்மாநில முதல்வருமான, நிதிஷ் குமார், பா.ஜ.,வுடன் கூட்டணி அமைத்து, மீண்டும் ஆட்சி அமைத்தார். மத்திய அமைச்சரவையில், ஐக்கிய ஜனதா தளத்துக்கு இடம் வழங்கப்படும் என, எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அது நடக்கவில்லை.

பா.ஜ.,வுடன் இணக்கமாக உள்ள, அ.தி.மு.க.,வுக்கும் அமைச்சரவையில் இடம் கிடைக்கும் என, எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அப்போது, அ.தி.மு.க.,வில் கோஷ்டி சண்டை நிலவியது. இதனால், அமைச்சரவையில், அ.தி.மு.க.,வுக்கு, பிரதமர்

Advertisement

இடம் அளிக்கவில்லை.மற்றொரு கூட்டணி கட்சியான, சிவசேனா, மஹாராஷ்டிராவில், பா.ஜ., வுடன் மோதல் போக்கை பின்பற்றி வருகிறது.

அதே நேரத்தில், மத்திய அமைச்சரவையில் தொடர்ந்து நீடித்து வருகிறது. 'அமைச்சரவையில் தங்களுக்கு கூடுதல் இடங்கள் வழங்க வேண்டும்' என, சிவசேனா எதிர்பார்க்கிறது.ராஜ்யசபாவில், பா.ஜ.,வுக்கு தற்போது பெரும்பான்மை இல்லாத நிலையில், கூட்டணி கட்சிகளின் ஆதரவு தேவை.

தே.ஜ., கூட்டணியில் இருந்து தெலுங்கு தேசம் விலகினால், அதை ஈடுகட்ட, வேறு கட்சிகளை, கூட்டணியில் சேர்க்க வேண்டும் என, பா.ஜ., மேலிடம் முடிவு செய்துள்ளது. இதனால், பட்ஜெட் கூட்டத் தொடருக்குப் பின், அமைச்சரவை மாற்றி அமைக்கப்பட வாய்ப்பு உள்ளது. அப்போது, ஐக்கிய ஜனதா தளம், அ.தி.மு.க., உள்ளிட்ட கட்சிகளுக்கு, அதில் இடம் கிடைக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாகவும், இது குறித்து, பா.ஜ., தலைவர்களுடன், பிரதமர் மோடி ஆலோசனை நடத்தி வருவதாகவும், கூறப்படுகிறது.

தே.ஜ., கூட்டணியில் இருந்து, தெலுங்கு தேசம் விலகினாலும், பா.ஜ., அரசுக்கு ஆபத்து ஏற்படாது.

பா.ஜ., பதிலடி

ஆந்திராவில், முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் அரசில், பா.ஜ.,வைச் சேர்ந்த, கமினேனி ஸ்ரீநிவாஸ், சுகாதாரத்துறை அமைச்சராகவும், மாணிக்யலா ராவ், அறநிலையத்துறை அமைச்சராகவும் இருந்தனர். மத்திய அமைச்சரவையிலிருந்து, தெலுங்கு தேசம் அமைச்சர்கள் விலகியதையடுத்து, இவர்கள் இருவரும், தங்கள் பதவிகளை நேற்று ராஜினாமா செய்தனர். ராஜினாமா கடிதங்களை, முதல்வர் சந்திரபாபு நாயுடுவிடம் அளித்தனர்.


Advertisement

வாசகர் கருத்து (45)

 • புதியவை
 • பழையவை
 • அதிகம் விவாதிக்கப்பட்டவை
 • மிக மிக தரமானவை
 • மிக தரமானவை
 • தரமானவை
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
12-மார்-201813:01:28 IST Report Abuse

Malick Rajaநரித்தந்திரங்கள் மூலம் சிலகாலம் மக்களை ஏமாற்றலாம் .. அதையே வைத்து சரித்திரம் படைக்க நினைத்தால் ....

Rate this:
Mani . V - Singapore,சிங்கப்பூர்
09-மார்-201822:42:47 IST Report Abuse

Mani . V"ஜி, சொல்லுங்க ஜி. அமைச்சரவையில் சேருவது பற்றி உங்களின் அடிமைகளான எங்களுக்கு ஆட்சேபனை எதுவும் இல்லை ஜி. ஏனென்றால் 'தமிழ்நாட்டை குட்டிச்சுவர் ஆக்குவது' என்பதுதானே நம் இருவரின் கொள்கை. நீங்கள் தமிழகம் முழுவதையும் பெட்ரோலிய மண்டலமாக அறிவிக்கலாம் ஜி. ஜி எங்களிடம் செல்லூர் ராஜு, திண்டுக்கல் சீனிவாசன், ஜெயக்குமார், செங்கோட்டையன், காமராஜ், ராஜேந்திர பாலாஜி, விஜயபாஸ்கர் போன்ற பல திறமைசாலிகள் (விஞ்ஞானிகள்) இருக்கிறார்கள் ஜி. நீங்கள் எந்த திறமைசாலியை வேண்டுமானாலும் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம் ஜி ".

Rate this:
mindum vasantham - madurai,இந்தியா
09-மார்-201821:43:45 IST Report Abuse

mindum vasantham@ bridge comment Dmk enna pannena bridge kattunennu solcainga ennamo ivanga kaalathula thaan london brige ah kattuna mathiriyum,vera evanum bridge kattatha mathiriyum kathai viduvanga,amma aatchi kalathulayum neraya sez vanthirukku,periya sez aana siruseri,mahindra city ellam amma kaalathil thaan,antha ammayar avvalava itha vilambaram paduthikkala

Rate this:
மேலும் 42 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X