காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க எதிர்ப்பு Dinamalar

பொது செய்தி

இந்தியா

பதிவு செய்த நாள் :
காவிரி மேலாண்மை வாரியம்
அமைக்க எதிர்ப்பு

பெங்களூரு : முதல்வர் சித்தராமையா தலைமையில் நேற்று நடந்த அனைத்து கட்சி கூட்டத்தில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க, எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து, மறு சீராய்வு மனு தாக்கல் செயவதென, அனைத்து கட்சி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க எதிர்ப்பு


காவிரி நதி நீர் பங்கீடு தொடர்பாக, தீர்ப்பாயத்தின் தீர்ப்பை எதிர்த்து, மேல்முறையீடு செய்த வழக்கில், பிப்ரவரி 16ல், உச்ச நீதிமன்றம் இறுதி தீர்ப்பு வழங்கியது.அப்போது, ஆறு வாரங்களுக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டுமென்றும், 14.75 டி.எம்.சி., தண்ணீரை கர்நாடகா, கூடுதலாக பயன்படுத்தி கொள்ளலாம் என்றும் உத்தரவிட்டிருந்தது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக, காவிரி நதி நீரால் பயன் பெறும் தமிழகம், கர்நாடகா, கேரளா, புதுச்சேரி மாநில தலைமை செயலர்களுடன், மத்திய நீர்வளத்துறை செயலர் டில்லியில் இன்று ஆலோசனை நடத்துகிறார்.

இதில், கர்நாடகாவின் நிலைப்பாடு குறித்து விளக்க, முதல்வர் சித்தராமையா தலைமையில், பெங்களூரு விதான் சவுதாவில், நேற்று மாலை, 4:45 மணிக்கு அனைத்து கட்சி கூட்டம் துவங்கி, மாலை, 6:45 மணிக்கு நிறைவடைந்தது.

கூட்டத்தில், உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் சாதக, பாதகங்கள், காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது, மறு சீராய்வு மனு தாக்கல் செய்வது ஆகிய விஷயங்கள் விவாதிக்கப்பட்டது. மேலாண்மை வாரியம் அமைப்பதற்கு, பா.ஜ.,வும், ம.ஜ.த.,வும் எதிர்ப்பு தெரிவித்தன. அதே வேளையில், தீர்ப்பை எதிர்த்து மறு சீராய்வு மனு தாக்கல் செய்யும்படி, பா.ஜ., ஆலோசனை கூறியது.

Advertisement


கூட்டத்துக்கு பின், முதல்வர் சித்தராமையா கூறியதாவது: காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கு, எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. தீர்ப்பை எதிர்த்து மறு சீராய்வு மனு தாக்கல் செய்வதென, ஒரு மனதாக முடிவு செய்யப்பட்டது. இந்த இரண்டு விஷயங்கள் குறித்தும், நாரிமன் தலைமையிலான சட்ட வல்லுனர்களிடம் ஆலோசித்து, அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். இது தொடர்பாக, டில்லியில் நடக்கவுள்ள கூட்டத்தில், கர்நாடக அரசின் நிலைப்பாட்டை தெரிவிப்போம்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...


வாசகர் கருத்து (20)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ilicha vaay vivasaayi (sundararajan) - maduraikku therku pakuthi ,இந்தியா
10-மார்-201805:05:57 IST Report Abuse

ilicha vaay vivasaayi  (sundararajan)நீதி மன்ற தீர்ப்பை அமல் படுத்தாத கட்சிகள் அடுத்த தேர்தலில் போட்டியிடமுடியாது என்று அறிவிக்க வேண்டும் . மோடியும் சித்த ராமையாவும் கூந்தலைப் பிய்த்துக் கொள்ளட்டும் .

Rate this:
Manian - Chennai,இந்தியா
11-மார்-201803:54:09 IST Report Abuse

Manianஅது சரி தம்பி, அதை சட்டமாக போட எல்லா கட்சிகளும் ஒத்துழைக்குமா? மனப் பந்தல் சபைக்கு ஒத்தவதே. திருடங்கள் கையிலே ஆட்சி இருக்கும்போது என்ன செய்ய முடியும். ஆனால் நல்ல எண்ணம்தான்....

Rate this:
Matha, Jathi Saarpattra Thesapakthan - Ariyalur,இந்தியா
09-மார்-201817:04:14 IST Report Abuse

Matha, Jathi Saarpattra Thesapakthanநதிகள் இணைப்பு அப்புறம் இருக்கட்டும். முதலில் நதிகளை தேசிய மயமாக்குங்கள்

Rate this:
Matha, Jathi Saarpattra Thesapakthan - Ariyalur,இந்தியா
09-மார்-201817:02:06 IST Report Abuse

Matha, Jathi Saarpattra Thesapakthanதுரோக பிஜேபி. இதுக்கும் சில ஜென்மங்கள் வக்காலத்து வாங்கும்

Rate this:
Manian - Chennai,இந்தியா
11-மார்-201803:56:03 IST Report Abuse

Manianலஞ்சம் வாங்கி ஒட்டுப் போடும் 70 -8o % கிராம மக்களே துரோகிகள். அதுக்கு நீங்க இப்போ வாங்குற வக்காலத்து சரியா. அவர்களை திருத்த என்ன சமூக சேவை செய்திருக்கிறீர்கள்?...

Rate this:
Gopi - Chennai,இந்தியா
09-மார்-201813:43:04 IST Report Abuse

Gopiஇப்போ கன்னடா காரங்க பகுத்தறிவின் உச்சிக்கு போய்ட்டானுங்கோ. இதற்குமேல் மேல் முறையீடு இல்லை. வகுத்த கணக்கில் தண்ணீர் விடவேண்டும். 6 வாரத்தில் மேலாண்மை குழு அமைக்க படவேண்டும் என்று தெளிவாக கூறிய பின்னர், அறிவிலிகள் ஒன்று கூடி கும்மாளம் அடிக்கின்றனர். இது ஆகாது மகன்களே

Rate this:
murali - Chennai,இந்தியா
09-மார்-201812:14:42 IST Report Abuse

muraliகருணாநிதி, ஸ்டாலின், செல்வி, வை கோ, கே. டீ ப்ரொதேர்ஸ் போன்ற அரசியல் வாதிகள் தங்களுக்கு கர்நாடக மனதில் உள்ளன தொழில் மற்றும் சொத்துக்களை விற்றுவிட்டு தமிழகம் கொண்டுவரவேண்டும். தமிழகத்தின் தளபதி பட்டம் உள்ள தலைவர்கள் எல்லாம் கர்நாடகத்தின் மீது போர்தொடுக்கவேண்டும். செய்வர்களா.?

Rate this:
Manian - Chennai,இந்தியா
11-மார்-201803:58:47 IST Report Abuse

Manianமுறைஇ, தனி இன்று வரும், நாளை போகும். அதுக்கு மழையே பொருப்பு. கறக்குனா சேத்த லஞ்சக்காசு அப்படியா? இன்னொரு விஞ்ஜானக் கொள்ளையன் இனிமேல் தான் பொறக்கணும். அதுனாலே உணர்ச்சி வேறே, வருமானம் வேறே என்கிற சித்தாந்தமே கருணை அண்ட் கம்பெனியின் தீர்க்க தரிசனம்....

Rate this:
Manian - Chennai,இந்தியா
11-மார்-201804:02:03 IST Report Abuse

Manian"தேவையே கண்டுபிடிப்புகளின் தாய்" என்ற சொலவடை உண்டு. இதை நிரூபிக்கவில்லையா?...

Rate this:
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
09-மார்-201808:50:01 IST Report Abuse

Srinivasan Kannaiyaசித்தராமையாவுக்கு உள்ளுக்குள் இது சரி என்று பட்டாலும்... அரசியல் பண்ணணுமே.... அதற்காக எதிர்க்கிறார்,,,

Rate this:
pradeesh parthasarathy - Mylapore,இந்தியா
09-மார்-201813:01:51 IST Report Abuse

pradeesh parthasarathyஆம் . ... எல்லாம் அரசியல் ஆகிவிட்டது .... இல்லாவிட்டால் மிக சுலபமாக தீர வேண்டிய பிரச்சினை .......

Rate this:
ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா
09-மார்-201806:55:24 IST Report Abuse

ஆரூர் ரங்வேற்று அரசியலுக்குத்தான் மேலாண்மை வாரியம் பயன்படுமே தவிர ஒரே ஒரு சொட்டு நீர் கூட கிடைக்காது .ஒருவரை ஒருவர் திட்டி அரசியல் அரிப்பைதீர்த்துகொள்ளமட்டும் பயன்படும்

Rate this:
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
09-மார்-201804:20:22 IST Report Abuse

Kasimani Baskaranநீதிமன்ற தீர்ப்பையே குப்பையில் போடும் கர்நாடகா நடுவர் மன்றத்தை உறுதியாக மதிக்காது... திரும்பவும் நீதிமன்றத்துக்கே செல்லவேண்டும்... நீதிமன்றம் செயல்படும் வேகத்தில் விவசாயம் முழுவதுமாக அழிவதைத்தவிர வேறு வழியில்லை... (அ)நீதித்துறை நீண்டு நெடிய தூக்கத்தில் இருந்து விழிக்கவில்லை என்றால் ஆயிரம் மோடிகள் வந்தாலும் இந்தியாவை காப்பாற்ற முடியாது...

Rate this:
Mani . V - Singapore,சிங்கப்பூர்
09-மார்-201801:38:50 IST Report Abuse

Mani . Vஇந்த ஒற்றுமை தமிழ்நாட்டை அடகு வைக்கும் அரசியல்வாதிகளிடம் இல்லையே (அடகு வைப்பதிலும், கொள்ளையடிப்பதிலும் ஒற்றுமை ஓங்குகிறது).

Rate this:
கைப்புள்ள - nj,இந்தியா
09-மார்-201801:27:02 IST Report Abuse

கைப்புள்ளஇதெல்லாம் ஒன்னும் பண்ண முடியாதுங்க. இப்போ எல்லாம் புள்ளைங்க யாரு சொல்லி கேக்கிறாங்க? அதுவுமில்லாம ஒரு மேஜர் ஆன புள்ளய போயி நாம என்ன பண்ண முடியும்? அவுளுக்கு அதுதான் புடிச்சு இருக்குன்னா அப்புறம் அவ போய்தான் ஆவா. அவளை புடிச்சு நீ அத பண்ணாத இதை பண்ணாத அவனை கட்டிக்காத இவனை கட்டிக்காதன்னு சொன்னா அவ என்ன கேக்கவா போறா? அவளுக்கு புடிச்சு இருக்கு, அவ போய்ட்டா. இனி அவ விதி எப்படி இருக்கோ அப்படி ஆகட்டும்ன்னு விட்டுட்டு போயி வேலைய பாப்பீங்களா, அதைவிட்டுட்டு அவ மேல கேஸெல்லாம் போட்டுக்கிட்டு. இனி யாரு சொன்னாலும் அவ வரமாட்டா. போங்க போயி வேலைய பாருங்க.

Rate this:
Manian - Chennai,இந்தியா
11-மார்-201804:03:16 IST Report Abuse

Manianகாவிரியை ஒரு பெண்ணாக பார்க்கும் உங்கள் மனம் பொன்னானது கைப்புள்ளே....

Rate this:
மேலும் 4 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement