'சானிடரி நாப்கினுக்கு ஜி.எஸ்.டி., ஏன்?' ; தி.மு.க., கேள்விக்கு பார்லி.,யில் பாராட்டு Dinamalar
பதிவு செய்த நாள் :
ஏன்?'
'சானிடரி நாப்கினுக்கு ஜி.எஸ்.டி., ஏன்?'
தி.மு.க., கேள்விக்கு பார்லி.,யில் பாராட்டு

ராஜ்யசபாவில் நேற்று, மகளிர் தினத்தையொட்டி நடந்த சிறப்பு விவாதத்தில் பங்கேற்ற, தி.மு.க., - எம்.பி., சிவா, ''சானிடரி நாப்கினுக்கு விதிக்கப்பட்டுள்ள, ஜி.எஸ்.டி.,யை ரத்து செய்ய வேண்டும்,'' என பேசியதற்கு, அனைத்து, எம்.பி.,க்களும் பாராட்டு தெரிவித்தனர்.

D.M.K,DMK,GST,Goods and Services Tax,ஜி.எஸ்.டி.,தி.மு.க,திராவிட முன்னேற்றக் கழகம்


வங்கி மோசடி உட்பட, பல்வேறு பிரச்னைகள் குறித்து, எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்ட நிலையில், நேற்று, சர்வதேச மகளிர் தினம் என்பதால், ராஜ்யசபாவில், இது குறித்து பேசுவதற்கு, அனைத்து கட்சிகளுக்கு இடையிலும், உடன்பாடு ஏற்பட்டது.

இதையடுத்து, பெண், எம்.பி.,க்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு, அனைத்து பெண், எம்.பி.,க்களும் பேச அனுமதிக்கப்பட்டனர். தி.மு.க., - எம்.பி., கனிமொழி பேசியதாவது:அம்மா, சகோதரி, மனைவி என, எங்கள் தியாகத்தை போற்றுவதை காட்டிலும், எங்களது சுய அடையாளத்திற்கு உரிய அங்கீகாரத்தை,

இந்த சமூகம் வழங்கினாலே போதும். போற்றுதல்கள், வாழ்த்து கள் எல்லாம் அவசியமில்லை; உரிமைகள் தான் எங்களுக்கு வேண்டும்.

கிராமப்புறங்களில், பெண் சிசு கொலை, வரதட்சணை, பாலியல் குற்றம், ஊட்டச்சத்து குறைபாடு என, நிறைய கொடுமைகள் இன்னும் தொடர்கின்றன. இதை தடுக்க வேண்டும்.மகளிர் மசோதாவை, எல்லா கட்சிகளுமே ஆதரிக்கின்றன. ஆனாலும், அந்த மசோதா, இன்னும் அந்தரத்தில் தொங்குவது, வெட்கக் கேடாக உள்ளது.இவ்வாறு அவர் பேசினார்.

தி.மு.க., - எம்.பி., சிவா பேசியதாவது: மகளிர் மசோதாவை நிறைவேற்ற வேண்டுமென்பதில், மறு கேள்விக்கே இடமில்லை. பெண்களை வாழ்த்துகிறோம்; போற்றுகிறோம்; எல்லாம் சரி.பெண்களுக்கு மிகவும் அத்தியாவசியமான, சானிடரி நாப்கினுக்கு, ஜி.எஸ்.டி., விதிக்கப்பட்டு உள்ளதை மறந்து விடுகிறோம். மகளிர் தினத்தை முன்னிட்டு, அந்த வரியை நீக்கம் செய்வதற்கு, மத்திய அரசு முன்வருமா...இவ்வாறு சிவா பேசியதும், சபையில் இருந்த ஒட்டுமொத்த, எம்.பி.,க்களும் மேஜையை தட்டி, ஆரவாரத்துடன் வரவேற்றனர்.

இதனால், சபையே அதிர்ந்தது. சபைத் தலைவர், வெங்கையா நாயுடுவும், ''மிகச் சரியான பரிந்துரை; வரவேற்கிறேன்,'' என, பாராட்டினார்.இந்த விவாதத்துக்கு பின்,

Advertisement

வேறு அலுவல்களை தொடர முற்பட்ட போது, எதிர்க்கட்சிகள் அமளியில் இறங்கவே, ராஜ்யசபா அடுத்தடுத்து ஒத்தி வைக்கப்பட்டது.

காட்சிகள் மாறவில்லை

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி, பார்லி., வளாகத்தில் உள்ள, காந்தி சிலை முன், அ.தி.மு.க., - எம்.பி.,க்கள் நேற்றும் ஆர்ப்பாட்டம் நடத்தினர். லோக்சபாவிலும், காலை முதலே அமளி நிலவியது. காங்கிரஸ், அ.தி.மு.க., திரிணமுல், தெலுங்கு தேசம் உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளுமே, தங்களது கோரிக்கைகளுக்காக குரல் கொடுத்தனர். அலுவல்களை மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டதால், சபை, நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டது.

- நமது டில்லி நிருபர் -


Advertisement

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...


வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
கோமாளி - erode,இந்தியா
09-மார்-201811:16:24 IST Report Abuse

கோமாளிசுற்றுச்சூழல் காரணங்களுக்காக

Rate this:
yaaro - chennai,இந்தியா
09-மார்-201809:51:08 IST Report Abuse

yaaroThese types of arguments only work for memes. In reality - small scale local napkin industries already enjoy no tax. Tax is only on branded napkins that middle class and upper middle class uses. If Tax is removed, then input credits have to removed also and the manufacturer will increase price accordingly to compensate for that. Not much benefit will be passed to consumer. This is the reality. But for some reason people actually think that memes are logical.

Rate this:
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
09-மார்-201809:04:01 IST Report Abuse

Srinivasan Kannaiyaஇதையெல்லாம் விவாதிக்க வெக்கமாக இல்லை...

Rate this:
ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா
09-மார்-201807:34:18 IST Report Abuse

ஆரூர் ரங்ஆண்டுக்கு ஒன்றரை பில்லியன் டாலர் நாப்கின் சந்தையை முழுமையாகக் கைப்பற்ற பன்னாட்டு நிறுவனங்கள் எப்படியெல்லாம் அரசியல்வாதிகளை விலை பேசிவிடுகின்றன பாருங்கள்?

Rate this:
ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா
09-மார்-201807:32:39 IST Report Abuse

ஆரூர் ரங்ப்ராக்டர் அண்ட் கேம்பில் ஜான்சன் அண்ட் ஜான்சன் போன்ற பன்னாட்டு நிறுவனங்களின் பயனாளி அரசியல்வாதிகள் சானிட்டரி நாப்கினுக்கு வரி கூடாது எனக்கூறுவது வியப்பில்லை இன்று வரை உள்ளூரில் மகளிர் சுயஉதவிக்குழுக்களாலேயே தயாரிக்கப்படும் நாப்கின்களுக்கு வரியேயில்லை ஏனெனில் அவர்களின் உற்பத்தி மதிப்பானது ஜி எஸ் டி வரி விதிக்குமளவுக்கு அதிகமல்ல. ஆனால் இந்த பன்னாட்டுநிறுவனங்களின் தயாரிப்புகளுக்கு வரிவிலக்களிப்பது மகளிர் சுயஉதவிக்குழுக்களை நம்பியிருக்கும் ஏழைப்பெண்களின் வயிற்றிலடிக்கும் செயல் (வாடிக்கைகையாளர்கள் உடனே பன்னாட்டு நிறுவன தயாரிப்ப்புகளுக்கு மாறிவிடுவரே )

Rate this:
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
09-மார்-201815:52:04 IST Report Abuse

தமிழ்வேல் gst வரி என்பது உள்நாட்டுவரி... சுங்கவரி என்று ஒன்று உள்ளது. இது உங்களுக்கு தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை. தேவை எனில் அதிலும் காசடிக்கலாம்....

Rate this:
K.Sugavanam - Salem,இந்தியா
09-மார்-201807:31:27 IST Report Abuse

K.Sugavanamஇந்த சானிட்டரி நேப்கின் விற்பனையிலும் வரி ஈட்ட நினைக்கும் மத்திய அரசின் கேவல நிலைப்பாட்டை எள்ளி நகையாடத்தான் தோன்றுகிறது...

Rate this:
ilicha vaay vivasaayi (sundararajan) - maduraikku therku pakuthi ,இந்தியா
09-மார்-201806:50:02 IST Report Abuse

ilicha vaay vivasaayi  (sundararajan)பூவம்மா அத ரெம்ப உபயோகப்படுத்துறாங்களோ ?

Rate this:
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
09-மார்-201815:52:39 IST Report Abuse

தமிழ்வேல் உங்க வீட்ல எப்புடி ?...

Rate this:
ilicha vaay vivasaayi (sundararajan) - maduraikku therku pakuthi ,இந்தியா
09-மார்-201806:25:04 IST Report Abuse

ilicha vaay vivasaayi  (sundararajan)அவை ஒத்தி வாய்ப்பு தவளைகள் போல பிணாத்திக் கொண்டே இருக்க வேண்டியது தான் . உருப்படியாக ஒன்றும் நடக்கப்போவது இல்லை

Rate this:
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
09-மார்-201804:30:19 IST Report Abuse

Kasimani Baskaranதியாகத்தின் மறு உருவம் பெண்கள்... ஆனால் அதற்க்கு நல்ல பல உதாரணங்கள் இருக்கத்தான் செய்கின்றன... கழிசடைகளை உதாரணமாக காட்டுவது கேவலம்...

Rate this:
N.Purushothaman - Kuala Lumpur,மலேஷியா
09-மார்-201804:28:31 IST Report Abuse

N.Purushothamanஅட லூசு பசங்களா ...நாப்கின்க்கு ஏன் GST விதிக்கப்படுகிறது என்பதற்கு அருண் ஜெயிட்லி மிக சிறப்பான விளக்கம் கொடுத்துள்ளார் ..சீன நாப்கினை தடை செய்யவும் உள்நாட்டில் குறைந்த விலையில் கிடைக்கவும் அந்த முடிவு எடுக்க பட்டு உள்ளதாகவும் அவரே கூறி உள்ளார் ...

Rate this:
மேலும் 1 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement